Saturday, August 1, 2020

ரவீந்தர் கௌஷிக்


இன்றும் இந்திய உளவுத்துறையில் இருப்பவர்களுக்கு இவர் தான் தங்களுடைய ஆதர்ஷ நாயகன்..இன்னும் சொல்லப்போனால் இன்று வரை இவரை மிஞ்சிய ஒரு spy இல்லை என்றே சொல்லலாம்..

நாடகங்களில் நடித்துகொண்டு இருந்த மனிதரை, அவருடைய திறமையை அடையாளம் கண்டு பிடித்து உளவுத்துறைக்கு கொண்டு வந்தது ரிசர்ச் அனலிசிஸ் விங் என்று சொல்லப்படும் ரா.....1975 ல் இவர் ரா வில் சேர்ந்தார்.. நிற்க.. இந்திய உளவுத்துறை கண்டு எடுத்த தலை சிறந்த உளவாளி...பாகிஸ்தான் ரானுவதிற்குள்ளேயே புகுந்து ஒரு முக்கிய பதவியும் அடைந்த மாமனிதர்.. இன்றும் இவரை பற்றி ரா வில் சேர விரும்பும் உளவாளிகள், இவருடைய அபரிமிதமான சாகசங்களை கேட்டு மெய் சிலிர்ப்பது நிஜம்.

தன்னுடைய 23 வது வயதில் ரா வினால் தேர்வு செய்யப்பட்டு, தெள்ள தெளிவாக உருது பாஷையை கற்றுக்கொண்டு, குரானை புரட்டி படித்து, சுன்னத் செய்து கொண்டு ரவீந்தர் கௌஷிக் என்கிற நபி அஹெமத் பெயருடன் ஒரு முழு இஸ்லாமியனாகவே மாறி, பாகிஸ்தானில் உள்ள இண்டு இடுக்கு எல்லாம் மனப்பாடம் செய்து, பாகிஸ்தானில் நுழைந்தார்.. இவர்  இந்தியன் என்று சம்பந்தப்பட்ட அத்துணை  ரகார்டுகளும் இங்கு இந்தியாவில் அழிக்கப்பட்டது.. ஒரு வேளை இந்த உளவாளிகள் மாட்டிகொண்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் கையை விரித்து விடும்.. இது உலகம் முழுதும் கடைபிடிக்க படும் நடவடிக்கை..

1975ல் பாகிஸ்தானில் சட்டக் கல்லூரியில் பட்டம் படிக்க அடியெடுத்து வைத்த இந்த மனிதருக்கு ராணுவத்தில் சேர அருமையான அடிகோலாக அமைந்தது..பாகிஸ்தானில் ராணுவத்தில் சேர்ந்த கொஞ்ச வருடங்களிலேயே மேஜர் பதவிக்கு வந்தார் என்றால் இந்த மனிதரின் அசாத்திய துணிச்சல் மற்றும் அறிவை என்னவென்று சொல்லி வியப்பது..?அமானத் என்கிற இஸ்லாமிய பெண்ணை திருமணமும் செய்து இஸ்லாத்தையும் தழுவி, ஒரு நிஜ பாகிஸ்தானியாகவே மாறி விட்டார்.. 

1975 முதல் 1983 வரை இந்திய ராணுவத்திற்கு தேவைப்பட்ட அத்துணை ரகசியங்களும் இவரால் பரிமாறப்பட்டன..அவை எல்லாம் கிடைத்த காரணத்தால் எண்ணில் அடங்காத நாசகார பாகிஸ்தானின் முயற்சிகள் இந்திய ராணுவத்தினரால் தடுக்கப்பட்டன..இவரின் அபார திறமையை கண்டு ராணுவத்தினர் மட்டும் என்றி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களும் மெய்சிலிர்த்தார். அவருக்கு இந்திரா காந்தி BLACK  TIGER  என்கிற பட்ட பெயரும் சூட்டினார்... 

இதற்கு நடுவில் இந்திய உளவு துறை அடுத்து இன்யத் மைஷா என்கிற ஒருவரை அதே பாகிஸ்தானுக்கு 1983ல் அனுப்பியது.. எப்படியோ தன்னுடைய ராணுவத்தில் ஒரு உளவாளி வந்துவிட்டதை தெரிந்து கொண்ட பாகிஸ்தான், இந்த மனிதரை பிடித்து விட்டது.. சும்மா விடுமா.. யார் உள்ளே புகுந்தார் என்று தெரிந்து கொள்ள இவரை சித்திரவதை செய்து விஷயத்தை கறக்க என்னன்னவோ செய்தது..கடைசியில் தெரிந்தும் கொண்டது.. 

இது நாள் வரை யார் ராணுவ மேஜர் ஆக இருந்தாரோ இவர் ஒரு இந்திய உளவுத்துறையின் ஆள் என்று தெரிந்த பாகிஸ்தான் ராணுவம் திகில் அடைந்து, அவரை 2 வருடங்கள்  சித்திரவதை செய்து, பின்னர்  சிறையில் அடைத்து, அவருக்கு தூக்கு தண்டனையும் நிறைவேற்ற முடிவு செய்தது.. இது நடந்த வருடம், 1985... ஆனால் கடைசியில் அவருடைய தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக பாகிஸ்தான் உச்ச நீதி மன்றத்தால் மாற்றப்பட்டது.

கௌஷிக் கிட்டத்தட்ட 16 வருடங்கள் தன்னுடைய தாய் நாட்டிற்காக பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்.. மிகவும் மோசமான அந்த சிறை வாசத்தால் அவருக்கு TB , ஆஸ்துமா வியாதிகள் தொற்றிக்கொண்டன..கடைசியில் மீளவே முடியாமல் வீர மரணத்தை முல்தானில் உள்ள மத்திய சிறையில் அடைந்தார்.. அங்கேயே அவரை புதைக்கவும் செய்தனர்..

இந்திய உளவுத்துறை இவரை போன்ற ஒரு மாவீரனை இன்று வரை கண்டெடுக்க வில்லை.. எந்த வித பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் தேசத்துக்காக தன்னுடைய உயிரை அர்ப்பணம் செய்த இவரை நினைத்து இன்றும் ரா அமைப்பினர் பெருமை படுவர்.. இவரை போன்றவர்கள் பொது மக்களால் அறியப்படுவது இல்லை.. முடியவும் முடியாது.. உளவின் சிறப்பே தன்னை யாரும் அறியக்கூடாது என்பது தான்..

போற்றுதலுக்கு உரிய இந்த மனிதரை வணங்குவோம்..

சல்மான் கான் நடித்து பெரும் அளவில் வெற்றி பெற்ற படம் ஏக் தா டைகர்.. இவரை மனதில் வைத்து தான் அந்த டைட்டில்..

Indian James bond

இஸ்ரேலின் டேவிட் கீம்சி, எலி கோஹன் என தேர்ந்த உளவாளிகள் சரித்திரம் வாசிப்போர் மனதை உறைய வைக்கும் ரகம் அவ்வளவு சாகசம் 

இன்னும் சில உளவாளிகள் அப்படி உலகில் உண்டு, பாரதத்தில் அந்த மிகசிலரில் இன்று உலகம் உற்று கவனிக்கும் ஒருவர் உண்டென்றால் அது #அஜித்தோவால்

இன்று அமெரிக்காவின் மைக் பாம்பியோ போல ஆசியாவில் சக்திமிக்க நபர் என உலகம் அவரைத்தான் நோக்குகின்றது

அவர் உத்தர்காண்ட் மாநில பிறப்பு, படித்ததெல்லாம் ராணுவபள்ளி அதை தொடர்ந்து ஐபிஎஸ் முடித்து கேரளாவில் 70களில் பணிதொடங்கினார். அவரின் தந்தையும் ஒரு ராணுவத்தார்

1975க்கு பின் அவரின் சாகச வாழ்வு தொடங்கிற்று, எம்.கே நாராயணனின் சீடர் அவர்

1980களில் உளவாளியாக மிசோரம் மாநில சக்திகளுக்குள் ஊடுருவி அவர்களை நம்ப வைத்து, பர்மாவில் இருந்த அவர்கள் வேர்வரை கண்டறிந்து இந்திய அரசுக்கு தெரியபடுத்தி தப்பி வந்ததெல்லாம் மாபெரும் சாசகம், அதுவும் அவர்களுக்கு தன் பிராமண மனைவியினை பன்றிகறி வைத்து நம்பவைத்த சாகசமெல்லாம் தனிரகம்

அந்த மிசோர் எனும் தீவிரவாத இயக்கத்தில் ஊடுருவி அவர்களை குழப்பி அடித்து அவர்களை ஒழித்து கட்டியது இன்று உளவுதுறை பாலபாடம்

சிக்கிமினை கைபற்ற அமெரிக்காவும் சீனாவும் பல நாடகங்களை நடத்தியபொழுது தேர்ந்த ராஜதந்திரியாக செயல்பட்டு அதை இந்தியாவோடு இணைத்தவர், இந்திரா அந்த சாகசத்தில் தோவலுக்கு பெரும் இடம் கொடுத்தார்

பொற்கோவில் ஆப்பரேஷன்களிலும் பஞ்சாபின் தீவிரவாதத்தை கட்டுபடுத்தியதிலும் அவருக்கு பங்கு இருந்தது,  இந்திரா அவரை பல ரகசிய ஆப்ரேஷன்களுக்கு பயன்படுத்தினார்

நமக்கெல்லாம் ஆப்பரேஷன் புளூஸ்டார் தெரியும், ஆப்பரேஷன் பிளாக் தண்டர் தெரியாது

அதாவது இந்திரா படுகொலைக்கு பின்னும் காலிஸ்தான் அடங்கவில்லை, 1986 மற்றும் 1988ல் பொற்கோவிலை கைபற்றி மறுபடியும் சவால் கொடுத்தார்கள், இந்திராவே இல்லா நிலையில் டெல்லி தலமை பீடம் அஞ்சியது

பொற்கோவிலுக்குள் என்ன நடக்கின்றது என தவியாய் ராணுவம் தவித்த நிலையில் களத்துக்கு வந்தார் தோவல்

ரிக்சாகாரன் வேடத்தில் சுற்றி காலிஸ்தான் இயக்கத்தில் தான் பாகிஸ்தான் உளவாளி என ஊடுருவி, அவர்கள் பஞ்சாப் கோவிலை முற்றுகையிட்டிருந்தபொழுது கோவிலுக்குள் சென்று உளவு பார்த்து இந்திய ராணுவத்துக்கு சொன்னதெல்லாம் மாபெரும் தேசிய சேவை, உள்ளே இருந்த 200 தீவிரவாதிகளை பார்த்து வந்தது அவர்தான்

அவர்களுக்கு நீரும் மின்சாரமும் கிடைக்கா வகையில் அவர்களை மடக்கி ஆப்ரேஷன் பிளாக் தண்டரை வெற்றிகரமாக நடத்தி கொடுத்தார், இந்தியா அவரை கொண்டாடியது, பாகிஸ்தான் வெறுப்பாக பார்த்தது

பின்னாளில் காலிஸ்தான் அவரை குறிவைத்து தேடியும் சிக்கவில்லை

பஞ்சாபுக்கு பின்பே காஷ்மீருக்கு வந்தார் தோவல், அங்கும் ஊடுருவி சில சில்லறை இயக்கங்களை நடத்தி பெரும் தகவலை கொண்டுவந்தார், இந்தியாவுக்கு காஷ்மீர் தீவிரவாதத்தை முழு வடிவமாக காட்டி கொடுத்தவர் அவரே

இன்னும் ஆழமாக உளவு பார்க்க பாகிஸ்தானில் 8 ஆண்டுகள் உளவாளியாக அவர் பணியாற்றியது இன்றும் பாகிஸ்தானியராலே ஜீரணிக்கமுடியா விஷயம்

ஆம் அவர் இஸ்லாமியராக மாறி, பாகிஸ்தானி பெண்ணையே மணமுடித்து மகா கில்லாடிதனமாக உளவுபார்த்து தகவல் சொன்னார்

ஆனாலும் காதில் இருந்த கம்மல் வடுவினை கண்டு சில பாகிஸ்தானியர் அவரை இந்து என அடையாளம் கண்டதும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றினார், பாகிஸ்தானின் உருது மொழியினை எல்லா ஸ்லாங்கிலும் பேசியது மகா ஆச்சரியம்

பாகிஸ்தானில் மாபெரும் உளவு வலையினை பின்னி வைத்தார் தோவல், அந்த வலை இன்றும் உண்டு, அஜித் தோவல் ஏற்படுத்தி வைத்ததே பலுசிஸ்தான் சிக்கல்

கிட்டதட்ட சிங்கம் பட சூர்யா போல பெரும் சாகசங்களை செய்தவர் அவர், அவராலே காலிஸ்தான் முதல் காஷ்மீரிய தீவிரவாதிகளின் விமானகடத்தல் பல முறியடிக்கபட்டன, பலமுறை தோற்று அவர்கள் கடைசியில் வென்ற இடம் காந்தகார் கடத்தல்

அது ஒன்றே தோவாலின் கரும்புள்ளி

அடிபட்ட சிங்கமாக அப்படியே ஓய்வுபெற்று 2005ல் குஜராத்தில் சில சேவைகளை செய்தபொழுதுதான் மோடி அஜித்தோவல் நட்பு உருவானது

இருவரும் நாட்டுபற்றை தவிர வேறு என்ன யோசிப்பார்கள், காலம் அவர்களுக்கு 2014ல் வாய்த்தது, தான் பிரதமரானதும் பாதுகாப்பு விஷயத்தில் தோவாலை தவிர  யாரிடமும் ஆலோசனை கேட்டதில்லை

நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரானார் தோவால்

அஜித்தோவாலின் வழிகாட்டலில்தான் இந்தியா காஷ்மீர் சிக்கலை தீர்த்தது, இன்னும் பல அதிரடிகளை செய்தது

நாட்டுக்காக உயிரை பணயம் வைத்து தான் செய்த மொத்த தியாகத்துக்கும் மதிப்பளித்து மோடி கொடுத்த வாய்ப்பினை இன்று மிக சிறப்பாக செய்கின்றார் தோவால்

ஒரு விஷயத்தில் நாம் மனம் நெகிழ்கின்றோம்

இன்று இத்தேசத்தின் நிஜபாதுகாப்பாளன் நாயகன் அஜித் தோவாலே, மோடி அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கின்றார், மோடி என்பது முகமூடி என்றாலும் மிகையாகாது

தோவாலால் பலம் பெற்றது தேசம், தோவாலால் தீர்க்கமுடியா சிக்கல்களை தீர்த்தது தேசம்

மக்கள் தனக்கு தந்த ஆதரவை அப்படியே தோவலுக்கு கொடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்த மோடியினை இந்த இடத்தில் வாழ்த்தியே தீரவேண்டும், அதில் அரசியல் இல்லை, வாக்கு அரசியல் இல்லை, புகழ் அரசியல் இல்லை

தேச நலன் ஒன்றே இலக்கு, இதனால்தான் மோடியினை நாம் வாழ்த்துகின்றோம்

அஜித் தோவாலின் சாதனைகளின் ஒரு துளியினைத்தான் நாம் சொன்னோம், இவை எல்லாம் சொற்பமாக வெளிவந்தவை, அஜித் தோவால் ரஷ்ய புட்டீன் போல தேர்ந்த உளவாளி என்பதால் பல கதைகள் வெளிவராது

ஆனால் 1980களில் இருந்து இத்தேசம் சாதித்த மாபெரும் பாதுகாப்பு மற்றும் உளவு விஷயங்களில் அவர் இருப்பார் அல்லது அவரின் நிழல் இருக்கும்

உளவாளியும் சாகசவீரனும் ஆட்சிக்கு வருவதெல்லாம் இஸ்ரேலில் மட்டும் சாத்தியம் என நினைத்த நிலையில் இந்தியாவில் அதை சாத்தியமாக்கினார் மோடி

ஜெய்சங்கர் , இந்த அஜித் தோவால் போன்ற மகா திறமையானவர்களை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்துகின்றார் மோடி

ஒரு காலம் வரும், அக்காலம் அந்த வரிசையில் இப்படி சொல்லும்

சாணக்கியன் சந்திர குப்தன் வரிசையில், வீரசிவாஜி காகபட்டர் வரிசையில், ஹரிகர புக்கர் வித்யாரண்யர் வரிசையில் மோடியும் அஜித்தோவாலும் நிச்சயம் வருவார்கள், வந்தே விட்டார்கள்

சுதந்திர் இந்தியாவின் ஒப்பற்ற உளவு தலைவனுக்கு, நாட்டுபற்று மிக்க சாகசகாரனுக்கு, உலமமகா ராஜதந்திர உளவாளிகளின்

கண்ணன் உலாவிய மண் எக்காலமும் தலைசிறந்த உளவாளிகளை கொடுக்கும் என நிரூபித்த அந்த அஜித் தோவாலுக்கு 

ஒரு நல்ல காவல் அதிகாரி எப்படி உளவாளியாக சாதிக்க முடியும் எப்படி எல்லாம் உயரமுடியும் என தன்வாழ்வினையே பாடமாக்கிய அந்த நாயகனுக்கு 

வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும் மரணத்தின் வாசலில் இருந்து, நெருப்பை கடந்து, விஷத்தை ஜீரணித்து நாட்டிற்காக வாழும் நாயகன் அவர்

ஆம், கவலையாய் அதை சொல்லத்தான் வேண்டியிருக்கின்றது

வடகிழக்கு குழுக்கள், காலிஸ்தான், காஷ்மீரிய குழுக்கள், பாகிஸ்தான், ஈழம், ஆப்கன் என எல்லா நாட்டு தீவிரவாதிகளும் அவர் உயிருக்கு குறி வைத்திருக்கின்றனர்

அதாவது இந்நாட்டுக்கு எதிரான சக்திகளை அவர் உடைத்தெறிந்ததால் அனைத்து தேசவிரோத கண்களும் அவரை வெறிபார்வை பார்த்துகொண்டே இருக்கின்றது

ஆனால் இத்தேசம் உயரவும் வாழவும் நிலைக்கவும் வழிநடத்தும் தர்மத்தின் சக்தி தோவாலை இதுகாலமும் காத்து வருகின்றது

ஆலகால விஷத்தில் இருந்து உயிர்களை காக்க சிவன் அதை உண்டானாம், அப்படி இத்தேசத்தின் விஷங்களை தன்னில் எடுத்து உயிராபத்தில் இருக்கும் பரமசிவன் நம் நாயகன்

கங்கையின் பாய்ச்சலை சிவன் தலை தவிர யார் தலையும் தாங்காதாம், அப்படி 1980களின் பிரிவினைவாத பாய்ச்சலை தனியாக தன் தலையில் வாங்கியவன் அவன்

ஆனால் தர்மசக்தி அவனை காத்து நிற்கின்றது, அது எக்காலமும் தாங்கும், காக்கும்

நாம் கிருஷ்ண பரமாத்மாவின் வடிவமாகவே அவனை காண்கின்றோம், இந்த கண்ணனுக்கு மோடி எக்காலமும் துணையிருக்கட்டும், மோடிக்கு தேசம் எக்காலமும் பலமாய் இருக்கட்டும்

இந்த தேசத்தின் மொத்த மனமும், வாழ்ந்த ஆத்மாக்களும், வல்ல தெய்வங்களும் மூல பரம்பொருளும் அவனை வாழ்த்துகின்றது

வாழ்க நீ எம்மான் தேசம் வலுவுற வாழ்வதற்கே

அற்புதமான அஜித் தோவல்


தேசப்பற்றாளர்களுக்கு, தேச நலன் ஒன்றே மிக மிக முக்கியமானது. அதற்காக அவர்கள் எந்த விலையையும் தர எப்போதும் தயாராக இருப்பார்கள். அஜித் தோவல் அப்படிப்பட்ட ஒருவர். 

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல்" என்றார் வள்ளுவர். அதாவது யாரிடம் எந்த பொறுப்பை தர வேண்டும் என்று ஆராய்ந்து அதை அவர்கள் வசம் முழுமையாக ஒப்படைத்தல் எனப் பொருள். 

நரேந்திர மோடி இந்த செயல்பாட்டில், மிகச்சிறந்தவராக திகழ்கிறார். நம் ராணுவத்தை உலகத் தரம் வாய்ந்ததாக உருவாக்க வேண்டும், சுயசார்பு கொண்டதாக மாற்ற வேண்டும் என்று தீர்மானித்த நிலையில், ஆட்சி பொறுப்பேற்ற வெகு சில நாட்களிலேயே தேசிய பாதுகாப்பு ஆலோசகராக தன்னுடைய நம்பிக்கைக்கு உரிய‌ அஜிஜ் தோவல் அவர்களை நியமிக்கிறார் மோடி. 

யார் இந்த அஜித் தோவல்...?

மிசோரம் மாநிலத்தில் 'மிசோ தேசியப் முன்னனி' எனும் தனி நாடு கேட்டு போராடும் தீவிரவாத இயக்கத்தின் அராஜகம் எல்லை மீறி சென்றுக் கொண்டிருந்தது. 

அஜித் தோவல், தன்னுடைய பின்புலத்தை மறைத்துக் கொண்டு அந்த தீவிரவாத படைகளில் சேர்ந்து, இந்திய ராணுவத்திற்காக ஒற்றனாக செயல்பட்டார். 

 "மிசோ நேஷனல் ஃப்ரண்ட்" எனப்படும் தீவிரவாதிகளோடு பணியாற்றுகிறார் அஜித் தோவல்.  அவர்களை அங்கிருக்கும் தன் வீட்டில் தங்க வைக்கிறார். 

தன் பிராமண மனைவியை அவர்களுக்கு பன்றிக்கறி (pork) சமைத்துப் போட சொல்கிறார். 

"யார் இவர்கள் ?" என கேட்கிறார் அவர் மனைவி. 

"ஒரு ஆப்பரேஷனுக்காக (திட்டத்திற்காக) என்னோடு பணிபுரியும் ஊழியர்கள் என்கிறார் அஜித் தோவல். 

உண்மையில் அவர்கள் 'லால்டெங்கா' எனப்படும் பயங்கர ஆயுதங்களை தங்களிடத்தே கொண்ட கொடூரமான மிஸோ கமேண்டோக்கள். 

அந்த பயங்கரவாதிகளிடம்,  'தான்' இந்திய தேசத்திற்கு எதிராக களம் இறங்கியிருக்கும் ஒரு தீவிரவாதி எனக் காட்டிக் கொள்கிறார் அஜித் தோவல்..., என்பது அவர் மனைவிக்கு தெரியாது.

பர்மாவின் 'அரக்கன்' பகுதியிலும், சீனாவிற்குள்ளும், அவர் யாரும் அறியாத வகையில் ஊடுறுவி அங்குள்ள நிலையை ஆராய்ந்து, இந்திய ராணுவத்திற்கு தகவல்கள் தெரிவித்து வந்தார். 

அதன் தொடர்ச்சியாக, மிசோ தேசிய முன்னனியில் இருந்த கமேண்டோக்களோடு நெருங்கிய நட்பை உருவாக்கி, அதனுள் பிளவுகளை உருவாக்கி, அந்த இயக்கத்தையே உருதெரியாமல் சிதைத்தார் அஜித் தோவல்.

தனி நாடாக இருந்த சிக்கிம் இந்தியாவோடு இணைய விருப்பம் தெரிவித்திருந்தது. 

இந்த இணைப்புக்கு சீனா பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால், கள ஆய்வு மேற்கொள்ள சிக்கிமிற்குள் ஒற்றனாக ஊடுறுவினார் அஜித் தோவல். 

சிக்கிம் இந்தியாவோடு வெற்றிகரமாக இணைக்கப்பட்டதற்கு இவரின் மதிநுட்பமும் மிக முக்கிய காரணி என்கிறார்கள் ராணுவ வல்லுனர்கள்.

1980 களில் காலிஸ்தான் எனும் பெயரில் சீக்கிய தீவிரவாதிகள் தனிநாடு கேட்டு வந்தனர். சீக்கிய கோயில் முழுவதும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. 

இதற்கிடையே பொற்கோயிலுக்குள் 1984இலும் அதன் தொடர்ச்சியாகவும் இரு முறை இந்திய ராணுவம் நுழைந்து தாக்குதல் தொடுத்திருந்தது. 

அந்த இரண்டு முறையும் பொது மக்கள் அதிகம் இருந்த நிலையில் உயிர்சேதம் அதிகமாகியது. 

இது உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, இந்திரா காந்தியின் படுகொலைக்கு வித்திட்டது. 

அதனால் 1988ல் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என தீர்மானித்திருந்தது இந்திய ராணுவம். 

“ஆப்பரேஷன் 'பிளாக் தண்டர்”

அஜித் தோவல்,  ஒரு ரிக்ஷா ஓட்டுபவர் போல் நடித்து பொற் கோயிலுக்குள் ஊடுறுவினார். 

புதிய நபரான அஜித் தோவல் பொற்கோயில் வளாகத்தில் திரிவது காலிஸ்தான் பயங்கரவாதிகள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியது. 

அவரை பிடித்து அவர்கள் விசாரித்த நிலையில், தான் ஒரு பாகிஸ்தானிய ஒற்றன் என்றும் காலிஸ்தான் இயக்கத்திற்கு தனி நாடு அமைக்க‌ உதவுவதற்காக பாகிஸ்தானால் அனுப்பப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

அஜித் தோவல் பொற் கோயிலுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை இந்திய ராணுவத்திற்கு தகவல் தந்த வண்ணம் இருந்தார். 

வெறும் நாற்பது பேரே பொற்கோயிலுக்குள் இருப்பார்கள் என இந்திய ராணுவம் கணித்திருந்த நிலையில் அஜித் தோவல், இருநூறு பேருக்கு மேல் உள்ளே உள்ளார்கள் என்பதை கண்டறிந்து, தாக்குதலை கைவிடுமாறும், பொற்கோயில் வளாகத்துக்குள் தேவையான மின்சாரத்தையும், தண்ணீர் இணைப்பையும் துண்டிக்குமாறும் அறிவுறுத்தினார். 

விளைவு..?

கொதிக்கும் கோடையில் தண்ணீர், மின்சாரம் இல்லாமல் வெறும் ஒன்பதே நாட்களில் உள்ளே இருந்த தீவிரவாதிகள் அனைவரும் சரண‌டைந்தார்கள். 

கத்தியின்றி ரத்தமின்றி ஆப்பரேஷன் 'பிளாக் தண்டர்' வெற்றி பெற்றது, காலிஸ்தான் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழித்தார் அஜித் கோயல். 

'கரன் கர்ப்' எனும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அஜித் தோவலின் இந்த பங்களிப்பை குறித்து மாய்ந்து மாய்ந்து விவரிக்கிறார். 

அவர் ஒரு 'அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கர்' (எதையும் வித்யாசமாக யோசிப்பவர்) என்று அஜித் தோவலை புகழ்கிறார் 'கரன் கர்ப்'.

அடுத்து தோவலுக்கு காஷ்மீர் பிரச்சனையில் முக்கிய பணி தரப்பட்டது. 

காஷ்மீருக்குள் சென்ற தோவல், அங்கு 'ஜம்மு காஷ்மீர் அவாமி லீக்' எனும் பெயரில் இயங்கிக் கொண்டிருந்த 'குக்கா பரே எனும் 'முகம்மது யூசுஃப்'போடு தொடர்பை ஏற்படுத்தி, அவரை நல்வழிப்படுத்தி, காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு எதிராக அவரை இயங்க செய்தார். 

இதன் மூலம் காஷ்மீர் தீவிரவாதிகள் தொடர்பான பல முக்கிய தகவல்கள் பெறப்பட்டன. காஷ்மீர் தேர்தலை அமைதியாக நடத்திட முடிந்தது. 

காஷ்மீர் தீவிரவாதிகளால் 2003ல் குக்கா பரே சுட்டுக் கொல்லப்படும் வரை, தீவிரவாதத்திற்கு பெரும் முட்டுக் கட்டையாக இருந்தது குக்கா பரே-வின் இயக்கம். 

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, அஜித் தோவல், பாகிஸ்தானுக்குள் ஒன்றனாக ஏழு வருடங்கள் ஊடுறுவியதைதான் குறிப்பிட வேண்டும்...!! 

இந்திய பாதுகாப்பு ஆலோசனை குழு, அஜித் தோவலை ஒரு மிக ரகசிய திட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் லாகூருக்கு ரகசிய புலனாய்வு செய்ய‌ அனுப்பி வைக்கிறது. 

அங்கே கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் தங்கி தன் பணியை சிறப்பாக செய்கிறார் அஜித் தோவல். 

யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக இஸ்லாத்துக்கு மதம் மாறுகிறார் தோவல். (ஒரு இஸ்லாமிய பெண்னை மனம் முடித்ததாகவும் சிலர் சொல்கிறார்கள்) 

ஒரு முறை லாகூரில் உள்ள ஒரு மசூதியில் தொழுகை முடித்து வரும் அஜித் தோவலிடம், ஒரு நரைத்த தாடி கொண்ட‌ பெரியவர் "நீங்கள் ஒரு இந்து..?" என்று கிசுகிசுக்கிறார். 

அஜித் தோவல் திகைத்து போனாலும், அதை முகத்தில் வெளிப்படுத்தாமல் "இல்லை" என‌ மறுக்கிறார். 

அவரை தைரியத்தோடு பின் தொடர்ந்து சென்று, ஐந்து தெரு தள்ளி உள்ள குறுக்கு சந்தில் உள்ள அவரின் அறைக்கு செல்கிறார் அஜித் தோவல். 

அவரை உள்ளே அழைக்கும் அந்த பெரியவர், "நீங்கள் இந்துதான், உங்கள் காதில் உள்ள கடுக்கண் வடு அதை காட்டிக் கொடுக்கிறது" என்கிறார். 

அஜித் தோவலோ அலட்டிக் கொள்ளாமல், "நான் முன்பு இந்துவாக இருந்தேன் தற்போது இஸ்லாத்துக்கு மதம் மாறி விட்டேன்" எனக் கூறுகிறார். 

அந்த பெரியவரோ, "நானும் இந்துவாகதான் இருந்தேன், தற்போது என்னால் இங்கு ஒரு இந்துவாக‌ பாதுகாப்பாக இருக்க இயலவில்லை என்பதால், வெளிபுறத்திற்காக முஸ்லீமாக காட்டிக் கொள்கிறேன்" என்கிறார். 

அவர் தன் அலமாரியை திறந்து அதில் தான் பூஜிக்கும் சிவ லிங்கத்தையும், சுவாமி படங்களையும் காட்டுகிறார். 

இதை பின்னாளில் நினைவு கூறும் அஜித் தோவல் "அந்த பெரியவரின் சந்திப்பு மறக்க முடியாதது" என்கிறார். 

அதற்கு பின் 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து தன் காதில் இருக்கும் வடு வெளியே தெரியாமல் மறைத்ததாக பின்நாட்களில் குறிப்பிடுகிறார் தோவல். 

பாகிஸ்தானில் உருது மொழியை பலவிதமான‌ பிரந்திய பேச்சு மொழிகளில் பேசும் நுட்பத்தை அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் அஜித் தோவல் பல விதங்களில் இந்திய தேசத்திற்காக பாடுபடுகிறார். 

பலுச்சிஸ்தான் போராளிகளுக்காக ஒரு களத்தை ஏற்படுத்தி, அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தருவது, 

இந்திய "ரா" பிரிவுக்கு தேவையான ஏஜண்டுகளை பாகிஸ்தானில் ரகசியமாக நியமிப்பது. 

தாவுத் இப்ராகிம் குறித்து தகவல்களை சேகரிப்பது, 

பாகிஸ்தானிய 'ஐ எஸ் ஐ' குறித்தும், பாகிஸ்தானிய ராணுவத்தின் திட்டங்கள் குறித்தும் பல தகவல்களை சேகரிப்பது 

- என தன் உயிரை பணயம் வைத்து பணியாற்றுகிறார் அஜித் தோவல். 

பலூசிஸ்தான் பிரச்சனை பாகிஸ்தானுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது என்றால், அதற்கு அஜித் தோவலின் பங்களிப்பு இன்றியமையாதது.

பாகிஸ்தானில் இருந்து திரும்பிய பின் மீண்டும் பல விதங்களில் தேசத்திற்காக தன் அரும்பணிகளை தொடர்கிறார் அஜித் தோவல். 

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 'கர்வாலி' எனப்படும் பிராமண குடும்பத்தில் ஜனவரி 1945ல் பிறந்தார் 'அஜித் தோவல்'. தந்தை ஒரு ராணுவ அதிகாரி. 

அஜ்மீர் ராணுவ கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து, பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பை ஆக்ரா பல்கலைகழகத்தில் முடித்தார். 

1968ல் கேரளத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக உருவாகினார். மூன்றாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த 'எம்.கே.நாராயணன்' அவர்களிடம் தீவிரவாத தடுப்பு பயிற்சியை பெற்றார். 

அதன் பின் பல விமான கடத்தல் சம்பவங்களில் பயங்கரவாதிகளோடு சமரசம் பேசுவதிலும், பண‌ய‌க் கைதிகளை மீட்பதிலும் மதி நுட்பத்தோடு வெற்றிகரமாக செயல்பட்டார்.

2005ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்த அஜித் தோவல், டிசம்பர் 2009ல் விவேகானந்தா இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் எனும் அமைப்பை ஏற்படுத்தி, தன் தேசிய மற்றும் இந்து தர்ம‌ சேவைகளை தொடர்கிறார்.

குஜராத் முக்கிய மந்திரியாக இருக்கையிலேயே அஜித் தோவலோடு நெருங்கிய தொடர்பை வைத்திருந்தார் நரேந்திர மோடி. 

2014ல் சரித்திர தலைவர் மோடி அவர்களின் ஆட்சி அமைந்திட, அஜித் தோவலை இந்தியாவின் ஐந்தாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கிறார் மோடி. 

நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் அஜித் தோவலை கேட்காமல் பிரதமர் எதுவுமே செய்வதில்லை என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். 

மோடி அரசு பிறகு ஈராக்கில் செவிலியர் பெண்கள் 46 பேர் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட‌ விவகாரம் ஆகட்டும், 

மோடி அவர்கள் பாகிஸ்தான் மீது தொடுத்த துல்லிய தாக்குதல் ஆகட்டும், 

அஜித் தோவலின் பங்கு அவற்றில் இன்றியமையாதது. 

சொல்லப் போனால் அஜித் தோவல் தன்னுடைய பல சாகசங்களை, அனுபவங்களை, வெளியே சொல்லவில்லை. 

அவரை குறித்து நாம் அறிந்த பலவும் பெரும்பாலும் மற்றவர்கள் மூலமாகதான். 

அஜித் தோவல் போன்ற ஒப்பற்ற தேசபக்தர்கள் இருக்கும் வரை இந்த தேசத்தை யாராலும் அசைக்க முடியாது என்பதில் சந்தேகமே இல்லை.

ஜெய் மோடி சர்க்கார்..!
பாரத் மாதா கி ஜெய்..!

5000 சீன வீரர்களை எதிர்த்து நின்ற 120 இந்திய வீரர்கள்


1962 போரில் ரேசங் லா என்னுமிடத்தில் இந்திய போஸ்டை குமாஒன் ரெஜிமென்டை சேர்ந்த வெறும் 120 வீரர்கள் காவல் காத்து நின்றனர்.1962 போரில் லடாக்கில் உள்ள ரேசங் லா என்னுமிடத்தை குமாஒன் ரெஜிமென்ட்டை சேர்ந்த வீரர்கள் 121 பேர் மேஜர் சைதான் சிங் தலைமையில் காவல் காத்திருந்தனர்.

 
சீனப்படை பெரிய அளிவிலான ஆயுதங்கள் (7.62 மிமீ தானியங்கி ரைபிள்கள் ; நடுத்தர மற்றும் இலகுரக இயந்திர துப்பாக்கிகள்; 120மிமீ , 81மிமீ மற்றும் 60மிமீ மோர்ட்டார்கள் ; 132மிமீ ராக்கெட்டுகள்; மற்றும் 75மிமீ மற்றும் 57மிமீ ரீகாய்லெஸ் துப்பாக்கிகள் )கொண்டு இந்திய நிலையை தாக்கி ரேசங் லாவை கைப்பற்ற முன்னேறிக் கொண்டிருந்தனர்.

5000 சீன வீரர்கள் ஆர்ட்டில்லரி மற்றும் பெரிய மெசின் துப்பாக்கிகளுடன் அலை அலையாய் அந்த போஸ்டைதாக்க தொடங்கினர். மேஜர் சைதான் இராணுவத்திடம் மேலதிக படைகளை அனுப்ப கோரினார் மேலும் தோட்டாக்கள் வழங்க கோரினார்.அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவரை பின்வாங்க சொல்லியது இராணுவம்.ஆனால் மேஜர் மறுத்தார்.இத்தனை வருடங்கள் எதைப் பாதுகாக்க இங்கு இருந்தோமோ அதைக் காப்பாற்றாமல் இங்கிருந்து வரமாட்டோம்.எங்களுக்கு உணவளித்த ரேசங் லாவை எதிரிகள் கைப்பற்ற விடமாட்டோம் என கூறினார்.தனது சக வீரர்களிடமும் கூறினார்.

பெரும் அலையாய் திரண்டு வந்த சீ்னர்களை எதிர்க்க தயாரானது நமது சிறு படை.மேஜர் சைதான் சிங் தனது வீரர்களிடம் யாரும்சீனர்களை தொலைவில் வரும் போது தாக்க வேண்டாம்.அவர்கள் பக்கத்தில் வரும் போது தாக்குங்கள் அப்போது தான் தோட்டாக்கள் வீணாகாமல் சீனர்களை தாக்கும் என்றார்.

 
நம் வீரர்களிடம் ஆர்ட்டில்லரி உதவி இல்லை.ஏன் சொல்லிக்கொள்ளும் படி ஒரு இயந்திர துப்பாக்கி கூட இல்லை.சில துப்பாக்கிகள் மற்றும் சிறிய வகை இயந்திர துப்பாக்கிகள் உதவியுடன் சீனப் படையை எதிர்க்க தொடங்கினர்.

முதல் அலை சீன வீரர்களை எதிர்த்து நின்று போராடினர்.சீனாவிற்கு இழப்பு. சீனர்கள் குழம்பினார்கள்.நமது கணிப்பு தவறாகிப்போனது எனவும்,கிட்டத்தட்ட 5000 இந்திய வீரர்கள் இருப்பது போல தெரிகிறது என தலைமையிடத்தில் புலம்பினார்கள்.மீண்டும் மேலதிகப் படை மற்றும் ஆயுதங்களுடன் தாக்கினர்.

இரண்டாவது அலையாக அடுத்த குழு தாக்க தொடங்கியது.இப்போதும் அவர்களுக்கு இழப்பு

 
மூன்றாவது குழு இந்திய நிலையை தாக்க தொடங்கிய போது இந்திய வீரர்களிடம் இருந்த தோட்டாக்கள் முடிவடைந்திருந்து.பின் வெறும் கைகளாலேயே சீன வீரர்களை தாக்க தொடங்கினர்.ஹரியாணாவைச் ராம் சிங் மற்றும் குலாப் சிங் ஆகிய இரு வீரர்களிடம் தோட்டாக்கள் முடிவடைந்திருந்தது.கையில் இருந்த கத்தியை எடுத்து சீனர்களை வெறும் கைகளால் தாக்க தொடங்கினர்.சீனர்களின் தொண்டைகள் கிழிக்கப்பட்டன.

இந்த ரேசங் லா போரில் கிட்டத்தட்ட 1300 சீன வீரர்களை கொன்று குவித்தனர் நம் வீரர்கள். நம் 121 வீரர்களில் 109 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

போரில் தலைமை தாங்கிய வீரர் மேஜர் சைதான் சிங் அவர்களின் உடல் தோட்டாக்கள் துளைத்து உயிரற்று கிடந்தது.அவர் சீன வீரர் ஒருவரின் இயந்திரத் துப்பாக்கியை பறித்து சீனர்களை நோக்கி சுட்டிருந்தார்.உயிர் பிரிந்த பின்பும் துப்பாக்கி ட்ரிகரை அழுத்திய படியே கிடந்தார்.பாருங்கள் எவ்வளவு வீ்ரம் என்று!!!

மேஜர் சைதான் சிங்
இதையல்லவா நாம் பாடப் புத்தகத்தில் கற்றிருக்க வேண்டும்.போரில் வென்ற வெளிநாட்டவர்கள் பற்றி படிக்கிறோமே தவிர நாட்டுக்காக உயிரை துறந்த நமது வீரர்களின் வீரங்கள் பற்றி நமது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை.

அந்த 121 வீரர்களால் தான் இன்று லடாக் இந்தியாவில் உள்ளது.நம்மிடம் போதிய ஆயுதம் இல்லை நாம் வீழ்வோம்,நாம் கொல்லப்படூவோம் என்ற எந்த பயமும் இன்றி மோதிப்பார்ப்போம் என நெஞ்சை நிமிர்த்தி நின்றார்களே அவர்கள் தான் இந்த மண்ணில் மைந்தர்கள்.

இன்று பல பேர் கூறுவது என்ன??

சீனர்கள் நிறைய ஆயுதம் வைத்துள்ளனர்.நாம் போரிட்டால் நமக்கு இழப்பு தான் என எதிர்மறையாக பேசுகின்றர்.அன்றும் இதே தான்.அந்த வீரர்கள் பின்வாங்கியிருந்தால் இன்று லடாக் அவர்கள் வசம் தானே..அவன் ஆயுதம் வைத்திருக்கிறான் என தெரிந்து வெறும் கைகலால் போரிட்டு நம்மை காப்பாற்றியிருக்கிறார்கள்.

 
போரில் சிறப்பாக செயல்பட்டமைக்காக கம்பெனி கமாண்டர் மேஜர் சைதான் சிங் அவர்களுக்கு பரம் வீர் சக்ரா விருதளிக்கப்பட்டது

அந்த 121 வீரர்களுக்கு நாம் வீரவணக்கம் செலுத்துவோம்

இந்திய எல்லையைக் காத்த தனிஒருவன்


15 நவம்பர் 1962. இந்தோ – சீனப் போர் முடியும் தருணம். இந்திய ராணுவம் தொழில்நுட்ப ரீதியாகவும், மனதளவிலும் தளர்ந்து இருந்த நேரம். இந்திய அரசு படைகளைத் திரும்ப அழைத்துக் கொண்டிருந்த சமயம். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருக்கும் அனைத்து, எல்லைக் கோடுகளில் இருந்தும் இந்திய ராணுவ வீரர்கள் துவண்டு போய், தலையைத் தொங்க போட்டுக் கொண்டு, தேசத்தின் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் தங்கள் தலைமையகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அடிபட்ட வீரர்கள் சிகிச்சை பெற மறுத்துக் கொண்டிருந்தார்கள். என் தேசம், எதிரி நாட்டிடம் கையேந்துகிறதே என வருத்தத்தில் வெம்பிக் கொண்டிருந்தார்கள். கர்வால் ரைஃபல்ஸ் (Garhwal Rifles) படைப் பிரிவைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங் ராவத் #jaswantsingrawat, திரிலோக் சிங் நேகி, கோபால் சிங் ஆகிய மூவரும் மற்ற ராணுவ வீரர்களுக்கு மாறாக முடிவெடுத்தார்கள்.

ஜஸ்வந்த் சிங் ராவத், அருணாச்சலப் பிரதேசத்தின் நூர்னாங் (Nauranang) பகுதியில் (இன்று தவாங் பகுதியில் இருக்கிறது), சீன ராணுவத்தினர்களின் மீது, தன் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 21. அவரோடு, திரிலோக் சிங் நேகி, கோபால் சிங் போன்றவர்களும் போராடிக் கொண்டிருந்தார்கள். 

சீனா, அன்றைய தேதியில் மீடியம் மிஷின் கன் ரக துப்பாக்கிகள், ஆர்டிலரிகள் (பீரங்கி ரக துப்பாக்கிகள்), மார்டர் ரக துப்பாக்கிகளை வைத்து அசால்டாக முன்னேறிக் கொண்டிருந்தது. நூர்னாங்கை பாதுகாத்துக் கொண்டிருந்த ஜஸ்வந்த், கோபால் மற்றும் திரிலோக்கிடம் இருந்தது வெறும் லைட் மிஷின் கன் ரக துப்பாக்கிகள் மட்டுமே. போர் சூழல் சீனாவுக்கு சாதகமாக எளிதில் மாறிக் கொண்டிருந்ததை, இந்த மூவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மூன்று பேரும் போர்க்களத்தில், அதுவும் வலிமையான ராணுவத்துக்கு எதிராக, ஒரு அதிரடி முடிவெடுத்தார்கள். சீன ராணுவத்திடமிருந்து மீடியம் மிஷின் கன் (MMG) ரக துப்பாக்கிகளை கைப்பற்றி அவர்களையே தாக்குவதுதான் திட்டம். இந்த ஆபத்தான வேலையை அடுத்த நொடியிலேயே செயலாக்கத் தொடங்கினார்கள். திரிலோக் சீன ராணுவத்தினரை ஜஸ்வந்த் மற்றும் கோபாலின் அருகில் கூட வராத முடியாதபடி தோட்டாக்களைத் தெறிக்கவிட்டார். ஜஸ்வந்தும், கோபாலும் கையில் கிடைத்த ஹேண்ட் க்ரேனைட்கள், எம்.எம்.ஜி ரக துப்பாக்கிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு, பின் புறமாக முதுகினாலாயே தவழ்ந்து (CRawl) இந்திய எல்லைகளுக்குள் வந்தார்கள். இவர்கள் இந்திய எல்லைகளைக் கடப்பதற்கும் திரிலோகை சீனர்கள் சாய்ப்பதற்கும் சரியாக இருந்தது. திரிலோக் சாய்ந்து விழுவதற்குள் அடுத்தடுத்த குண்டுகள் கோபால் சிங்கை துளைத்தது, அதோடு ஜஸ்வந்தையும் சில குண்டுகள் பதம் பார்த்தன.
 
இப்போது ஜஸ்வந்த் சிங் ராவத் ஒற்றை ஆளாக இந்தோ – சீனத்தின் எல்லைப் பகுதியை காக்கிறார். கடல் மட்டத்தில் இருந்து சுமாராக 10,000 அடியில் இருக்கும் நூர்னாங்கில் அப்போது கடுங்குளிர். எலும்பு விரைக்கிறது. இரவு நேரத்தில் சீனர்களும் போரை நிறுத்துகிறார்கள். ஆனால் ஜஸ்வந்த் மனம் முழுவதும் சீனர்களை விரட்டுவதிலேயே இருக்கிறது. போரை நான் நடத்தலாம், ஆனால் சின்ன சின்ன உதவிகளை செய்ய ஆட்கள் தேவை என்று, கிராமத்திற்குள் சென்று உதவி கேட்க, நுரா & சிலா என்று இரண்டு பெண்கள் உதவிக்கு வருகிறார்கள்.

இரவோடு இரவாக தாக்குதலை மனதில் வைத்து, கச்சிதமான வியூகம் அமைத்து, பல பதுங்கு குழிகளில் துப்பாக்கிகளை பொருத்துகிறார். அதிகாலை 5 மணிக்கு எல்லாம் துப்பாக்கி சப்தம் கேட்கத் தொடங்குகிறது. “வாடா இதுக்குத்தான் காத்துக்கிட்டிருந்தேன்” என்கிற ரீதியில் பொருத்திய துப்பாக்கிகளை புன்னகையோடு, லாகவமாக, நிதானமாக தன்னிடம் இருக்கும் குண்டுகளை கணக்கிட்டு குறிவைத்து சீனர்களைத் துளைக்கிறார். இப்படி இந்திய எல்லைகளை சரியான பின்புலம், உணவு, தூக்கம் இல்லாமல் 72 மணி நேரம் காக்கிறார். 

முதல் 8 மணி நேரத்திலேயே சீனர்களுக்கு குழப்பம் தொற்றிக் கொள்கிறது. நேற்றுவரை பதுங்கிய இந்திய ராணுவம், இன்று எப்படி இவ்வளவு பரவலாக, வலுவாக தாக்குகிறார்கள் என்று. இந்திய ராணுவம், தன் படையில் பெரும்பகுதியை அனுப்பி தங்களை தாக்குவதாக சீனர்கள் முடிவுக்கு வந்தனர். சுமார் 72 மணி நேர முடிவில் 300 சீன ராணுவத்தினர் உயிர் பிரிந்திருந்தது. வெறுப்பின் உச்சத்தில் இருந்த சீனர்களின் கையில், ஜஸ்வந்த் சிங்குக்கு உணவுப் பொருட்களை கொண்டு வரும், கிராமவாசி பிடிபட, அதே ராணுவ முறையில் விசாரணை நடக்கிறது. ரகசியம் உடைகிறது. ஜஸ்வந்தின் வியூகத்தை புரிந்து கொண்டு சீனர்கள் ஜஸ்வந்தை சூழ்கிறார்கள். சூழ்நிலையை புரிந்து கொண்ட ஜஸ்வந்த், தன் கைத் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை தானே சுவைத்தார்.  ஜஸ்வந்துக்கு உதவிய செலா ஒரு க்ரானைட் தாக்குதலால் கொல்லப்பட்டார்.  நுரா சீன ராணுவத்திடம் உயிருடன் பிடிபட்டார்.

சீனர்களுக்கு வெறி அடங்கவில்லை. “இந்த பொடிப் பயலா, 72 மணி நேரம் தண்ணி காட்டுனான் “என்று கோபம் கொப்பளிக்க… ஜஸ்வந்தின் தலையைத் துண்டித்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்தங்கள் வெளியான பிறகு சீன ராணுவ அதிகாரிக்கு விஷயம் தெரியவர, ஜஸ்வந்தை நினைத்துப் பெருமைப்படுகிறார். அவர் வீரத்தை கெளரவிக்கும் விதத்தில், ஜஸ்வந்தின் வெண்கல் சிலையை அவர் காவல் காத்த நூர்னாங்கில் நிறுவினார்கள் சீனர்கள். இன்று அந்த இடத்திற்கு ஜஸ்வந்த் கர் (Jaswant Garh) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இன்று, அந்த இடத்தில், உண்மையாகவே ஜஸ்வந்த் ஒரு ராணுவ உயர் அதிகாரியாக இருந்தால் எப்படிப்பட்ட சேவை மற்றும் செளகரியங்கள் செய்வார்களோ அப்படிப்பட்ட சேவைகளை செய்து வருகிறார்கள் இந்திய ராணுவத்தினர். தினமும் ஜஸ்வந்த் உடுத்த சுத்தமான, ராணுவ விரைப்பிலேயே இஸ்திரி செய்த மிடுக்கான உடைகள், பளபளக்கும் ஷூக்கள், அவருடைய துப்பாக்கிகள் என்று அனைத்தையும் தினமும் காலை சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்கிறார்கள். இப்படித் தான் பாரத தாயின் வீரப் புதல்வனுக்கு தினமும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

சீன போர் முடிந்த பின், கோபால் சிங் மற்றும் திரிலோக் சிங் நேகிக்கு வீர் சக்ரா விருதும், ஜஸ்வந்த் சிங் ராவத்துக்கு மஹா வீர் சக்ரா விருதும், பதக்கமும் வழங்கி இந்திய அரசு தன் வீர மகன்களை கெளரவித்துக் கண்ணீர் சிந்தியது.  இன்று வரை தவாங் நகருக்கு செல்லும் அனைத்து ராணுவ வீரர்களும், ஜெனரல் தொடங்கி ஜவான் வரை அனைவரும் தங்கள் வீர வணக்கத்தை ஜஸ்வந்துக்கு செலுத்திவிட்டு தான் கடக்கிறார்கள். இன்றும் ஜஸ்வந்த் சிங் ராவத் பயன்படுத்தி பொருட்கள், துப்பாக்கிகள், பெயர் பலகை, ராணுவ சீருடைகள், பதவியை பிரதிபலிக்கும் ஸ்டார்கள் எல்லாம், ஜஸ்வந்த் கர்ரில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
 
ஜஸ்வந்தின் சிங் ராவத் பெயரைக் கேட்கும் போதெல்லாம், ‛மொத்த இந்திய தேசத்தை ஒற்றை ஆளாகக் காத்தவர்’ என்கிற பெருமிதமும், கண்ணீரும் ஏனோ வந்துவிடுகிறது. ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்,

ஜெய்ஹிந்த்…!

இந்திய இராணுவத்தை இந்தியர்களுக்காக மாற்றிய பீல்டு மார்சல்


இந்திய இராணுவத்தில் அதிக விருதுகள் பெற்ற தளபதிகளுள் ஒருவர்.இடையிலா தேசப் பக்தியுடன் சுடராய் விளங்கியவர்

 
கொடன்டேரா மடப்பா கரியப்பா நிறைய சாதனைகள் செய்திருந்தாலும் இந்திய இராணுவத்தை முழுதும் இந்தியத்திற்கு மாற்றியது அவரது முக்கிய சாதனைகளுள் ஒன்றாக உள்ளது.இதனால் தான் இன்று இந்திய தளபதி தலைமை தளபதியாக உள்ள பிபின் ராவத் அவர்கள் கரியப்பா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க நேரம் வந்துள்ளதாக கூறுகிறார்.இந்த நாள் வரையில் எந்த இராணுவ வீரர்களும் பாரத ரத்னா விருது பெற்றதில்லை.பாரத ரத்னா இந்தியர்களின் மிக உயரிய மதிக்கத்தக்க விருதாக உள்ளது.

கே எம் கரியப்பா அவர்கள்
இந்திய இராணுவத்தின் அதிக கொண்டாடப்பட்ட தளபதியாக இருந்தும் இந்தியர்களுள் வெகு சிலரே பீல்டு மார்சல் கரியப்பா அவர்களை பற்றி தெரிந்துகொண்டுள்ளனர்.

இது பீல்டு மார்சல் கரியப்பா அவர்களின் வெற்றிக்கதை.தமிழர்கள் அனைவரும் அவரைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.இந்தியாவின் மேன்மைதாங்கிய வீரர் ,தளபதி பீல்டு மார்சல் கரியப்பா அவர்களின் வீரவரலாறு.

 
ஜனவரி 28, 1899, பிரிட்டிஷ் இந்தியாவில் ஆறு குழந்தைகளுள் ஒருவராக பிறந்தார்.அவரது குழந்தை காலத்தை கர்நாடகத்தின் அழகிய மாவட்டமான கூர்க்கில் கழித்தார்.
அந்த மாவட்டத்தில் இருந்து நிறைய வீரர்கள் இராணுவத்தில் பணியாற்றியுள்ளனர்.

பிரதமர் நேரு அவர்களுடன் கரியப்பா அவர்கள்
“சிம்மா” என தனது குடும்பம் மற்றும் நண்பர்களால் அழைக்கப்பட்ட அவர் இளவயதிலேயே அதிகாரியாக வேண்டும் என்ற கனவை இலக்காக்கினார்.மடிகேரியில் தனது உயர்கல்வியை முடித்த அவர் மெட்ராஸ் பிரசிடன்சி கல்லூரியில் இணைந்தார்.கிட்டத்தட்ட இந்த காலத்தில் தான் இந்தியர்கள் இராணுவத்தில் அதிகாரிகளாக இணைத்துகொள்ள படுகின்றனர் என்ற தகவலையும் அவர்களுக்க இந்தியாவிலேயே பயிற்சி தருகிறார்கள் என்ற தகவலையும் அறிந்து கொண்டார்.

இந்தோரில் உண்மையாகவே ஒரு கேடட் கல்லூரி திறந்துள்ளதை உறுதிப்படுத்திக்கொண்ட அவர் உடனடியாக அந்த கல்லூரியில் இணைய விண்ணப்பித்தார்.அவருடன் 70 பேர் விண்ணப்பித்திருந்தனர்.அதில் 42 பேருக்கு அனுமதி கிடைத்தது.அதில் கரியப்பா அவர்களும் ஒருவர்.

 
தனது கடின உழைப்பு மற்றும் அர்பணிப்பு உணர்வு காரணமாக முதல்தர மாணவராக உயர்ந்தார்.போர் தந்திரம்,இராணுவ யுத்த தந்திரம்,தலைமை நுட்பங்கள் மற்றும் மேலான்மை குறித்த பாடங்களில் சிறந்து விளங்கினார்.

அவரது திறனை உணர்ந்த உயரதிகாரிகள் அவரை ராயல் இராணுவக் கல்லூரிக்கு அனுப்பினர்.1919ல் அவர் 2வது லெப்டினன்டாக படையில் இணைந்தார்.முதன் முதலாக 2வது பட்டாலியன் கர்நாடிக் இன்பான்ட்ரியில் பணி பெற்றார்.அதன் பிறகு நேப்பியர் ரைபிள்ஸ் மற்றும் பிறகு ராஜ்புத் லைட் இன்பாட்ரியில் பணி நியமனம் பெற்றார்.

1933ல் குவட்டா ஸ்டாப் கல்லூரியில் நுழைவு தேர்வில் வெற்றி பெற்றார்.அங்கு படித்த முதல் இந்திய இராணுவ அதிகாரி என்ற பெயரையும் பெற்றார்.1942ல் ஒரு இராணுவ குழுவை வழிநடத்தும் தலைமை பொறுப்பை பெற்றார்.அவருக்கு கீழ் பிரிட்டிஷ் அதிகாரிகள் பணிபுரிந்தனர்.இது போல் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு தலைமை ஏற்ற முதல் இந்திய இராணுவ அதிகாரி அவர் தான்.

 
நான்கு வருடங்களுக்கு பிறகு 1946ல் கரியப்பா அவர்கள் முன்னனி பிரிகேடு குழுவின் பிரிகேடியாராக பதவி உயர்வு பெற்றார்.இந்த நேரத்தில் தான் பின்னாளில் பாகிஸ்தான் தலைமை தளபதியாக இருந்த கலோனல் ஆயுப் கான் கரியப்பா அவர்களின் கீழ் பணியாற்றினார்.

இந்த நேரத்தில் தான் இந்திய தேசிய இராணுவ வீரர்களை பிரிட்டிஷார் கைதிகளாக வைத்திருந்தனர்.ஒரு முறை அந்த கேம்புக்கு வந்த கரியப்பா அவர்கள் அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த பிரிட்டிஷ் உதவி தளபதிக்கு கடிதம் எழுதினா்.அதை ஏற்றுக்கொண்ட பிரிட்டிஷார் வீரர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தினர்.கரியப்பா அவர்களின் இந்த நடவடிக்கை பெரும்பாலோனரால் பாராட்டப்பட்டது.

மேலும் குற்றமற்ற கைதிகளாக இருந்த வீரர்களை விடுவிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.இதை ஏற்றுக்கொண்ட பிரிட்டிஷார் பெரும்பாலான இந்திய தேசிய இராணுவ வீரர்களை விடுவித்தது.கலோனல் பிரேம் குமார்,குர்பக்ஸ் சிங் தில்லான் மற்றும் ஷா நவாஸ் கான் ஆகிய வீரர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

கலோனல் பிரேம் குமார்,குர்பக்ஸ் சிங் தில்லான் மற்றும் ஷா நவாஸ் கான்
கிட்டத்தட்ட இந்த தருணத்தில் தான் 1947ல் மிக கடுமையாக போராடி இந்திய மக்கள் சுதந்திரம் பெற்றிருந்தனர்.இந்த நேரத்தில் தான் கரியப்பா அவர்கள் ஈராக்,சிரியா ,ஈரான் மற்றும் பர்மா பகுதியில் படை நடத்தி பல விருதுகளை பெற்றிருந்தார். இரண்டாம் உலகப் போரின் பர்மா முனையில் மிகச் சிறப்பாக செயல்பட்டமைக்காக அவருக்கு ” ஆர்டர் ஆப் பிரிட்டிஷ் எம்பயர்” விருதை அளித்தது பிரிட்டன்.

 
அதே வருடம் இந்தியா புதிய சுதந்திர தேசமாக முதல் அடியை எடுத்து வைத்துக்கொண்டிருந்தது.இங்கிலாந்தில் உள்ள இம்பீரியல் பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சிக்கு இணைந்தார் கரியப்பா அவர்கள்.அங்கு இணைந்த முதல் இந்தியர் என்ற பெருமையும் அவரையே சேரும்.பயிற்சி முடித்து தேசம் திரும்பி இராணுத்தின் மேற்கு கட்டளையகத்தின் தளபதியாக பொறுப்பேற்றார்.

இந்த நேரத்தில் தான் பாக்கிஸ்தானின் லாஷ்கர் பழங்குடிகள் ( அவர்களுடன் பாக் இராணுவமும்) காஷ்மீரை தாக்கினர்.இந்த பகுதிகளுக்கான இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு கரியப்பா அவர்கள் தான் பொறுப்பேற்றிருந்தார்.ஜம்மு-நௌசேரா பகுதியில் ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றப்பட்டனர்.ஸோஷி லா,ஜாங்கர்,பூஞ்ச்,ட்ராஸ் மற்றும் கார்கில் ஆகியவை கைப்பற்றப்பட்டன.லே உடனான தொடர்பு ஏற்படுத்தப்பட்டு ஆபரேசன்கள் தொடர்ந்தன.

திட்டமிடலில் கரியப்பா அவர்கள்
ஆபரேசனை தொடர்ந்து நடத்த அவரது தலைமை அதிகரியான அப்போதைய இராணுவ தளபதி சர் ராய் பட்சர் அனுமதி அளிக்கவில்லை.இதற்கு தனது மனக்கசப்பை வெளியிட்ட அவர் இது எதிர்காலத்தில் காஷ்மீரின் பாதுகாப்பிற்கு பிரச்சனையாக அமையும் என வாதிட்டார்.தொடர்ந்து அனுமதி கிடைக்காத போதும் தலைமை தளபதியின் ஆர்டரையும் மதிக்காமல் லே-லடாக்கில் மிக கடினமான தாக்கும் நடவடிக்கைகளை நடத்தி அவற்றை இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

ராய் பட்சர்,லேடி பட்சர் , ராஜகோபாலச்சாரி அவர்களுடன் கரியப்பா அவர்கள்
1949 ஜனவரி 1 ல் ஐநாவின் கீழ் போர்நிறுத்த ஒப்பந்தம் என்ற அரசின் நிலையையும் அவர் எதிர்த்தார்.அது அவருக்கு திருப்தி அளிக்கவில்லை.பிரதமர் நேருவுக்கும் இது தொடர்பான ஒரு அதிருப்தி கடிதத்தையும் அவர் அளித்தார்.

1949 ஜனவரி 15 அன்று இந்திய இராணுவத்தின் தளபதியாக பொறுப்பேற்றார் கரியப்பா அவர்கள்.பிரிகேட் ஆப் கார்ட்ஸ், பாரசூட் ரெஜிமென்ட் மற்றும் பிராந்திய இராணுவம் போன்ற படைப் பிரிவுகள் தொடங்க காரணமாக இருந்தார் கரியப்பா அவர்கள்.

1948லிலேயே என்சிசி தொடங்கப்பட்டாலும் அதை வலுப்படுத்தி அதற்கு பக்கபலமாக இருந்தவர் கரியப்பா அவர்கள்.

 
சாதிய அடிப்படையிலான ரிசர்வேசன் என்ற திட்டத்தை ஏற்க மறுத்துவிட்டார்.வீரர்களுக்கிடையே “ஜெய்ஹிந்த்” என்று மரியாதை நிமித்தம் அழைக்கும் பழக்கத்தை கொண்டு வந்தார்.

புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர்.விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்.எப்போதும் முன்னனியில் நின்று வழிநடத்தக்கூடியவர்.வீரர்களுடன் அடிக்கடி நேரடியாக உரையாடும் வழக்கம் கொண்டவர்.அவர்களது உணவு முறைகளை பற்றி அடிக்கடி விசாரித்து கொள்வார்.

“என்னால் செய்ய முடியாதவற்றை நான் எனது வீரர்களை செய்ய சொல்லமாட்டேன்” என அவர் வீரர்களை அடிக்கடி புத்துணர்ச்சியூட்டுவார்.

முதல் இந்திய பாகிஸ்தான் போரின் போது காஷ்மீரில் பல பகுதிகளில் கடும் உணவு பற்றாக்குறை நிலவியது. ஒருமுறை கரியப்பா அவர்கள் பாகிஸ்தான் படைகளை விரட்டி செல்லும்போது பாரமுல்லா பகுதியில் மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு உணவு பற்றாக்குறை குறித்து கூறினர். உடனடியாக தன்னால் இயன்றதை செய்வதாக உறுதி அளித்துவிட்டு மீண்டும் தனது பணியை தொடங்கினார். அதேபோல் அடுத்த நாளே தனது வாக்குறுதியை நிறைவேற்றினார். உணவு பொருட்களை அங்கு விநியோகம் செய்தார். இதை பார்த்து உத்வேகமடைந்த மற்றொரு சிறந்த அதிகாரியான கே.எஸ். திம்மய்யாவும் இதனை செய்தார். இதனால் நெகிழ்ந்து போன காஷ்மீர் மக்கள் பாரமுல்லாவில் ஒரு பூங்காவுக்கு கரியப்பா என பெயர் சூட்டினர் இன்றும் அங்கு இதனை காண முடியும்.

முன்னாள் பாகிஸ்தான் அதிபரும் ஃபீல்ட் மார்ஷலுமான அயூப் கான் சுதந்திரத்திற்கு முன்னர் ஃபீல்ட் மார்ஷல் கரியப்பா அவர்களின் கீழ் பணிபுரிந்தவர். 1965 போரின் போது கரியப்பா அவர்களின் மகன் ஃப்ளைட் லெஃப்டினன்ட் நந்தா கரியப்பா ஒட்டி சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. உடனடியாக அயூப் கான் கரியப்பா அவர்களை தொடர்பு கொண்டு அவரது மகனை விடுவிப்பதாக கூற கரியப்பா அவர்கள் ” அவன் எனது மகனல்ல, இந்த நாட்டின் மகன், இந்திய நாட்டின் போர்வீரன், உங்களது நல்லெண்ணத்திற்கு நன்றி கைது செய்யப்பட்ட அனைத்து இந்திய வீரர்களையும் விடுவிப்பதாக இருந்தால் விடுதலை செய்யுங்கள் இல்லையெனில் வேண்டாம், எனது மகனை மற்ற வீரர்களை போன்றே நடத்துங்கள் எந்த வித சிறப்பு மரியாதையும் வேண்டாம்” என பதில் கூறினார். அந்தளவுக்கு நாட்டின் மீது பற்று கொண்டிருந்தார்.

கரியப்பா அவர்கள் 1953ஆம் ஆண்டில் ஒய்வு பெற்றார். அவருக்கு 1986ஆம் ஆண்டு ஃபீல்ட் மார்ஷல் பதவி அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஹார்ரி ட்ருமேன் இந்திய அமெரிக்க உறவில் முக்கிய பங்கு வகித்த காரணத்தால் “ஆர்டர் ஆஃப் தி சீஃப் கமாண்டர் ஆஃப் தி லீஜியன் ஆஃப் மெரிட்” என்ற விருதை வழங்கினார்.

ஒய்வுப்பெற்ற பின்னர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராகவுப் பணியாற்றினார். ஆஸ்திரேலியாவில் முன்னாள் படை வீரர்கள் நலனுக்கு செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை பற்றி இங்கு அரசுக்கு எடுத்துரைத்தார்.

வயதான பின்னரும் நாட்டு பற்று காரணமாக 1965 மற்றும் 1971 போர்களில் போர்க்களத்திற்கு சென்று படை வீரர்களை உற்சாகமூட்டினார். 94 வயதில் பெங்களூர் நகரில் இயற்கை எய்திய அவரின் இறுதி சடங்கில் ஃபீல்ட் மார்ஷல் சாம் மானேக்சா மற்றும் முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர்.

சுபேதார் ஜொகிந்தர் சிங்


1962 போரில் தவாங்கின் பம் லா-வில் சீன வீரர்களைஅடித்து துவம்சம் செய்து இந்தியாவின் மிக உயரிய இராணுவ விருது பெற்ற சுபேதார் ஜொகிந்தர் சிங் அவர்களின் வீரவரலாறு

1962ல் இந்தியா மற்றும் சீனாவிற்கிடையே நடைபெற்ற மாபெரும் தரைப் போர் இந்தியாவிற்கு சிறப்பான போராக அமையாவிட்டாலும் நமது வீரர்கள் ஒவ்வொருவரின் திறனையும் போரில் அவர்கள் காட்டிய வீரத்தையும் மறுக்க முடியாது.அவ்வாறு பல வீரர்கள் தாங்கள் வீடு திரும்பமாட்டோம் எனத் தெரிந்திருந்தும் ” இந்தியாவிற்காக இந்த இடத்தை காப்போம்” என போரிட்ட பலவீரதீர சாகச கதைகள் வரலாற்றில் உண்டு.

அதில் ஒருவர் தான் நமது சுபேதார் ஜொகிந்தர் அவர்கள்.23 அக்டோபர் 1962ல் பம் லா என்னும் ஆக்சில் டொங்பென் லா என்னுமிடத்தில் அவர் இரு முறை சீனத் தாக்குதலை தடுத்து நிறுத்தி முறியடித்தார்.பின்னர் அவர் சீனர்களால் பிடித்து செல்லப்பட்டு அங்கே வீரமரணம் அடைந்தார்.

அவரது வீரதீரம் மற்றும் தலைமைப்பண்பு காரணமாக அவருக்கு இராணுவத்தில் வழங்கப்படும் உயரிய விருதான பரம்வீர் சக்ரா வழங்கப்பட்டது.
 
வெறும் சொற்ப வீரர்களை கொண்டு சீனப் படையை வென்ற அவரது கதையை இங்கு ஒவ்வொருவரும் தெரிந்துகொண்டாக வேண்டும்.

சுபேதார் ஜொகிந்தர் சிங் ,26 செப் 1921ல் பஞ்சாபின் பரித்கோட் மாவட்டத்தில் மோகா என்னுமிடத்தில் உள்ள மஹ்லா கலன் என்ற கிராமத்தில் பிறந்தார்.அவர் தனது 16வது வயதில் 28 செப்டம்பர் 1936ல் இராணுவத்தின் முதல் சீக் ரெஜிமென்டில் சிபாயாக தனது இராணுவ வாழ்க்கையை தொடங்கினார்.பிரிட்டிஷ் இந்திய இராணுவம் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுடன் போரிட்ட போது பர்மா முனையில் போரிட்டார்.அங்கு அவர் பல பாராட்டுகளை பெற்றார்.சுதந்திரத்திற்கு பிறகு 1948ல் பாகிஸ்தான் போர் தொடுத்த போது அவர் ஸ்ரீநகரில் சீக் ரெஜிமென்டில் பணியாற்றினார்.

1962 போர்

1962 போரில் அதிர்ச்சிக்குள்ளாகும் வண்ணம் இந்திய இராணுவம் அடுத்தடுத்து தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது.கிட்டத்தட்ட அனைத்து போர்முனைகளிலும் இதே போல் செய்திகள் வந்து நாட்டை உலுக்கியது.இந்திய இராணுவத்தின் வடகிழக்கு முன்னனி படை தான அப்போது அங்கு எல்லை பாதுகாப்பு.அந்த படையும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது.அதற்கு காரணமும் இருந்தது.வீரர்களுக்கு தேவையான தளவாடங்கள் முதல் அனைத்து சப்ளைக்களும் அதற்கு கிடைக்கவே இல்லை.எல்லையில் போரிடும் வீரர்களிடேயே முறையான தகவல் தொடர்பு இல்லை.தளவாடங்கள் கொண்டு செல்ல முறையான சாலை வசதிகள் முதற்கொண்டு எதுவுமே இல்லை.சொல்லிக்கொள்ளும் படியாக இயந்திர துப்பாக்கிகளே கூட இல்லை.அரசு இதையெல்லாம் செய்ய தவறியிருந்தது.குறைகளை அடுக்கி கொண்டே போகலாம்.

இரண்டாம் உலகப்போரில் மிகச்சிறப்பாக போரிட்டு உலக அளவில் இந்திய வீரர்கள் பாராட்டபட்ட நிலையில் இருந்த நமது வீரர்கள் இந்த தோல்விகளால் துன்பமடைந்தனர்.இராணுவ உயரதிகாரிகளிடையே குழப்பம்.உத்தரவுகள் முன்னனிக்கு செல்ல தாமதம்.பல இடங்களில் வீரர்கள் இருப்பதை கொண்டே போரிட்டனர்.கிட்டத்தட்ட அதே நிலையில் தான் சுபேதார் ஜொகிந்தர் சிங்கின் படைப் பிரிவும் போரிட்டது.

சுபேதார் ஜொகிந்தர் ஐபி மேடு (IB Ridge) மற்றும் இரட்டை மலை (twin peaks) என்ற இடங்களை காவல் காத்த 20 வீரர்கள் கொண்ட பிளாட்டூன் வீரர்களுக்கு தலைமை தாங்கினார்.

அந்த நேரத்தில் சீனப் படையின் குறிக்கோள் தவாங்கை கைப்பற்றுவது தான்.அதற்கு முன் அவர்கள் கைப்பற்ற நினைத்த இடம் இரட்டை மலைகள்.ஏனெனில் அந்த மலைகளில் இருந்து பல மைல் தூரம் வரை சீனர்களின் நடவடிக்கையை அங்கு நிலை கொண்டிருந்த நமது வீரர்களால் கண்காணிக்க முடிந்திருந்தது.எனவே தவாங்கை கைப்பற்றுவதற்கு முன்னர் இரட்டை மலையை கைப்பற்ற தனது முழு சக்தியுடன் சீனப்படை தயாரானது.23 அக்டோபரில் சீனப்படை மூன்று பகுதியில் இருந்தும் தாக்க தொடங்கியது.முதலில் பம் லா-வில் பணியில் இருந்தது அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் தான்.அவர்களால் சீனர்களின் படையை கட்டுப்படுத்த முடியாமல் போக கடைசியில் சுபேதார் ஜொகிந்தர் சிங் அவர்களிடம் காக்கும்  பொறுப்பு முடிந்தது.அவரும் தனது வீரர்களுடன் தயாராகவே இருந்தார்.

அந்த இரட்டை மலை மிக செங்குத்தானதாக இருந்தது.மேலும் சீனத்துருப்புகளுக்கு மேலே செல்வது மிக கடினமாக இருந்துள்ளது ஏனெனில் மேலே நமது வீரர்கள் கீழே வரும் சீன வீரர்களை தாக்க முடியும்.சுபேதார் ஜொகிந்தர் சிங் இதை நன்றாக பயன்படுத்தி கொண்டார்.இரு முறை சீனர்கள் பெரும் படையுடன்  தாக்க முயன்ற போதும் இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டார்.

அதிகாலை 5.30மணி.23 அக்டோபர் 1972 தவாங்கை கைப்பற்றும் நோக்கில் பம்லா பகுதியில் கடும் தாக்குதலை தொடங்கினர் சீனப் படையினர்.200 வீரர்கள் என்ற வீதத்தில் முன்னனி சீனப் பட்டாலியன் மூன்று முறை அலை அலையாக வந்து தாக்கினர்.சுபேதார் மற்றும் அவரது வீரர்கள் முதல் அலையை அடித்து துடைத்தெரிந்தனர்.கடும் உயிர்ச்சேதத்தை சந்தித்த சீனப் படையினர் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தி பின்வாங்கினர்.ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே மற்றுமொரு அலையாக சீனப்படையினர் தாக்க தொடங்கினர்.அதையும் அடித்து துடைத்தெரிந்தனர் நமது வீரர்கள்.ஆனால் நமது வீரர்களிடம் அதே நேரத்தில் வெடிபொருள்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

உடனே தனது கம்பெனி தலைமையகத்தை சுபேதார் தொடர்பு கொண்டு மேலதிக வெடிபொருள்களை அனுப்ப வேண்டினார்.ஆனால் அந்த நேரத்தில் சீனர்கள் நமது தொலைத் தொடர்பை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.இதனால் அவர்களுக்கு வெடிபொருள்கள் கிடைப்பது சிரமமாயிற்று.
 
சுபேதார் இந்த முறை காயமடைந்திருந்தார்.அவரது தொடைப்பகுதி காயமுற்றது.ஆனால் அவர் தனது வீரர்களை விட்டு மருத்துவ வசதி பெற மறுத்துவிட்டு அங்கேயே இருந்தார்.அவர்கள் அந்த இரட்டை மலைப்பகுதியை சீனர்கள் கைப்பற்ற விரும்பவில்லை.திறம்பட அதை காத்தனர்.மூன்றாவது அலையாக சீனர்கள் தாக்க தொடங்கினர்.சிறிய இலகுரக துப்பாக்கியை அவரே இயக்கி சீன வீரர்களை சுட்டு வீழ்த்தினார்.
இம்முறை பெரிய அளவில் சீனர்களுக்கு இழப்பு ஏற்பட்டாலும் தொடர்ந்து முன்னேறி தாக்கினர்.வெடிபொருள்கள் முடிந்த நிலையில் அவருடன் மீதமிருந்த வீரர்கள் தங்கள் துப்பாக்கி முனையில் கத்திகளை பொருத்தி சீனர்களை தங்கள் நிலையை விட்டு முன்னே சென்று தாக்க தொடங்கினர்.விரைவிலேயே மேலதிக சீனப்படையினர் அவர்களை தாக்க தொடங்கினர்.இந்த மொத்த நடவடிக்கையிலுமே சுபேதார் மிகச் சிறப்பாக வீரமுடன் செயல்பட்டார்.

“ஜோ போர் சோ நிகல்” என்ற போர்க்குரலே தங்கள் கத்தியால் குத்தப்பட்ட சீனர்களுக்கு பெரும் பயத்தை கொடுத்தது.சுபேதாருடன் இருந்த வீரர்களும் பெரும்பாலும் வீரமரணம் அடைய படுகாயமுற்றிருந்த சுபேதாரை சீனர்கள் போர்க்கைதியாக பிடித்து சென்றனர்.

திபத் பகுதியில் உள்ள சீன போர்க்கைதிகள் கூடாரத்தில் அவர் தனது காயம் காரணமாக வீரமரணம் அடைந்தார்.அவரது தலைசிறந்த தலைமைப்பண்பு மற்றும் போரில் காட்டிய வீரம் காரணமாக அவருக்கு பரம்வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது.

சுபேதார் ஜொகிந்தர் அவர்களுக்கு பரம்வீர் சக்ரா விருது  அளிக்கப்பட்ட தகவல் சீன இராணுவத்தை சென்றடைந்தது.

அதன் பின் மரியாதை நிமித்தமாக சீன இராணுவப் படை அவரது அஸ்தியை முழு இராணுவ மரியாதையுடன் மே 17,1963ல் அவரது பட்டாலியனுக்கு அனுப்பியது.அவரது ஆஸ்தி அடங்கிய தாழி மீரட்டில் இருந்த சீக் ரெஜிமென்டிற்கு வந்தது.
அடுத்த நாள் குருத்வாராவில் சில சடங்கிற்கு பிறகு அவரது மனைவா குர்தியல் மற்றும் மகனிடம் அளிக்கப்பட்டது.

இந்திய இராணுவம் ஐபி ரிட்ஜில் அவருக்கு நினைவு மண்டபம் கட்டியுள்ளது.

வீரவணக்கம்.அனைவரும் கண்டிப்பாக பகிருங்கள்.இது அனைத்து தமிழர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு

ஹவில்தார் ஹங்க்பன் டாடா அசோக சக்ரா


இந்திய இராணுவத்தின் அஸ்ஸாம் ரெஜிமென்டை சேர்ந்த டாடா.1979 அக்டோபர் 2ல் பிறந்தவர்.பின்பு இராணுவத்தின் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படைப் பிரிவில் இணைந்து பின்பு
இராஷ்டீரிய ரைபிள்சின் 35வதூ பட்டாலியனில் மாறுதல் பெற்று 2016ல் காஷ்மீர் சென்றார்.

 
சிறுவயதில் இருந்தே மிகச் சுறுசுறுப்பு.இந்தியாவின் வடகோடி மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் டிராப் மாவட்டத்தின் பொடூரியா கிராமத்தில் பிறந்தார்.காலையிலேயே ஓடுவது,உடற்பயிற்சி ,நீச்சல் என ஒரு வீரராகவே தனது வாழ்வை தொடங்கினார்.இதுவே பின்னாளில் அவர் இராணுவத்தில் இணைவதை எளிதாக்கியது.அவரது வேகத்தை சிறுவயது நண்பர் நினைவு கூர்கிறார்.டாடா இல்லாவிட்டால் நான் அன்றே நீரில் மூழ்கி இறந்திருப்பேன் என அவரது நண்பர் கூறுகிறார்.ஓடும் தண்ணீரில் மூழ்கிய தனது நண்பரை அசாத்தியமாக மீட்டு உயிருடன் கரை சேர்த்துள்ளார் டாடா.

இவ்வாறு நாட்கள் செல்ல,ஒருநாள் தனது பக்கத்து நகரத்தில் இராணுவ ஆட்தேர்வு நடக்க கலந்து கொண்டு வெற்றியும் பெறுகிறார்.

28 அக்டோபர் ,1997ல் பாராசூட் ரெஜிமென்டின் 3வது பட்டாலியனில் இணைந்தார். 2005ல் அஸ்ஸாம் ரெஜிமென்ட் மையத்திற்கு மாறுதல் பெற்று பின் 24 ஜனவரி 2008ல் அஸ்ஸாம் ரெஜிமென்டின் 4வது பட்டாலியனில் இணைந்தார்.

 
அதன் பிறகு காஷ்மீரில் பணியாற்ற வேண்டி மே 2016ல் அஸ்ஸாம் ரைபிள்ஸின் 35வது இராஷ்டிரிய ரைபிள்சிற்கு மாறுதல் பெற்று குப்வாரா மாவட்டம் சென்றார்.

காஷ்மீர் செல்வதற்கு முன் குடும்பத்தாரிடமும், சர்ச்சில் சென்று பாதிரியாரிடம் நான் காஷ்மீர் செல்கிறேன் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என கூறி விட்டு காஷ்மீரின் குப்வாராவில் மிக உயர்ந்த இடத்தில் உள்ள சாபு நிலையில் தனது பணியை தொடங்கினார்.

26 மே 2016 இரவு நேரம் , 35வது இராஷ்டீரிய ரைபிள்சின் சாபு நிலையின் கமாண்டர் டாடா தான். அந்த நிலை 12,500 அடி உயரத்தில் அமைந்திருந்தது.அந்த இரவு நேரத்தில் நௌகமின் சாம்சபாரி மலைப் பகுதியில் நான்கு நன்கு ஆயுதம் தரித்த பயங்கரவாதிகள் ஊருவியிருந்தனர்.ஊடுருவியிருந்தவர்கள் பற்றிய தகவல் கமாண்டர் ஹவில்தார் டாடா அவர்களுக்கு கிடைக்க தனது சக வீரர்களுடன் அவர்களை தடுக்க கிளம்பினார்.

 
கண்டிப்பாக இது சாதாரண பணியல்ல.மலைப் பகுதி, கல்லும் கரடும் நிறைந்த பகுதி, 100அடி நடந்தாலே நமது முழு சக்தியும் போய்விடும் நிலை,உயரமென்பதால் ஆக்சிஜன் பற்றாக்குறை, வேகமாக ஓடமுடியாது. அப்படிப்பட்ட பகுதியில் இரவு நேரத்தில் எல்லையின் முன்னனி பகுதியில் தீவிரவாதிகளை வேட்டையாட டாடா கிளம்பினார்.

தீவிரவாதிகளை நெருங்கிய டாடா மற்றும் குழுவினர் அவர்களின் நடமாட்டத்தை கண்டு கொண்டனர்.என்கௌன்டர் தொடங்கியது. கிட்டத்தட்ட 24 மணி நேரம் அந்த என்கௌன்டர் நீடித்திருந்தது. முன்னேறாி பாய்ந்து ஓடினார்.சக வீரரின் கூற்றுப் படி,டாடா மற்ற வீரர்களை விட 350மீ முன்னியில் வேகமாக தீவிரவாதிகளின் பின்னாள் ஓடினார் என கூறுகின்றார். என்கௌன்டர் தொடங்கயபோது அவர்களை நோக்கி முதலில் இயந்தித் துப்பாக்கியால் சுட்டனர் வீரர்கள்.அதில் இரு தீவிரவாதிகள் மலை மீதும் இரு தீவிரவாதிகள் மலையின் கீழும் ஓடினர்.டாடா அவர்கள் பின்னாள் வேகமாக ஓடி தாக்கினார்.அங்கிருந்த பாறையில் ஔிந்து கொண்டு தீவிரவாதிகளும் கடுமையாக தாக்கினர்.தவழ்ந்து சென்று அருகில் உள்ள பாறையின் வழியாக முதல் தீவிரவாதியை சுட்டார் டாடா..முதல் தீவிரவாதி வீழ்ந்தான்.மேலும் ஒரு தீவிரவாதியை நோக்கி முன்னேறினார்.அந்நேரத்தில் மற்ற வீரர்களும் அங்கு வந்து சேர , நான் முன்னே சென்று தாக்குதல் நடத்துகிறேன்.அந்த சமயத்தில் என்னை கவர் செய்யுங்கள் (cover fire ) என கூறி தவழ்ந்தவாறு இரண்டாவது தீவிரவாதிக்கு பின்னாள் சென்று அவனையும் சுட்டு வீழ்த்தினார்.

குடும்பத்தினருடன் சிறுது நேரம் பேசியுள்ளார்.அங்கு தொலைத் தொடர்பு வசதி மிகக் குறைவு.தான் ஒரு ஆபரேசனில் இருப்பதாகவும் ,காட்டுப்பகுதியில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 
இரண்டு தீவிரவாதிகளையும் அவர்கள் கொண்டு வந்த பயங்கர ஆயுதங்களையும் வீரர்கள் கைப்பற்றினர்.அதன் பிறகு மற்ற இரு தீவிரவாதிகளை தேடும் பணி தொடங்கியது. வீரர்கள் இரு குழுவாக பிரிந்து கொண்டனர். OC தலைமையில் ஒரு குழு மற்றும் டாடா தலைமையில் ஒரு குழு. டாடா முன்னனியில் வழிநடத்தினார்.அந்த பகுதி முழுவதும் பெரிய பாறைகள் நிரம்பியிருந்தது.அந்த சரிவுகளில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தனர்.தீடீரென ஒரு தீவிரவாதி வீரர்கள் நோக்கி சுட, டாடா தாமதிக்காமல் முன்னே அவனுக்கு நேர் எதிராக சென்று மூன்றாவது தீவிரவாதியை வீழ்த்தினார்.அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக நான்காவது தீவிரவாதி டாடாவை நோக்கி சுட்டான்.அந்த தோட்டா அவரின் வயிற்றுப்பகுதிக்கு கீழே பாய்ந்தது. “டாடா சுடப்பட்டுவிட்டார்” என சக வீரர்கள் கத்த, மீண்டும் தனது கால்களால் வேகமாக எழுந்தார்.விட்டுக் கொடுக்காத வீரம் அந்த மலைச் சாதியினருடையது. ஒரு தோட்டாவா என்னைச் சாய்ப்பது என எழுந்து மீண்டும் தீவிரவாதியை நோக்கி சுடும் போது , மேலும் ஒரு தோட்ட அவரது நெஞ்சுப் பகுதியை துளைத்து சென்றது.ஒரு குண்டடியை தாங்குவது அவ்வளவு எளிதல்ல.அந்த வலி அவர்களுக்கு மட்டுமே தெரியும். டாடா நம் நாட்டிற்காக அந்த கரும் இரவில் முன்னனி பகுதியில் வீரமரணம் அடைந்தார்.அவருக்கு திருமணம் முடிந்து ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளனர்.அவர்களுக்கு தன் அப்பா தங்களுடன் இனி இல்லை என்பது புரியாத வயது.வீட்டின், கிராமத்தின் அந்த மாநிலத்தின் மட்டுமல்ல நம் நாடு அந்த இரவில் ஒரு மாபெரும் வீரத்தை இழந்துவிட்டது. அவர் முன்னனியில் தாக்கியது அவருக்காக அல்ல, தன் உயிரை சிறிதும் எண்ணாமல் தன் சக வீரர்களை காப்பாற்றினார்.நான்காவது தீவிரவாதி மற்ற வீரர்களால் வீழ்த்தப்பட்டான்.

நாட்டிற்காக என் உயிர் தேவைப்பட்டால் தயார் என அவர் முன்பே ஒரு முறை அவரது பாதிரியாரிடம் கூறியிருந்தார்.அவரது மகன் நான் இராணுவ அதிகாரியாக ஆசைப்படுகிறேன் என வேகத்துடன் கூறுவது நமது கண்களில் கண்ணீரை கசியச் செய்கிறது.அவர் இங்கு தான் எங்களுடன் உள்ளார் என அவரது மனைவி கூறும் வார்த்தைகள் நம் இதயத்தை பிளந்து தான் செல்கின்றன.டாடா ஒரு மாபெரும் வீரம் என அவரது கமாண்டிங் அதிகாரி மனிஷ் அவர்கள் புகழாரம் சூட்டுகிறார்.

அவரது வீரத்தை எழுத இந்த இடம் போதுமானதல்ல.

 போரில் காட்டிய அதிகபட்ச வீரம் காரணமாக அவருக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.அந்த விருது குடியரசு தினத்தன்று (2017) அவரது மனைவி பெற்றுக் கொண்டார்.

பரம்வீர் சக்ரா விருது பெற்ற வீரரின் ஸ்குவாட்ரான் தமிழகத்தில் தற்போது செயல்பாட்டை தொடங்கியுள்ளது


பிளையிங் புல்லட்கள் எனப்படும் இரண்டாவது தேஜஸ் ஸ்குவாட்ரான் தற்போது தமிழகத்தின் சூலூரில் தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது.வீரதீர சாகசத்திற்காக பெயர் போன இந்த ஸ்குவாட்ரான் தற்போது சூலூரில் செயல்பாட்டை தொடங்கியது.இந்திய விமானப்படையில் பரம்வீர்சக்ரா விருது பெற்ற ஒரே வீரரான நிர்மல்ஜித் செகான் அவர்கள் பணியாற்றிய ஸ்குவாட்ரான் தான் பிளையிங் புல்லட் ஸ்குவாட்ரான்..அவரது வீரதீர சாகசம் இதோ…
 
இந்தியர்கள் போற்றத் தவறிய மாவீரன்: நிர்மல்ஜித் சிங் செகான்

விமானப்படையின் சிறந்த அதே சமயம் மிகத் திறமை வாய்ந்த வீரர் தான் நிர்மல்ஜித் அவர்கள்.இளைஞர்களை விமானப் படையில் இணைய உந்துசக்தியாக விளங்கும் அவரது வீரம்செறிந்த வரலாற்றை காணலாம்.

டிசம்பர் 16, 1971 பாகிஸ்தானுடனான போரில் இந்திய தீர்க்கமான பெரிய வெற்றியை இந்தியா சுவைத்தது.வெற்றி எனும்போது கொண்டாட்ட மனநிலைக்கு செல்லும் நாம் அதற்காக நாம் இழந்த வீரர்களை மறந்து விடுகிறோம்.பல வீரர்களின் தன்னலமற்ற வீரத்தால் நாம் வெற்றியை பெற்றொம்.
 
48 வருடங்கள் கடந்துவிட்டது.நாம் நமது வீரர்களின் தியாகத்தை நினைத்து பார்ப்போம்.அந்த வகையில் இன்று தன் வீரதீரத்தால் எதிரிகளை விரட்டிய ஒரு மாவீரரின் வரலாற்றை காணலாம்.

பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தின் ஐசிவால் தாகா என்ற கிராமத்தில் ஜீலை 17,1943ல் பிறந்தார் நிர்மல்ஜித் அவர்கள்.அவரது அப்பா டர்லோசன் சிங் செகான் இந்திய விமானப்படையில் பிளைட் லெப்டினன்டாக பணிபுரிந்துள்ளார்.

அவரது அப்பாவை தனது ஹீரோவாக நினைத்த நிர்மல்ஜித் தன் சிறுவயதிலேயே தான் ஒரு விமானப்படை வீரர் தான் என்ற கனவை நெஞ்சில் நிறுத்தினார்.
கனவோடு நில்லாமல் தனது பள்ளிபடிப்பிற்கு பிறகு தனது கனவை நனவாக்கினார்.ஜீன் 4,1967ல் பைலட் அதிகாரியாக விமானப்படையில் இணைந்தார்.
நான்கே வருடத்தில் ,அதாவது 1971ல் வங்கதேச விடுதலைப் போர் தொடங்கியது.அம்ரிஸ்டர் ,பதான்கோட் மற்றும் ஸ்ரீநகர் விமானப்படை தளங்கள் மீது பாக் விமானப்படை தொடர்சியான தாக்குதலை தொடங்கின.விமானப் படையின் 18வது ஸ்குவாட்ரனை சேர்ந்த விமானங்கள் ஸ்ரீநகரின் வான் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்தன.

தங்களது சிறந்தபறக்கும் திறன் காரணமாக பிளையிங் புல்லட் ,அதாவது பறக்கும் குண்டுகள் எனப்பட்ட இந்த ஸ்குவாட்ரானில் தான் நிர்மல்ஜித் அவர்கள் இடம்பெற்றிருந்தார்.

டிசம்பர் 14,1971ல் அவர் Stand-By 2 duty ( ஆர்டர் கிடைத்தால் இரண்டே நிமிடத்தில் வானில் பறக்க வேண்டும்) டியூட்டியில் இருந்தார்.அவருடன் டியூட்டியில் இருந்த மற்றொரு வீரர் பிளைட் லெப்டினன்ட் பல்தீர் சிங் குமன் அவர்கள்.

‘G-Man’ தனது சகாக்களிடையே அறியப்பட்ட பல்தீர் அவர்கள் தான் நிர்மல்ஜித் அவர்களின் சீனியர், பறத்தல் பயிற்றுவியலாளர் மற்றும் நாட் போர்விமானத்தின் மீது நிர்மல் அவர்களுக்கு காதல் ஏற்பட காரணமானவர்.நாட் விமானம் 1965 போரில் மிகச் சிறப்பறாக செயல்பட்டு சேபர் ஸ்லேயர் அதாவது பாகிஸ்தானின் சேபர் விமானங்களை அதிக அளவு வீழ்த்தி சேபர் வெட்டுபவன் என்ற பெயரை பெற்றிருந்தது.

நிர்மல் அவர்களை அவரது சகாக்கள் “பிரதர்” என்ற தான் அழைப்பர்.அவர் அனைவரும் நெருங்கி பழகக்கூடிய மனிதராக இருந்தார்.

அதிகாலை வேலை பாகிஸ்தானின் ஆறு F-86 சேபர் விமானங்கள் பெசாவர் தளத்தில் இருந்து கிளம்பி ஸ்ரீநகர் தளத்தை தாக்க வந்தன.இந்த குழு பாக்கின் விங் கமாண்டர் சங்காசி தலைமையில் பிளைட் லெப்டினன்ட் டோடானி,அன்ராபி,மிர்,பைக் மற்றும் யுசுப்சாய் ஆகிய வீரர்களுடன் ஸ்ரீநகரை தாக்க வந்தன.குளிரின் பனிமூட்டத்தை சாதகமாக கொண்டு இந்திய எல்லையைக் கடந்து யாரும் காணா வண்ணம் ஸ்ரீநகரை நெருங்கின.

அந்த காலத்தில் ரேடார் எல்லாம் எல்லை.தளங்களுக்கு முன்நிலைகளில் உள்ள பெரிய மலைப் பகுதியில் கண்காணிப்பு கோபுங்கள் அமைத்து அதில் வீரர்கள் தான் கண்காணிப்பில் ஈடுபடுவர்.இவ்வாறு உள்நுழையும் விமானங்கள் கண்காணித்து தலைமையகத்திற்கு தகவல் கூறுவர்.அதே போல சேபர்கள் எல்லைக்குள் நுழைந்ததை ஸ்ரீநகரில் இருந்து சில கிமீ தொலைவில் இருந்த கண்காணிப்பு நிலையில் இருந்த வீரர்கள் கண்டு தளத்திற்கு உடனடியாக எச்சரிக்கை செய்தியை அனுப்பினர்.

 
உடனடியாக ‘G-Man’ பல்தீர் மற்றும் ‘Brother’ செகான் அவர்கள் இருவரும் தங்களது நாட் விமானத்தை நோக்கி ஓடி ஹேங்கரை விட்டு விமானத்தை வெளியே எடுத்து Air Traffic Control (ATC) அமைப்பிடம் மேலெழும்ப அனுமதி கேட்டனர்.இவை அனைத்தும் கனநேரத்தில் நடந்தது.ஆனால் ரேடியோ அலைவரிசையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக நேரம் தாமதம் ஆனது.அதன் பிறகு சிறிதும் யோசிக்காமல் விமனாத்தை மேலெப்பிய வேளையில் பாக் விமானங்கள் ஓடுதளத்தில் குண்டுகளை பொழிந்தது.

நிர்மல் அவர்கள் மேலெம்பிய தருணம் அவரை தாண்டி இரு சேபர் விமானங்கள் செல்வதை கண்டார்.அதிவேகத்தின் தனது விமானத்தை திருப்பி அடுத்த தாக்குதலுக்கு திரும்பிய சேபர் விமானங்களை துரத்த தொடங்கினார்.இந்திய விமானப்படை வரலாற்றில் பெரிய ” dogfight” எனப்படும் சண்டை தொடங்கியது.

நாட் விமானம் பறப்பதை உணர்ந்த பாக் விங் கமாண்டர் சங்காசி வெளி எரிபொருள் டேங்கை விமானத்தை விட்டு வெளியேற்றி விமானத்தை கீழ் நோக்கி செலுத்த கட்டளையிட்டார்.டோடானி விமானத்தின் பின்புறம் நிர்மல்ஜித் விரட்டி சென்று தனது முன்புற விமான துப்பாக்கி கொண்டு சுட்டார்.அந்த காலத்தில் முன்புற துப்பாக்கிளுடன் மட்டுமே விமானச் சண்டை நடைபெற்றது.ஏனெனில் வான் ஏவுகணைகள் அப்போது இல்லை.
டோடானி மிக கடினமான நிர்மல் அவர்களை சமாளித்து அடிபடாமல் தப்பித்தார்.அதே நேரம் இரு சேபர் விமானங்கள் நிர்மல் அவர்களின் விமானத்தை துரத்தின.தற்போது ஒரு நாட் விமானத்தை நான்கு சேபர்கள் விரட்டின.அதே நேரம் பல்தீர் அவர்கள் மேலெழும்பிய பிறகு நிர்மல் அவர்களின் விமானத்தை பார்க்கமுடியவில்லை.ஏனெனில் மூடிபனி காரணமாக பார்ப்பது சிரமமாக இருந்தது.

நிர்மல் அவர்கள் தன் இயந்திரத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை மற்றும் அவரது வீரம் காரணமாக நான்கு சேபர்களை எதிர்க்க துணிந்தார்.சேபர்கள் அவரது விமானத்தின் மீது குண்டுகளை பொழிந்தது.அவற்றை மிகத் திறமையாக தவிர்த்தார்.மீண்டும் தாக்க தொடங்கிய நிர்மல் இரு பாக் சேபர் விமானங்களை சுட்டு வீழ்த்தினார்.

இதன் பிறகு நிர்மல் அவர்களின் நாட் விமானத்தை பின்தொடர்ந்து வந்த பாக் சேபர் விமானத்தின் பிளைட் லெப்டினன்ட் மிர்சா தனது விமானத்தின் ஆறு இயந்திர துப்பாக்கிகள் உதவியுடன் நாட் விமானத்தை சுட்டார்.இதில் அவர் விமானம் அடிபட்டது.இந்த நேரத்தில் தான் பல்தீர் அவர்களுக்கு தனது கடைசி செய்தியை அனுப்பினார்.

“I think I’m hit. G-Man, come and get them!”

( நான் அடிபட்டுவிட்டேன் என நினைக்கிறேன்.G-Man வந்து அவர்களை வீழ்த்துங்கள்)

விமானத்தின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேற அடிபட்ட நாட் விமானம் ஸ்ரீநகர் தளத்தை நோக்கி திரும்பியது.ஆனால் 37 குண்டுகள் அவரது விமானத்தை தாக்கியதால் அவரது பறத்தல் கட்டுப்படுத்தி அமைப்புகள் சேதமடைந்திருந்தது.நாட் விமானம் கவிழ்ந்து திரும்பி வீழ தொடங்கியது.நிர்மல் அவர்கள் தன் விமானத்தில் இருந்து வெளியேற முயன்றுள்ளார்.ஆனால் வெளியேறும் அமைப்பும் சேதமடைந்திருந்தது.

காஷ்மீரின் பட்கம் அருகே விமானம் விழுந்தது.அவர் வீரமரணம் அடைந்தார்.அப்போது அவருக்கு வயது 26 மட்டுமே.
 
தன்னலமற்ற வீரம், நிகரற்ற உட்சபட்ச தியாகம் காரணமாக அவருக்கு பரம்வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது.விமானப்படை வீரர் பரம்வீர் சக்ரா பெறுவது அதுவே முதல்முறை.

விமானப்படையில் வாரண்ட் அதிகாரியாக பணியாற்றிகொண்டிருந்த அவரது அப்பா மற்றும் அவரது மனைவி விருதை பெற்றுகொண்டனர்.

மேஜர் ராஷேஸ் சிங் அதிகாரி, மகாவீர் சக்ரா



மேஜர் 18வது கிரானேடியர் படைப் பிரிவைச் சேர்ந்தவர்.கார்கில் போரின் போது டோலோலிங் பகுதியை கைப்பற்றைஇவரது பிரிவு அனுப்பப்பட்டது.டோலோலிங் 16,000 உயரமுள்ள மலைப்பகுதி.எனவே அதைக்  கைப்பற்றுவது இந்தியப் படைகளுக்கு இன்றியமையாத ஒன்றாகும்.மலை மீது பாக் படைகள் பங்கர்கள் அமைத்திருந்து தனது இருப்பின் #பாதுகாப்பை உறுதிசெய்திருந்தது.

 
தனது வீரர்களுடன் மலையைக் கைப்பற்ற தயாரான போது அவரது #மனைவியின் கடிதம் அவருக்கு கிடைத்தது.ஆனால் அவர் பிரித்து படிக்கவில்லை.மற்ற வீரர்கள் வீட்டில் இருந்து கடிதம் வராதா என ஏங்கிய காலம்.ஏன் படிக்காமல் இருக்கீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு எனது மனைவி என்னுடைய உடல் நலத்தை பற்றி தான் எழுதியிருப்பர்.அதைப் படித்து நான் எனது உடல்நலம் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருக்க விரும்பவில்லை.#டோலாலிங் பகுதியை மீட்கும் வரை எனது நினைவில் மாற்றம் இருக்ககூடாது என பதிலளித்தார்.நான் எனது #தேசத்துக்கான போரில் வெல்வேன் என கூறியபடி தனது ஏகே 47 துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் சுமந்த பையை தூக்கி கொண்டு களம் சென்றார்.

அவரை தெரிந்த சிலர் அவர் திரும்பபோவதில்லை என்றும் டோலோலிங் 90டிகிரி செங்குத்தானது எனவும் அதை மீட்பது மனிதனால் #இயலாத காரியம் எனவும் கூறினர்.

#ஆபரேசனின் போது டோலோலிங்கில் மேஜரின் படைப் பிரிவு கடும் தாக்குதலுக்கு உள்ளானது. முதல் நாள் ஒரு ஜீனயர் கமிசன் ஆபிசர் பாக் சினைப்பர் தாக்குதலுக்கு பலியானதால் முதல் நாள் தாக்குதல் நிறுத்தப்பட்டது.

 
அடுத்த நாள் இந்தியப் படைகள்மூர்க்கத்துடன் எதிரியின் பங்கரில் கிரேனைடு தாக்குதலில் ஈடுபட்டது.மேஜர் முன்னனியில் நின்று படைகளை வழிநடத்தினார். யூனிவர்சல் மெசின் #துப்பாக்கியை வைத்து இரண்டு பாக் பங்கர்கைதொடர்ச்சியாக தாக்கினார்.

தாமதிக்காமல் ராக்கெட் லாஞ்சரை எடுத்து பங்கரை தாக்கினார்.தாக்கிகொண்டே பங்கரை நோக்கி சென்று இரண்டு வீரர்களை தாக்கி கொன்றார். அதே நேரத்தில் தன் வீரர்களுக்கு தொடர்சியான கட்டளைகள் இட்டார்.இந்த திறமை மிகப் பெரிய வரம் தான்.ஏனெனில் தொடர்ச்சியான துப்பாக்கி சூட்டில் மத்தியில் தானும் தாக்கி கொண்டு தனது வீரர்களுக்கும் உத்தரவிடுவது அபாரம்.மீடியம் மெசின் துப்பாக்கிகளை பாறைகளுக்கு நடுவே பொருத்தி தாக்கும் படி உத்தரவிட்டார்.
இந்த நேரத்தில் மேஜர் #படுகாயம் அடைந்திருந்தார்.அவரை மீட்க வீரர்கள் முயன்ற போதும் மறுத்து தனது வீரர்களுடன் போரில் தொடர்ந்து ஈடுபட்டார்.அந்த நேரத்தில் மற்றுமொரு பங்கரை தாக்கி கைப்பற்றினார். படுகாயம் அடைந்த மேஜர் அந்த நேரத்தில் வீரமரணம் அடைந்தார் அதன் பிறகு பாய்ன்ட் 4590 கைப்பற்றப்பட்டது. போரில் காட்டிய வீரதீர சாகசம் காரணமாக மகாவீர் சக்ரா வழங்கி பெருமை கொண்டது இந்தியா.

அவரது திருவுடல் அவர் குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது.குடும்பமே உறைந்து நின்றது.அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.அவரது மனைவி அருகில் நின்று அவரை பார்த்தபடியே இருக்கிறார்.அவரது உடலை ஒருமுறை #தொட்டுப்பார்க்கிறார்.அப்போது அவர் எழுதிய கடிதம் பிரிக்கப்படாமல் அவரது பாக்கெட்டில் இருக்கிறது.கதறி வெடித்து அழுகிறார்.அருகே இருந்த நிருபர்கள் ஏன் திடீரென அழுகிறீர்கள் என்று கேட்டனர. எனது கணவர் சில நாட்களுக்கு முன்னர் எனக்கு கடிதம் எழுதினார்.நான் கார்கில் போருக்கு செல்கிறேன்.திரும்ப வருவது உறுதியற்றது. அவ்வாறு நான் வரவில்லையென்றால் பிறக்க போகும் குழந்தையை கார்கில் மலைகளுக்கு கூட்டி வந்து இங்கு தான் உன் அப்பா வீரமரணம் அடைந்தார் என கூற வேண்டும் எனக் கூறியிருந்ததாக கூறினார்.

 
அதற்கு பதில் அளித்திருந்த அவரது மனைவி “நான் பெண் அல்லது ஆண் பிள்ளை பெற்றாலும் சரி, நீங்கள் திரும்ப வந்தால் நான் மகிழ்வேன் இல்லையென்றால் வீரமரணம் அடைந்த வீரரினா் மனைவி என பெருமை கொள்வேன்.பிறக்கும் குழந்தைக்கு கார்கில் கதை மட்டுமல்ல உங்களைப்போன்ற ஒரு வீரராக வளர்ப்பேன் ” என கூறினார்..

இவரைப்போன்ற வீரரால் தான் நாம் இன்று #நிம்மதியாக வாழ்கிறோம்.

இந்தியா தாய் திரு நாட்டின் வரலாறு.

ரவீந்தர் கௌஷிக்

இன்றும் இந்திய உளவுத்துறையில் இருப்பவர்களுக்கு இவர் தான் தங்களுடைய ஆதர்ஷ நாயகன்..இன்னும் சொல்லப்போனால் இன்று வரை இவரை மிஞ்சிய ஒரு spy இல்லை ...