Saturday, August 1, 2020

அற்புதமான அஜித் தோவல்


தேசப்பற்றாளர்களுக்கு, தேச நலன் ஒன்றே மிக மிக முக்கியமானது. அதற்காக அவர்கள் எந்த விலையையும் தர எப்போதும் தயாராக இருப்பார்கள். அஜித் தோவல் அப்படிப்பட்ட ஒருவர். 

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல்" என்றார் வள்ளுவர். அதாவது யாரிடம் எந்த பொறுப்பை தர வேண்டும் என்று ஆராய்ந்து அதை அவர்கள் வசம் முழுமையாக ஒப்படைத்தல் எனப் பொருள். 

நரேந்திர மோடி இந்த செயல்பாட்டில், மிகச்சிறந்தவராக திகழ்கிறார். நம் ராணுவத்தை உலகத் தரம் வாய்ந்ததாக உருவாக்க வேண்டும், சுயசார்பு கொண்டதாக மாற்ற வேண்டும் என்று தீர்மானித்த நிலையில், ஆட்சி பொறுப்பேற்ற வெகு சில நாட்களிலேயே தேசிய பாதுகாப்பு ஆலோசகராக தன்னுடைய நம்பிக்கைக்கு உரிய‌ அஜிஜ் தோவல் அவர்களை நியமிக்கிறார் மோடி. 

யார் இந்த அஜித் தோவல்...?

மிசோரம் மாநிலத்தில் 'மிசோ தேசியப் முன்னனி' எனும் தனி நாடு கேட்டு போராடும் தீவிரவாத இயக்கத்தின் அராஜகம் எல்லை மீறி சென்றுக் கொண்டிருந்தது. 

அஜித் தோவல், தன்னுடைய பின்புலத்தை மறைத்துக் கொண்டு அந்த தீவிரவாத படைகளில் சேர்ந்து, இந்திய ராணுவத்திற்காக ஒற்றனாக செயல்பட்டார். 

 "மிசோ நேஷனல் ஃப்ரண்ட்" எனப்படும் தீவிரவாதிகளோடு பணியாற்றுகிறார் அஜித் தோவல்.  அவர்களை அங்கிருக்கும் தன் வீட்டில் தங்க வைக்கிறார். 

தன் பிராமண மனைவியை அவர்களுக்கு பன்றிக்கறி (pork) சமைத்துப் போட சொல்கிறார். 

"யார் இவர்கள் ?" என கேட்கிறார் அவர் மனைவி. 

"ஒரு ஆப்பரேஷனுக்காக (திட்டத்திற்காக) என்னோடு பணிபுரியும் ஊழியர்கள் என்கிறார் அஜித் தோவல். 

உண்மையில் அவர்கள் 'லால்டெங்கா' எனப்படும் பயங்கர ஆயுதங்களை தங்களிடத்தே கொண்ட கொடூரமான மிஸோ கமேண்டோக்கள். 

அந்த பயங்கரவாதிகளிடம்,  'தான்' இந்திய தேசத்திற்கு எதிராக களம் இறங்கியிருக்கும் ஒரு தீவிரவாதி எனக் காட்டிக் கொள்கிறார் அஜித் தோவல்..., என்பது அவர் மனைவிக்கு தெரியாது.

பர்மாவின் 'அரக்கன்' பகுதியிலும், சீனாவிற்குள்ளும், அவர் யாரும் அறியாத வகையில் ஊடுறுவி அங்குள்ள நிலையை ஆராய்ந்து, இந்திய ராணுவத்திற்கு தகவல்கள் தெரிவித்து வந்தார். 

அதன் தொடர்ச்சியாக, மிசோ தேசிய முன்னனியில் இருந்த கமேண்டோக்களோடு நெருங்கிய நட்பை உருவாக்கி, அதனுள் பிளவுகளை உருவாக்கி, அந்த இயக்கத்தையே உருதெரியாமல் சிதைத்தார் அஜித் தோவல்.

தனி நாடாக இருந்த சிக்கிம் இந்தியாவோடு இணைய விருப்பம் தெரிவித்திருந்தது. 

இந்த இணைப்புக்கு சீனா பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால், கள ஆய்வு மேற்கொள்ள சிக்கிமிற்குள் ஒற்றனாக ஊடுறுவினார் அஜித் தோவல். 

சிக்கிம் இந்தியாவோடு வெற்றிகரமாக இணைக்கப்பட்டதற்கு இவரின் மதிநுட்பமும் மிக முக்கிய காரணி என்கிறார்கள் ராணுவ வல்லுனர்கள்.

1980 களில் காலிஸ்தான் எனும் பெயரில் சீக்கிய தீவிரவாதிகள் தனிநாடு கேட்டு வந்தனர். சீக்கிய கோயில் முழுவதும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. 

இதற்கிடையே பொற்கோயிலுக்குள் 1984இலும் அதன் தொடர்ச்சியாகவும் இரு முறை இந்திய ராணுவம் நுழைந்து தாக்குதல் தொடுத்திருந்தது. 

அந்த இரண்டு முறையும் பொது மக்கள் அதிகம் இருந்த நிலையில் உயிர்சேதம் அதிகமாகியது. 

இது உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, இந்திரா காந்தியின் படுகொலைக்கு வித்திட்டது. 

அதனால் 1988ல் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என தீர்மானித்திருந்தது இந்திய ராணுவம். 

“ஆப்பரேஷன் 'பிளாக் தண்டர்”

அஜித் தோவல்,  ஒரு ரிக்ஷா ஓட்டுபவர் போல் நடித்து பொற் கோயிலுக்குள் ஊடுறுவினார். 

புதிய நபரான அஜித் தோவல் பொற்கோயில் வளாகத்தில் திரிவது காலிஸ்தான் பயங்கரவாதிகள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியது. 

அவரை பிடித்து அவர்கள் விசாரித்த நிலையில், தான் ஒரு பாகிஸ்தானிய ஒற்றன் என்றும் காலிஸ்தான் இயக்கத்திற்கு தனி நாடு அமைக்க‌ உதவுவதற்காக பாகிஸ்தானால் அனுப்பப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

அஜித் தோவல் பொற் கோயிலுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை இந்திய ராணுவத்திற்கு தகவல் தந்த வண்ணம் இருந்தார். 

வெறும் நாற்பது பேரே பொற்கோயிலுக்குள் இருப்பார்கள் என இந்திய ராணுவம் கணித்திருந்த நிலையில் அஜித் தோவல், இருநூறு பேருக்கு மேல் உள்ளே உள்ளார்கள் என்பதை கண்டறிந்து, தாக்குதலை கைவிடுமாறும், பொற்கோயில் வளாகத்துக்குள் தேவையான மின்சாரத்தையும், தண்ணீர் இணைப்பையும் துண்டிக்குமாறும் அறிவுறுத்தினார். 

விளைவு..?

கொதிக்கும் கோடையில் தண்ணீர், மின்சாரம் இல்லாமல் வெறும் ஒன்பதே நாட்களில் உள்ளே இருந்த தீவிரவாதிகள் அனைவரும் சரண‌டைந்தார்கள். 

கத்தியின்றி ரத்தமின்றி ஆப்பரேஷன் 'பிளாக் தண்டர்' வெற்றி பெற்றது, காலிஸ்தான் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழித்தார் அஜித் கோயல். 

'கரன் கர்ப்' எனும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அஜித் தோவலின் இந்த பங்களிப்பை குறித்து மாய்ந்து மாய்ந்து விவரிக்கிறார். 

அவர் ஒரு 'அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கர்' (எதையும் வித்யாசமாக யோசிப்பவர்) என்று அஜித் தோவலை புகழ்கிறார் 'கரன் கர்ப்'.

அடுத்து தோவலுக்கு காஷ்மீர் பிரச்சனையில் முக்கிய பணி தரப்பட்டது. 

காஷ்மீருக்குள் சென்ற தோவல், அங்கு 'ஜம்மு காஷ்மீர் அவாமி லீக்' எனும் பெயரில் இயங்கிக் கொண்டிருந்த 'குக்கா பரே எனும் 'முகம்மது யூசுஃப்'போடு தொடர்பை ஏற்படுத்தி, அவரை நல்வழிப்படுத்தி, காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு எதிராக அவரை இயங்க செய்தார். 

இதன் மூலம் காஷ்மீர் தீவிரவாதிகள் தொடர்பான பல முக்கிய தகவல்கள் பெறப்பட்டன. காஷ்மீர் தேர்தலை அமைதியாக நடத்திட முடிந்தது. 

காஷ்மீர் தீவிரவாதிகளால் 2003ல் குக்கா பரே சுட்டுக் கொல்லப்படும் வரை, தீவிரவாதத்திற்கு பெரும் முட்டுக் கட்டையாக இருந்தது குக்கா பரே-வின் இயக்கம். 

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, அஜித் தோவல், பாகிஸ்தானுக்குள் ஒன்றனாக ஏழு வருடங்கள் ஊடுறுவியதைதான் குறிப்பிட வேண்டும்...!! 

இந்திய பாதுகாப்பு ஆலோசனை குழு, அஜித் தோவலை ஒரு மிக ரகசிய திட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் லாகூருக்கு ரகசிய புலனாய்வு செய்ய‌ அனுப்பி வைக்கிறது. 

அங்கே கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் தங்கி தன் பணியை சிறப்பாக செய்கிறார் அஜித் தோவல். 

யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக இஸ்லாத்துக்கு மதம் மாறுகிறார் தோவல். (ஒரு இஸ்லாமிய பெண்னை மனம் முடித்ததாகவும் சிலர் சொல்கிறார்கள்) 

ஒரு முறை லாகூரில் உள்ள ஒரு மசூதியில் தொழுகை முடித்து வரும் அஜித் தோவலிடம், ஒரு நரைத்த தாடி கொண்ட‌ பெரியவர் "நீங்கள் ஒரு இந்து..?" என்று கிசுகிசுக்கிறார். 

அஜித் தோவல் திகைத்து போனாலும், அதை முகத்தில் வெளிப்படுத்தாமல் "இல்லை" என‌ மறுக்கிறார். 

அவரை தைரியத்தோடு பின் தொடர்ந்து சென்று, ஐந்து தெரு தள்ளி உள்ள குறுக்கு சந்தில் உள்ள அவரின் அறைக்கு செல்கிறார் அஜித் தோவல். 

அவரை உள்ளே அழைக்கும் அந்த பெரியவர், "நீங்கள் இந்துதான், உங்கள் காதில் உள்ள கடுக்கண் வடு அதை காட்டிக் கொடுக்கிறது" என்கிறார். 

அஜித் தோவலோ அலட்டிக் கொள்ளாமல், "நான் முன்பு இந்துவாக இருந்தேன் தற்போது இஸ்லாத்துக்கு மதம் மாறி விட்டேன்" எனக் கூறுகிறார். 

அந்த பெரியவரோ, "நானும் இந்துவாகதான் இருந்தேன், தற்போது என்னால் இங்கு ஒரு இந்துவாக‌ பாதுகாப்பாக இருக்க இயலவில்லை என்பதால், வெளிபுறத்திற்காக முஸ்லீமாக காட்டிக் கொள்கிறேன்" என்கிறார். 

அவர் தன் அலமாரியை திறந்து அதில் தான் பூஜிக்கும் சிவ லிங்கத்தையும், சுவாமி படங்களையும் காட்டுகிறார். 

இதை பின்னாளில் நினைவு கூறும் அஜித் தோவல் "அந்த பெரியவரின் சந்திப்பு மறக்க முடியாதது" என்கிறார். 

அதற்கு பின் 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து தன் காதில் இருக்கும் வடு வெளியே தெரியாமல் மறைத்ததாக பின்நாட்களில் குறிப்பிடுகிறார் தோவல். 

பாகிஸ்தானில் உருது மொழியை பலவிதமான‌ பிரந்திய பேச்சு மொழிகளில் பேசும் நுட்பத்தை அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் அஜித் தோவல் பல விதங்களில் இந்திய தேசத்திற்காக பாடுபடுகிறார். 

பலுச்சிஸ்தான் போராளிகளுக்காக ஒரு களத்தை ஏற்படுத்தி, அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தருவது, 

இந்திய "ரா" பிரிவுக்கு தேவையான ஏஜண்டுகளை பாகிஸ்தானில் ரகசியமாக நியமிப்பது. 

தாவுத் இப்ராகிம் குறித்து தகவல்களை சேகரிப்பது, 

பாகிஸ்தானிய 'ஐ எஸ் ஐ' குறித்தும், பாகிஸ்தானிய ராணுவத்தின் திட்டங்கள் குறித்தும் பல தகவல்களை சேகரிப்பது 

- என தன் உயிரை பணயம் வைத்து பணியாற்றுகிறார் அஜித் தோவல். 

பலூசிஸ்தான் பிரச்சனை பாகிஸ்தானுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது என்றால், அதற்கு அஜித் தோவலின் பங்களிப்பு இன்றியமையாதது.

பாகிஸ்தானில் இருந்து திரும்பிய பின் மீண்டும் பல விதங்களில் தேசத்திற்காக தன் அரும்பணிகளை தொடர்கிறார் அஜித் தோவல். 

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 'கர்வாலி' எனப்படும் பிராமண குடும்பத்தில் ஜனவரி 1945ல் பிறந்தார் 'அஜித் தோவல்'. தந்தை ஒரு ராணுவ அதிகாரி. 

அஜ்மீர் ராணுவ கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து, பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பை ஆக்ரா பல்கலைகழகத்தில் முடித்தார். 

1968ல் கேரளத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக உருவாகினார். மூன்றாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த 'எம்.கே.நாராயணன்' அவர்களிடம் தீவிரவாத தடுப்பு பயிற்சியை பெற்றார். 

அதன் பின் பல விமான கடத்தல் சம்பவங்களில் பயங்கரவாதிகளோடு சமரசம் பேசுவதிலும், பண‌ய‌க் கைதிகளை மீட்பதிலும் மதி நுட்பத்தோடு வெற்றிகரமாக செயல்பட்டார்.

2005ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்த அஜித் தோவல், டிசம்பர் 2009ல் விவேகானந்தா இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் எனும் அமைப்பை ஏற்படுத்தி, தன் தேசிய மற்றும் இந்து தர்ம‌ சேவைகளை தொடர்கிறார்.

குஜராத் முக்கிய மந்திரியாக இருக்கையிலேயே அஜித் தோவலோடு நெருங்கிய தொடர்பை வைத்திருந்தார் நரேந்திர மோடி. 

2014ல் சரித்திர தலைவர் மோடி அவர்களின் ஆட்சி அமைந்திட, அஜித் தோவலை இந்தியாவின் ஐந்தாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கிறார் மோடி. 

நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் அஜித் தோவலை கேட்காமல் பிரதமர் எதுவுமே செய்வதில்லை என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். 

மோடி அரசு பிறகு ஈராக்கில் செவிலியர் பெண்கள் 46 பேர் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட‌ விவகாரம் ஆகட்டும், 

மோடி அவர்கள் பாகிஸ்தான் மீது தொடுத்த துல்லிய தாக்குதல் ஆகட்டும், 

அஜித் தோவலின் பங்கு அவற்றில் இன்றியமையாதது. 

சொல்லப் போனால் அஜித் தோவல் தன்னுடைய பல சாகசங்களை, அனுபவங்களை, வெளியே சொல்லவில்லை. 

அவரை குறித்து நாம் அறிந்த பலவும் பெரும்பாலும் மற்றவர்கள் மூலமாகதான். 

அஜித் தோவல் போன்ற ஒப்பற்ற தேசபக்தர்கள் இருக்கும் வரை இந்த தேசத்தை யாராலும் அசைக்க முடியாது என்பதில் சந்தேகமே இல்லை.

ஜெய் மோடி சர்க்கார்..!
பாரத் மாதா கி ஜெய்..!

No comments:

Post a Comment

ரவீந்தர் கௌஷிக்

இன்றும் இந்திய உளவுத்துறையில் இருப்பவர்களுக்கு இவர் தான் தங்களுடைய ஆதர்ஷ நாயகன்..இன்னும் சொல்லப்போனால் இன்று வரை இவரை மிஞ்சிய ஒரு spy இல்லை ...