Friday, July 31, 2020

ஸ்ரீ கந்த சஷ்டி கவச பாடல் வரிகள் வைத்து வரைந்த முருகர் ஓவியம்


Zoom பண்ணி பாருங்க . . .

ஐந்து நாள் கல்யாணம் - கிராமத்தில்


அந்த நாளெல்லாம், அநேகமாக பெண் பார்க்கும் அன்றே பாக்கு வெற்றிலை மாற்றி விடுவார்கள்...
பையன் வேறு ஊரிலிருந்து வரவேண்டுமென்றால், வண்டி கட்டிக்கொண்டு வர நேரமாகும்.. அதனால் இந்த வழக்கம்.

ஒரு வீட்டில் பெண் பார்க்கும் படலமென்றால்... அந்த அக்ராஹாரமே அங்கு திரண்டிருக்கும்... அநேகமாக அக்ரஹாரத்தில் பாதி பேர் உறவாகவும் இருப்பார்கள்.
மாப்பிள்ளை வீட்டு மனிதர்கள் உள்ளே நுழைய, வீட்டு பெண்டுகள் எல்லாம் உள்ளே ஓடி மறைந்து விடுவார்கள்.

பெண் பார்த்த அன்றே லௌகீகம் பேசப்படும்; முஹூர்த்த தேதி நிச்சயமாகும்.
அதற்கு பிறகு வரும் நாட்களெல்லாம்... கும்பல்தான்; கூச்சல்தான்; கும்மாளந்தான்; வேலை தான் !!

உறவுகள் கூடும்... வேலைகள் பிரிக்கப்படும்... (Modern Management படிப்பு இல்லாமலே எல்லாம் டைம் படி ஒழுங்காக நடக்கும்)
அத்தை, மாமி, சித்தி, பெரியம்மா, பாட்டி, அத்தங்கா, அம்மங்கா....
சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, அத்தான், அம்மாஞ்சி...
ஒன்று விட்ட உறவுகள் வேறே !

தினமும் 30 / 40 பேருக்கு சமையல் நடக்கும்... வேலை செய்பவர்களுக்கும் சேர்த்து....

1 . ஆசாரி வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு - நகைகள் செய்யப்படும்.. திருமங்கல்யத்துக்கு புது பொன் உருக்கி, நல்ல நேரம் பார்த்து செய்வார்கள்..
அதை மேற் பார்வையிட ஒருவர் நியமனம் !

2 . மளிகை சாமான்கள் மூட்டை மூட்டையாய் வந்து இறங்கும்... முதலில் அப்பளம், வடகம், பக்ஷணம் பண்ண..
விறகு மூட்டை வந்து இறங்கும்... உக்கிராண உள் நிறைந்து, பூட்டப்படும்.

3 . பெண்டுகள், பலகைகளை மடியில் சாய்த்து வைத்து, முழு உளுந்தை உருட்டுவார்கள்...உளுந்து கீழே விழுந்து, கற்கள் மேலே நிற்கும்.
முழுத் துவரை துவரை உடைத்து, துவரம்பருப்பு,
செக்கில் ஆட்டிய எண்ணெய்..... இதெல்லாமும் தயாராக வேண்டும்.

4 . மித்தத்திர்க்கு ஒரு பக்கம்... உரல், உலக்கை சத்தம்... அப்பளத்து மாவு, வறட்டு அரிசி மாவு , களைந்து உலர்த்தின மாவு, சாம்பார் பொடி, இட்லி மிளகாய் பொடி எல்லாம். ஒரு பக்கம் இயந்திரம் சுத்திக்கொண்டே இருக்கும்... கடலை பருப்பு, உப்புமாவுக்கு அரிசி இத்யாதிகள் அரைத்து / உடைத்து சலிக்கப்படும்...

5 . அப்பளம் மாவு இடித்து, ஒருவர் பிசைய, ஒருவர் சீராக உருட்டி போட, கொஞ்சம் சிறியவர்கள் சில்லு இட்டு போட, பெரியவர்கள் இட... இரண்டு பேர் மொட்டை மாடியில் காய வைக்க... முதல் இரண்டு நாட்கள் இந்த கல்யாணம்... பொரிக்க அப்பளம். சீர் கொடுக்க.

6 . பக்ஷண கல்யாணம் ஆரம்பிக்கும்... வெண்ணை வாங்கி - சேர் சேறாக, வீசை வீசையாக காய்ச்சப்படும்.
7 . 9 , 11 சுத்து சீர் முறுக்குகள் (பெண் ஆத்துப்பேருக்கு குடுக்க 5 சுத்து ) தேங்காய் எண்ணையில் தயாராகும்.
8 . மைசூர் பாகு, பூந்தி லட்டு (அதற்கு குஞ்சா லாடு என்று பெயர். ஏனோ ஒருவரும் அப்படி சொல்வதில்லை இப்போது) ஒரு பக்கம் தயாராகும்- நெய் மணத்துடன்

9 . இவை தவிர, ஓமப்புடி, கடலை மாவு தேன் குழல் எல்லாம்...

10 . சீர் அநேகமாக 101 - உப்பு பக்ஷணத்திலும், 51 ஸ்வீட் இலும் டின்னில் வைத்து மூடப்படும்.
இதற்காக புதிதாக மூடி போட்ட பித்தளை அடுக்குகள், பீப்பாய்கள் வாங்கப்படும். பிஸ்கட் டின்னும் வைப்பார்கள்.
ஸ்வீட் எல்லாம் எறும்பு வராமல் பாதுகாக்க வேண்டும் 

11 . சமையற்காரர் ஒரு நாள் வந்து, மெனு சொல்லி, சாமான்கள் லிஸ்ட் போட.. அந்த சாமான்கள் தனியாக வாங்கி வைக்கப்படும். அந்த ரூமுக்கு ஒரு தனி காவல் - சாவி அந்த மனிதர் கையில்... அவருக்கு demand அதிகம் !! (அவ்வளவு பவர் !!)

12 . சமையல் அடுப்பு, களி மண் கொண்டு வந்து, நல்ல நேரம் பார்த்து, வீட்டு பெண்களே செய்வார்கள்.. கொடி அடுப்பு...
சமையற் காரர் இரண்டு நாட்கள் முன் வந்து அவர் ஒரு பெரிய கொடி அடுப்பு கட்டுவார்...

13 . பருப்பு தேங்காய்கள்... எல்லா வேளைக்கும், விதம் விதமாக பண்ணுவார். பேப்பர் சுத்தி ஒரு கங்காளத்தில் தனியாக அடுக்குவார்.
ஸ்பெஷல் பால் வாங்கி, திரட்டுப்பால் காய்ச்சுவார்.
பல வித ஊறுகாய்கள் போடுவார்.

நடுவில்.... சாப்பாட்டுக்கடை... குழந்தைகள் கவனிப்பு... பெண்களுக்கு தலை வாரல்... எல்லாம் நடக்கும்...
இதில் பெரிய, கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்..
எல்லா மாமிகளும் நிறைய வம்பு பேசுவார்கள்; ஜோக்குகள் அடித்து சிரிப்பார்கள்... தாவணி பெண்கள் குறுக்கும் நெடுக்கும் போய் தங்களுக்குள் பேசி சிரிப்பார்கள்... கல்யாணப்பெண்.. (10 வயதில் என்ன தெரியும்) அந்த 10 நாட்களில் நன்றாக கவனிக்கப்படுவாள்... தினம் ஒரு அலங்காரம்...
எல்லோரும் ஒத்துமையாக இருப்பார்கள்... பழைய சண்டையெல்லாம் மறந்து விடும்... அங்கே ஈகோ கிடையாது.. சலிப்பு கிடையாது...

ஒவ்வொரு வேலையும் ஆரம்பிக்கும் முன் (ஆசாரி, பக்ஷணம், சமையல்காரர் etc ) ... தேங்காய் உடைத்து சிறு பூஜை நடக்கும் !!

14 . பந்தல் போட ஆட்கள் வருவார்கள் ... அந்த தெரு முழுக்க அடைத்து பந்தல் போடப்படும்... கீத்து பந்தல்... ஷாமியானா இல்லை !
புழக்கடையில் சமையலுக்கு பந்தல்.

15 . கிணற்றடியில் பாத்திரம் தேக்க நாலு பேராவது...

16 . புடவை வேஷ்டி - பட்ஜெட் போடப்பட்டு... வீட்டு ஆண்களும், முக்கியமான (கோபித்துக்கொள்ள என்று சில உறவுகள் உண்டு !) பெண்களும் டவுனுக்கு வண்டி கட்டி போய்... எல்லா துணிமணியும் வாங்குவார்கள்... அந்த நாளிலும் போட்ட பட்ஜெட் இல் அடங்கியதாக சரித்திரமே இல்லை !!

17 . ஒரு பக்கம்.... சாமி காரியங்கள் நடக்கும்... சுமங்கலி பிரார்த்தனை, சமாராதனை..
.
அந்த 10 நாட்களும் அக்ராஹாரத்தில் எந்த வீட்டிலும் சமையல் இருக்காது... !!

மின்ன நாள்ல எல்லாம் கல்யாணத்துக்கு வரும் உறவினர்கள், சத்தரத்திலேயே தங்கி, அங்கு கிடைக்கும் பெரிய ஜமுக்காளத்தை  விரித்து , படுத்து, இரவெல்லாம் சுவாரசியமாக பேசி, எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு.... ஹும்ம்ம்ம்... நினைத்தால் ஜாலியாகத்தான் இருக்கு.

#வரலட்சுமி நோன்பின் சிறப்பும் வரலட்சுமி பூஜை செய்யும் முறையும்

🌺🌺இனிய வரலட்சுமி தின வாழ்த்துக்கள் 
அனைவருக்கும் அன்னையின் திருவருளால் மங்களங்கள் உண்டாகட்டும்🌺🌺

🌺மங்கள வாழ்வு தரும்  குங்கும பிரசாதம் 

🌺அம்பாளுக்கு சர்வமங்களா என்று ஒரு திருநாமம் உண்டு. அனைத்து மங்கலங்களையும் அருளும் தேவி. மங்கலங்கள் அருளும் அம்பிகையின் திருமேனியில் இருந்து தோன்றியதுதான் மஞ்சள். அந்த மஞ்சளில் இருந்து தோன்றியதுதான் குங்குமம்.
பெண்கள் மட்டுமல்ல; ஆண்களும் தங்கள் நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் அம்பாளின் குங்கும பிரசாதத்தை அணிந்துகொண்டால், எந்த ஆபத்தும் அணுகாது.

 🌺குறிப்பாக திருமணமான பெண்கள் தங்கள் நெற்றியிலும், வகிட்டிலும் குங்குமம் இட்டுக் கொண்டால்,பிரம்மராட்சஸ் போன்ற ஆபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.     
சிவபெருமானுக்கு விபூதி ஐஸ்வர்யமாகத் திகழ்வதுபோல், அம்பிகைக்கு குங்குமம் ஐஸ்வர்யமாக திகழ்கிறது. 

🌺அம்பிகையின் அருட்பிரசாதமான குங்குமத்தில் அம்பாளின் துவாரசக்திகளான ஜெயா, விஜயா ஆகியோர் இருப்பதாக ஐதீகம். எனவே நெற்றியில் குங்குமம் தரித்துக்கொண்டால், அவ்விருவரும் தேவிக்குக் காவலாக இருப்பதைப் போலவே, 
நமக்கும் காவலாக இருந்து சகலவிதமான ஆபத்துகளில் இருந்தும் காப்பாற்றுவார்கள் என்பது உறுதி.

🌺அம்பிகையின் மேன்மையான அருட்பிரசாதமான குங்குமத்தை அணிந்துகொண்டால், அனைத்து பாவங்களும் நீங்கும் என்பதை,
 ‘சர்வ_பாபேப்ர_முச்யதே’என்று காமிகா ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது. 
அம்பிகைக்குக் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டு, அர்ச்சனை குங்குமத்தைப் பிரசாதமாகப் பெற்று அணிந்துகொண்டால், வீட்டில் அனைத்து மங்கலமும் ஏற்படுவதுடன் ஐஸ்வர்யங்களுக்கும் குறைவே இருக்காது.

🌺நெற்றியில் குங்குமம் வைக்கும் முறை 

🌺பெண்கள் குங்குமம் இடுவதால் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்.
 குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது. 
மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது. 
கோவிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் இடுவதால், குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம். 

🌺 வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

*🌺பெண்கள் முதலில் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

🌺 அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

🌺 தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

🌺திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் இடுவது சிறப்பு.

 🌺ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் இடுவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

🌺குங்குமம் தரிக்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.

"மங்களங்களுக்கெல்லாம் மங்களம் அளிப்பதாயும் இங்கு நோய் விஷங்கள் தீமை எல்லாமும் ஒழிப்பதாயும்
 சங்கரி லலிதா தேவி தாயுருவாயும் உள்ள 
குங்குமம் தரிப்பவர்க்கு குறையற நன்மையாமே"*

இத்தனை மகிமைகள் நிறைந்த குங்குமத்தை நாமும் தினமும் அணிந்து அன்னையின் திருவருளை பெறுவோமே!

ஓம் சக்தி 🙏
பராசக்தி 🙏

Wednesday, July 29, 2020

தசாவதாரம்-10 (கல்கி அவதாரம்)



கல்கி அவதாரம்.
******************
பெருமாளின்  அவதாரங்களில் இது பத்தாவது அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் எடுக்கும் அவதாரம் கல்கி. 

கலியுகத்திலும் எடுத்து உலகை அழித்து, நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் என எதிர்பார் த்து காத்திருக்கிறோம். இந்த கலியுகத்தை காப்பாற்ற பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுத்துவிட்டாரா? அல்லது இனிமேல் தான் எடுக்கப்போகிறாரா?.

இது ஒருபுறம் இருந்தாலும். இந்த கலியுகத்தி ல் இருந்து நம்மை காப்பாற்றும் படி, விஷ்ணு வை சரணடைந்து அவரது நாமத்தை சொல்லி, செய்யும் செயல்களை எல்லாம் அவர்க்கு சமர்ப்பணம் செய்து, அவரே சரணம் என்று வாழ்வதே இந்த கலியுகத்திலிருந்து நாம் மீண்டு இறைவனை அடையும் வழியாகும். 

கிருஷ்ண அவதாரம் முடிந்து பகவான் வைகு ண்டம் சென்றதும் கலி புருஷன் பூலோகத்தி ற்குள் நுழைந்து விட்டான். அவன் ஆட்சியினா ல் தர்மம் நசிந்து விடும் என அறிந்த தருமபுத் திரர் முதலிய பாண்டவர்களும் கிருஷ்ணனை தொடர்ந்து வைகுண்டம் போனார்கள். 

கலி பிறந்ததும் கலி தோஷத்தால் மக்கள் உடல் மெலியும். அவர்களுடைய பிராண சக்தி குறைந்து போகும். வர்ணாசிரமம் நிலை குலையும். வேததர்ம மார்க்கங்கள் மறைந்து விடும். 

ஆளும் அரசர்கள் திருடர்கள் போல் ஆவார்க ள். தர்மம் பாஷாண்டம் மயமாகும். ஆளப்படும் மாந்தர்களும் திருட்டு, பொய் மற்றும் வீணான அபவாதங்களுக்கு ஆட்படுவர். பந்துக்கள் மைத்துனன்மார்களாக நடந்து கொள்வர். 

வர்ணங்கள் எல்லாமே சூத்திர வண்ணமாக மாறும். பசுக்கள் ஆடுகள் போல மெலியும். முனிவர்களின் ஆசிரமங்கள் என்று சொல்லப் படுபவை கிருகஸ்தாஸ்ரமத்திற்குள் போய் விடும். தாவரங்களில் மரங்கள் வன்னி மரங்களைப் போலக் காணப்படும். 

செடிகள் அணுவெனச் சிதைந்து விடும். மேக ங்களில் மின்னல்கள் மிகும். தர்மானுஷ்டா ணம் அற்றுப் போவதால் வீடுகள சூன்யப் பிரதேசம் ஆகும். மக்கள் கழுதைகளின் தர்ம ங்களை உடையவர் என ஆவார்கள். இப்படிக் கலி முற்றிய நிலையில் பகவான் சத்துவ குணத்தால் மீண்டும் அவதாரம் செய்வார்.

சராசர குரு என்றும், சர்வஸ்வரூபி என்றும் ஈஸ்வரரான விஷ்ணுவுடைய அவதாரம் தர்மத்தைக் காப்பாற்றவும், சாதுக்களை அவர்களுடைய கர்மத்தளைகளிலிருந்து  நீக்கி மோட்சம் அளிக்கவும் ஏற்படும்.சம்பளக் கிராமத்தில் முக்கியமானவரும், மகாத்மாவுமா கிய கல்கி என்ற பெயருடன் பகவான் அவதரிப்பார். 

அணிமாதி அஷ்டமா சித்தியுடன், சத்திய சங்க ல்பம் முதலிய குணங்களுடன் லோகநாயகன், வேகமாகச் செல்லும் குதிரை மீது ஏறிக்கொ ண்டு கத்தியால் தீயோரை அடக்குவார். ஒப்பற்ற வேகம் கொண்ட குதிரை மீது ஏறி விரைவில் உலகெங்கிலும் சஞ்சாரம் செய்து, அரச வேடம் தாங்கி மறைவில் வாழும் திருடர்களை கோடிக்கணக்கில் சம்ஹாரம் செய்வார். 

துஷ்டர்கள் அழிவர். அதன் பின்பு புண்ணிய வாசனை கலந்த காற்றினால் தீண்டப் பெறும் நாடு நகர மக்கள் உள்ளம் தெளிவு பெறும். அவர்களது உள்ளத்தில் சத்துவகுண சீலரான பகவான் வாசம் செய்வார். 

அவர்களுடைய சந்ததி நல்ல வகையில் நல்ல வர்களாக பன்மடங்கு பெருகும். தர்மத்திற்கு உறைவிடமான பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுக்கும் பொழுது இந்த உலகம் பழைய கிருதயுகம் எப்படி இருந்ததோ அதன் படி மாறும். 

மக்களின் பிறப்பும், சாத்வீகமாகத் திகழும். சூரியன், சந்திரன், குரு ஆகிய மூவரும் பூச நட்சத்திரத்தில் ஒரே ராசியில் எப்பொழுது கூடுகிறார்களோ அதுவே மறுபடித் தோன்றக் கூடிய கிருதயுகம் எனப்படும்.  

ஸ்ரீ ஹரியின் தசாவதாரக் கதைகளை ஏகாதசி, துவாதசி காலங்களில் படித்தாலோ, கேட்டா லோ நமக்கு அளவில்லாத மகிழ்ச்சியும், மங்க லமும் உண்டாகும் என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. 

யுகங்கள் நான்கு வகைப்படும். அவை கிருத யுகம், திரோதா யுகம், துவாபர யுகம், கலியுகம். இதில் 
கிருத யுகம்  17, 28, 600 வருடங்களும், திரோதா யுகம் 92, 96, 000 வருடங்களும், 
துவா பர யுகம்  8, 64, 000 வருடங்களும், கலியுகம்  4, 32, 000 வருடங்களும் கொண்டது. 

இந்த நான்கும் சேர்ந்தால் ஒரு சதுர் யுகம் ஆகும். கலியுக முடிவு பற்றி வள்ளல் பெருமா ன் ராமலிங்க சுவாமிகள் தரும் குறிப்பு: முதல் யுகத்திற்கு நாள் எட்டு, 2வது யுகத்திற்கு நாள் ஆறு. 3வது யுகத்திற்கு நாள் நான்கு. 4வது யுகத்திற்கு நாள் இரண்டு. ஆகக்கூடிய நாள் இருபதும் கற்பம் முடிக்கக் கூடிய நாள்கள் (அதாவது ஓர் ஆயிரம் சதுர் யுகம் என்பது ஒரு கல்பமாகும்.)  60*60*60 = 216000 நொடி = 1 நாள். 

அதாவது, நாள் ஒன்றுக்கு நாழிகை 60. நாழி கை ஒன்றுக்கு வினாடி 60. வினாடி ஒன்றுக்கு நொடி 60. இப்படி நாளிரண்டிற்கு 4, 32, 000 நொடி. இந்த 4, 32, 000 நொடியும் வருஷமாக கலியுகத்திற்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தக் கலியுகம் தோன்றி 5000 வருடங்கள் தான் ஆகிறது.

கலியுகம் பற்றிய வினாக்களும் விளக்கமும்
***********************************************
◆கல்கி அவதாரம் எப்போது?
கலியுகத்தின் இறுதி காலத்தில்.

◆ஸ்ரீஹரி எங்கு கல்கியாக அவதரிப்பார்?
ஷம்பளம் என்னும் கிராமத்தில், விஷ்ணுயஷ ஸ் என்னும் பிராமணரின் வீட்டில் ஸ்ரீஹரி ‘கலி’ என்னும் ரூபத்தில் அவதரிப்பார்.

◆அவதாரத்தின் நோக்கம் என்ன?
கலியின் தாக்கத்தால் பூமியில் எல்லா இடங்க ளிலும் திருடர்களே நிறைந்திருப்பர். அவர்கள் அனைவரையும் கொல்வதே அவதாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

◆அவர்களை கல்கி எப்படி அழிப்பார்?
குதிரையில் வாளை ஏந்தியவாறு, அனைத்து ஐஸ்வர்யங்களாலும் நிறைந்த கல்கியானவர், பூமியில் நிறைந்திருக்கும் திருடர்களை அழிப்பார்.

◆எவ்வளவு நேரத்தில்?
வெறும் 12 மணி நேரத்தில், லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருந்த கழிவுகளை துடைத் தெறிந்து, அனைத்து துஷ்டர்களையும் கொன்றழிப்பார்.

◆சஜ்ஜனர்களின் நிலைமை?
இரவு வேளையில் சஜ்ஜனர்கள் தூங்கிக்கொ ண்டிருக்கும்போது, தன் உடலிலிருந்து சந்தன த்தை உற்பத்தி செய்து, அந்த சந்தனத்தால் சஜ்ஜனர்களின் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை துடைத்து அழிப்பார்.

◆அனைத்து துஷ்டர்களும் அழிந்தபிறகு என்ன நடக்கும்?
அடுத்த நாள் க்ருதயுகம் துவங்கும்.

◆கலியுகத்தின் முடிவில் பிரளயம் வருமா?
அல்ல. பிரளயம் வராது. பூமி அழியாது. கல்கி அனைத்து துஷ்டர்களையும் அழிப்பார். க்ருதயுகத்தின் துவக்கத்திற்கு உந்துசக்தியாக இருப்பார்.

◆கல்கி அவதாரத்தின் கதையை சுருக்கமாக கூறவும்.
கலியின் ஆவேசத்தால் எல்லா இடங்களிலும் அதர்மம் தலைவிரித்தாடும். பூமிதேவி மிகவும் துக்கமடைவாள். பூமிதேவியின் துக்கத்தை அறிந்து, பிரம்மாதி தேவர்கள் ஸ்ரீமன் நாராய உணனிடம் சென்று முறையிடுவர். சஜ்ஜனர்க ளின் ரட்சணைக்காக ‘கல்கி’ என்னும் பெயரில் அவதாரம் செய்து ஸ்ரீஹரி பூமிதேவியின் துக்கத்தைப் போக்குவார்.விஷ்ணுவின் தசா வதாரங்களில் கடைசியானது கல்கி. 

கலியுகம் மற்றும் க்ருதயுகத்தின் நடுவில் விஷ்ணுயஷஸ் மற்றும் சுமதி என்னும் தம்பதி களுக்கு ‘கல்கி’ என்னும் பெயரில் அவதாரம் செய்வார். பரசுராமரிடமிருந்து அனைத்து கல் விகளையும் கற்று பெருமை அடைவார். இவ ரது பெருமையை மெச்சி ருத்ரதேவர் இவரு க்கு வாள் மற்றும் குதிரையை அளிப்பார். 

பின்னர் சிங்களத்தீவின் ராஜனான ப்ருஹத்ர தனின் மகளான பத்மாவதியை திருமணம் செய்வார்.பூமியின் அனைத்து பாகங்களிலும் வியாபித்திருக்கும் கலியை முற்றிலுமாக அழிப்பார். ஒரே நாளில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநிறுத்தும் கல்கியின் சக்தி நம் கற்பனைக்கு எட்டாதது. 

கலியுகத்தின் கடைசி நாளில், கலியை அழி த்து, க்ருதயுகத்தின் துவக்கத்தில் அனைத்து சஜ்ஜனர்களுக்கும் தர்மத்தின் வழியைக் காட்டும் அவதாரமே ‘கல்கி’.

◆கல்கியை எப்படி பூஜிக்க வேண்டும்?

 ’கல்கி கலே: காலமலாத் ப்ரபாது’ கலியின் தாக்கத்தால் உருவான கழிவுகள் அனைத்தை யும் துடைத்தெறிந்து, என்னை தூய்மைப்படு த்து என்று வணங்கவேண்டும். தசாவதாரத்தி ன் கடைசி ரூபத்தை பலமுறை வணங்குவோ ம். ஒவ்வொரு நொடியும் நமக்குள் தோன்றும் கெட்ட சிந்தனைகளை அழித்து, நல்ல எண்ண ங்களை வளர்க்க அவனை சரணடைவோம்.

தசாவதாரத்தில் ஸ்ரீஹரி காட்டிய பல்வேறு லீலாவினோதங்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நினைத்து மகிழ்ச்சிய டைந்து, மனதில் ஸ்ரீஹரியையே நினைத்தவா று, தசாவதாரத்தின் சிந்தனையை ஸ்ரீமத்வம டத்தின் ஸ்ரீகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம் செய்வோமாக.

◆கல்கி அவதாரம் சொல்லும் செய்தி என்ன?

அதர்மம் தலைவிரித்தாடும்போது, ஸ்ரீஹரி கல்கியாக அவதாரம் செய்து, தர்மத்தை நிலை நாட்டுவார். இது பிரம்மாண்டத்தைப் (உலகத்தைப்) பற்றிய விஷயம். பிண்டாண்ட த்தில் (நம் உடலில்) பிரம்மாண்டத்த்தை ஒப்பி ட்டுப் பார்த்தால் மட்டுமே அவதாரங்களைப் பற்றி சிந்தித்ததன் பலன் கிடைக்கும். 

நம் மனதில் இருக்கும் அதர்ம, அநியாய, ஆதாரம் இல்லாத சிந்தனைகள் ஆகிய கெட்ட குணங்கள் கலியாக தலைதூக்கும்போது, ஸ்ரீஹரி அவற்றை அழிப்பதற்காக கல்கியாக வரவேண்டும். பூமிதேவியைப்போல் நம் புத்தியும் (அறிவு), பிம்பரூபியான ஸ்ரீமன் நாராயணனிடம் முறையிட வேண்டும். 

அப்போது, ஜீவாத்மா என்னும் குதிரையில் ஏறி, மெய்யறிவு (ஞானம்) என்னும் வாளை ஏந்தி மனதில் தலைதூக்கும் கலியை அழித்து, ஸ்ரீஹரி கல்கியாக காட்சி தருவார். இத்தகைய கல்கியின் அவதாரத்தை தினமும் நம் மனதில் நினைத்து அவனை வணங்கவேண்டும். 

◆கல்கி அவதாரத்தின் சிறப்பு என்ன?

கலியை அழிப்பதனால் கல்கி என்னும் பெய ரை பெற்றார். கலியுகத்தில் உள்ள அனைத்து சஜ்ஜனர்களுக்கும் இந்த கல்கிரூபியான ஸ்ரீஹரியே ஆதரவு/ கதியாக இருக்கிறார். கலியுகத்தின் சஜ்ஜனர்களுக்கு கல்கி அவதாரம் கடைசியானது. க்ருதயுகத்தின் சஜ்ஜனர்களுக்கு இதுவே முதலாவதாகும். 

த்வாபர மற்றும் கலியுகத்தின் சந்தியில், ஸ்ரீகி ருஷ்ணன் அவதரித்து அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டினார். கலியுகம் மற்றும் க்ருதயுகத்தின் சந்தியிலும் இதே ஸ்ரீஹரி, அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டு வார். அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்டுபவரான கல்கி ரூபியான ஸ்ரீஹரியை நாம் எப்போதும் நினைக்கவேண்டும். 

நம் மனதில் தசாவதாரங்கள் நிலைத்திருக்க வேண்டும். முதலில், வேதங்களிலிருந்து ஞானத்தைப் பெற்று நம் மனதை நிறைக்க வேண்டும். அதற்காக மத்ஸ்யாவதாரம் ஆக வேண்டும். ஞானத்தின் எடையினால் மனம் அமிழ்கிறது. அதை மேலெடுக்க வேண்டு மெனில், கூர்மாவதாரம் ஆகவேண்டும். ஹிரண்யன் என்னும் கெட்ட சிந்தனையின் அழிப்பிற்காக வராகன் பிறக்கவேண்டும். 

பக்தி என்னும் பிரகலாதனை அருளுவதற்காக நரசிம்மர் அவதரிக்கவேண்டும். ஒவ்வொரு பொருளை சம்பாதிக்கும்போதும் உண்டாகும் கர்வத்தை அழிக்க, வாமனனின் சிறிய பாதங்கள் நம் மனதில் தோன்ற வேண்டும். பற்பல துர்குணங்கள் என்னும் க்‌ஷத்ரியர்க ளை அழிக்க கோடலி பிடித்த ராமன் ஓடி வர வேண்டும். பிறகு நம் மனதில் ராமன் மற்றும் கிருஷ்ணன் இருவரும் வந்து அமரவேண்டும். இவர்கள் நம் மனதில் இருப்பதற்கு பிரச்னை ஏற்பட்டால், புத்தன் மற்றும் கல்கி ரூபங்கள் நம்மை ரட்சிக்க வேண்டும்.

சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து...

தசாவதாரம் இன்றுடன் இனிதே முடிந்தது..
நன்றி நன்றி...   வாழ்க வளமுடன்...

தசாவதாரம் - 9 ( கிருஷ்ண அவதாரம் பாகம் 5)


கிருஷ்ண அவதாரம்.
***********************
நேற்றைய  தொடர்ச்சி...

கிருஷ்ண அவதாரம் பாகம் 5
*******************************

ஹரிஓம் 
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணம். 

ஸ்ரீ கிருஷ்ணனின் அருளினைலே
ஸ்ரீ கிருஷ்ணன் வகையினர் பற்றி 
ஸ்ரீ கிருஷ்ணனை முதன்மையாய்க் கொண்டு 
ஸ்ரீ கிருஷ்ண வகை சமுதாயத்தின் வரலாற்றை ௭ழுதுகிறேன் 
ஸ்ரீ கிருஷ்ண வகை சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திடவே! பெருமை சேர்த்திடுவோம்!

வசுதேவ சுதம் தேவம் 
கம்ச சாணூர மர்தனம்
தேவகி பரமானந்தம் 
கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் 

உலகம் ஒரு வீடு ௭ன்றால், பாரதம் அதன் பூஜை அறை போன்றது ௭ன்று கூறுவதுண்டு. இந்தப் பூஜை அறையின் முக்கிய பகுதி குஜராத் மாநிலம் ஆகும். அம்மாநிலத்திலிருந்து நெடும் பயணம் மேற்கொண்ட 72 விருஷ்ணி சத்திரியர்களின் குடும்பத்தார்கள் வேணாட்டின் தலைநகரான அனந்த சயனத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வந்து சேர்ந்தார்கள். கிருஷ்ண பரமாத்மாத்மாவின் மேல் இருந்த ஆழ்ந்த பக்தியினால், துவராகையிலிருந்து திருவாம்பாடி கிருஷ்ணன் விக்கிரகத்தை பல இடர்பாடுகளையும் ௭திர்கொண்டு ௭டுத்து வந்ததன் மூலம் இவர்களுடைய ஆழ்ந்த ஆன்மீக சக்தியின் வெளிப்பாட்டை உணரலாம். திருவம்பாடி கிருஷ்ணன் விக்ரகத்தோடு வந்தவர்களுக்கு மன்னர் உதய மார்த்தாண்ட வர்மா 'கிருஷ்ணன் வகக்காரர்' என்ற புதிய பெயரை சூட்டினார். இவர்களின் வருகைக்கு பின்பு தான் வேணாட்டில் ஸ்ரீ கிருஷ்ணனின் (வைணவ) வழிபாட்டில் ஓர் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் இவர்கள் தென் திருவிதாங்கூரில் (கன்னியாகுமரி மாவட்டம்) இடம்பெயர்வதற்கான சூழ்நிலை உருவாகியது.

யதா யதா ஹி தர்மஸ்ய
க்லானிர்பவதி பாரத
அப்யுத்ததானமதர்மஸ்ய
ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம். (4.7)

“ஹே பாரத! எப்பொழுதெல்லாம் தர்மம் குறைந்து அதர்மம் மேலோங்குகிறதோ, அப்பொழுதெல்லாம் என்னை நானே தோற்றுவித்துக் கொள்கிறேன்”

பரித்ராணாய ஸாதூநாம்
வினாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே (4.8)

௭ங்கெல்லாம் தர்மம் தாழ்ந்து அதர்மம் மேலோங்கும்கிறதோ, அங்கெல்லாம் தர்மத்தை காக்கவும் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும் நான் வருவேன் என கண்ணன் கீதையில் கூறியுள்ளார். கிருஷ்ணன் உயிர்வாழ்ந்த காலத்திலே வடிவமைக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணரின் விக்கிரகத்தை நம் முன்னோர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில் வளாகத்தினுள் அமைந்துள்ள திருவாம்பாடி கிருஷ்ணன் கோவிலில் பிரதிஷ்டை செய்திருப்பதை நாம் இன்று பார்க்கமுடியும்.

இக்கோவிலில் கிருஷ்ணர் தன் வலது கையில் சட்டையுடனும், இடது கையைத் தன் இடது தொடை மேல் வைத்தும் பார்த்த சாரதியாக நின்று அருள் பாலிக்கிறார். கிருஷ்ண வகை சமுதாயத்தினரின் மூதாதையர்கள் இந்த விக்கிரகத்தை துவாரகையில் இருந்து ௭டுத்து வந்துள்ளனர். ஆகையினால், கிருஷ்ண வகை சமுதாயத்தை சார்ந்த ௭ல்லா நபர்களும் திருவாம்பாடி கிருஷ்ணன் ஆலயத்திற்கு வாழ்வின் ஒரு முறையாவது சென்று வணங்கி, ஸ்ரீ பார்த்த சாரதி அருள்பெற்று நாம் நம் மூதாதையர்களின் ஆழ்ந்த பக்தியையும், ஆன்மீக பலத்தையும், நினைவுகூறுவோமாக....! 

சற்று விரிவாக பார்ப்போம். 

கிருஷ்ண வகயினரின் பூர்வீகம் வடஇந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகாபுரியாகும். துவாரகபரியில் வாழ்ந்த யாதவரின் ஒரு பிரிவினரை 'விருஷ்ணி வம்சத்தினர்' என்று அழைக்கப்பட்டனர். துவாரகபரியில் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆட்சிக்குட்பட்டப் பகுதிகளிலுள்ள அரண்மனை, கோவில் ஆகியவற்றின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு பொறுப்புகளை 'விருஷ்ணி' வம்சத்தினர் ஏற்று கண்ணபிரானுக்கு உதவினர்.

ஸ்ரீ கிருஷ்ணனின் வாழ்க்கையின் இறுதி காலத்தில் 'விருஷ்ணி' வம்சத்தவர்களிடையே ஒற்றுமை குலைந்து தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டனர். இதனை கண்டு மனம் வருந்திய கண்ணபிரான் தன்னுடைய தேரோட்டியான 'தாருகனை' அழைத்து தன் மறைவிற்கு பிறகு துவாரகபுரி கடலில் மூழ்கிவிடும் என்றும், அதனால் இங்கு உள்ளவர்களை தங்கள் உறவினர் மற்றும் உடைகளுடன் அர்ஜுனனின் பாதுகாப்பில் இந்திரப் பிரஸ்தத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். 

ஸ்ரீ கிருஷ்ணனின் அவதாரம் முடிந்ததும் துவராகைக் கடலில் மூழ்கியது. அதில் ௭ஞ்சியவர்கள் அர்ஜுனனுடன் இந்திரபிரஸ்தம் சென்றார்கள். பிறகு அவர்களில் சிலர் ஸ்ரீ கிருஷ்ணனின் பேரன் 'வஜுனன்' (வஜ்ரநாபா) ௭ன்பவரின் தலைமையில் உத்தரமதுரா, ஆம்பாடி போன்ற இடங்களில் சென்று வாழ்ந்தார்கள். இவர்கள் தான் தற்போதைய கிருஷ்ணன் வகயினரின் மூதாதையர்கள் என்று கூறப்படுகிறது. குஜராத் மாநிலத்திலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நீண்ட பயணம் செய்த இவர்கள் ௭வ்வாறு திருவனந்தபுரத்திற்கும் அதன் பின்னர் தென்திருவிதாங்கூருக்கும் வந்தார்கள் ௭ன்பதற்கு மாறுபட்ட கருத்துக்களை வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள்.

இவர்கள், குஜராத்தில் இருந்து நேராக திருவனந்தபுரத்திற்கு வரவில்லை என்றும், தென்னிந்தியாவின் சில இடங்களில் சென்று அங்கு சிலகாலம் தங்கி இருந்த பிறகு, இங்கு வந்தார்கள் என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இத்தகைய மாறுபட்ட கருத்துகளைத் திறனாய்வு செய்து ஓர் முடிவுக்கு வருவது இன்றியமையாதது ஆகும். 

நமது வரலாற்றை, நமது பாரம்பரியத்தை நாம் தெரிந்து கொள்ளாமல் உலக வரலாற்றைத் தெரிந்து கொள்வதில் பயனில்லை. வரலாற்றையும் பாரம்பரியத்தையும் மறந்த ௭ந்த சமுதாயமும் வளர்ச்சி அடையாது ௭ன்றார் மாசேதுங். 

கிருஷ்ணன் வம்சஜர்களின் ஆரம்ப கால வரலாற்றை மானுடவியல் முறை ௭ன இரண்டு குணத்தில் அணுகலாம். தென்னிந்தியாவில் கால்நடைகளை மேய்ப்பதில் அதிகமாக ஈடுபட்டு வந்த யாதவர் சமுதாயத்தினரின் ஒரு பிரிவு வேணாட்டிற்கு வந்து குடியேறினார்கள் என்றும் மானுடவியல் அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இவர்களில் ஆண்களை 'ஆயன்' என்றும் பெண்களை 'ஆய்ச்சி' என்றும் அழைக்கப்பட்டதாக '' ஆயகட்டு' என்று சொல்லப்படும் "settlement" பதிவேடு குறிப்புகளில் காணப்படுகிறது. 

"ஆகாத்தோம்பி ஆப்பயன் அளிக்கும் 
கோவலர் வாழ்க்கையோர் கொடும்பாடில்லை "

௭னச் சிலப்பதிகாரமும் ஆயர்களின் வரலாற்றுக் காட்டுகிறது. 

கிருஷ்ணன் வகையினரின் முன்னோர்கள் 'முல்லை நில இடையர்களாக' இருத்தல் வேண்டும் என்றும், பல்லவர்களின் தலைநகரான காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள இடங்களில் இருந்து குடிபெயர்ந்து வேணாட்டிற்கு வந்தவர்கள் ௭ன்றும் ௭ட்கார் தர்ஸ்டன்(Edger Thurston) கருத்து தெரிவிக்கிறார். 

கிருஷ்ண வம்சஜர் (கிருஷ்ண வக சமுதாயத்தினர்)சந்திர வம்சத்தைச் சார்ந்த ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாத்மாவின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ஆவார்கள். 
இவர்களில் சிலர் குறுநில மன்னர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இன்றைய குமரி மாவட்டப் பகுதியில் 'வள்ளுவ நாடு ' என்ற பெயரில் ஒரு நாடு இருந்துள்ளது. கிபி 9ஆம் நூற்றாண்டில் ஆயர்குல மன்னர்கள் இந்த நாட்டை ஆண்டு வந்தார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதைத்தவிர கிறிஸ்து வருடம் ஆரம்பமாவதற்கு முன்னாலே யாதவர்களில் சிலர் வேணாட்டிற்கு வந்து குறுநில மன்னர்களாகவும் இருந்துள்ளார்கள்.திருவிதாங்கூரின் பெரும்பகுதிகளை 'ஆய் அந்திரான்' என்ற யாதவ மன்னர் கிறிஸ்தவ வருடம் ஆரம்பமாவதற்கு முன்னால் ஆண்டு வந்ததாக டாக்டர். ௭ன். குஞ்சன்பிள்ளை கருத்துத் தெரிவிக்கிறார். There is reason to believe that these people once belonged to Yadhava tribe, one of the chief 'Ay Andiran' ruled a large portion of Travancore before the commencement of Christian Era - [Census report of Travancore. 1931.vol. 1,page. 372 by Dr. N. Kunjan Pillai.] 

நச்சி நாக்கியர் (கி. பி. 14) ௭ழுதிய தொல்காப்பிய உரையில் ஆய் மன்னர்களைச் சார்ந்தவர்கள், அகஸ்தியர் வழி நடந்து, துவராகையிலிருந்து வந்தவர்கள் ௭ன்று கூறுகிறார். விக்கிரமாதித்திய ஒரு வருகுணனின், 'பாலிய சாசனத்தில் (கல்வெட்டு கி. பி 925) நாகர்கோவில் தொடங்கி வடக்கு திருவல்லா வரையுள்ள பகுதிகளை யாதவகுலம் அல்லது விருஷ்ணி வம்சத்தைச் சார்ந்த ஆய் மன்னர்கள் (துவராகையிலிருந்து வந்தவர்கள்) ஆண்டு வந்ததாக கூறப்படுகிறது. 

ஸ்ரீ கிருஷ்ணரின் சொந்த ஊரான ஆம்பாடியிலிருந்து அதன் சுற்று வட்டார ஊர்களிலிருந்தும் 'விருஷ்ணி' வம்சத்தினர் நேராக வேணாட்டிற்கு (ஸ்ரீ வாழுங்கோடு) வந்தார்கள் என்று மரபு மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள். தற்பொழுது குஜராத் மாநிலத்தில் காஞ்சிபுரம், ஆயர்பாடி போன்ற பெயர்களைக் கொண்ட ஊர்கள் உள்ளன. ஸ்ரீ கிருஷ்ணரின் பின் தோன்றல்களான ஆயர்களும், ஆய்ச்சியர்களும் அங்கிருந்து நேராக வேணாட்டிற்கு வந்து குடியேறினார்கள் என்று வரலாற்று ஆசிரியர் முனைவர் சுப்ரமணிய அய்யர் கருத்துத் தெரிவித்துள்ளார். 

ஆய் மன்னர்கள் கி. பி 2-ல், பரளிக்கும் (பம்பா), கன்னியாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதியை ஆண்டு வந்ததாக டோமினி கூறுகிறார். அத்தோடு இவர்களை (அயோயி - அடிணிடி) ௭ன்றும் குறிப்பிடுகிறார். இவர்களது தலைநகரம் 'ஆயக்குடி' (செங்கோட்டை) ஆகும். ஆய் ஆந்திரான், திதியன், அதியன், விக்கிரமாதித்திய வரணன் போன்ற ஆய் மன்னர்களைப் பற்றி சங்க கால இலக்கியங்களிலும் குறிப்புகள் காணப்படுகிறது. 

மன்னர் விக்ரமாதித்திய வரகுணன் (கி. பி 885-925) திருவிடைக்கோடு சிவன் கோவிலுக்கு நந்த விளக்கு ஏற்றுவதற்கு தேவையான நெய் கிடைக்க 25 பசுமாடுகளை அளித்ததாக திருவிடைக்கோடு கல்வெட்டு தெரிவிக்கிறது. ஆகையினால் திருவிடைக்கோடு சிவன் கோவில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மிக பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாக கருதப்படலாம். 

கிருஷ்ண வகயினரின் குடிப்பெயர்ச்சி பற்றி திருவனந்தபுரம் ராணி அஸ்வதித் திருநாள் கௌரி லட்சுமிபாய் தம்புராட்டி மற்றொரு கருத்தினைத் தெரிவித்துள்ளார். துவராகை கடலில் மூழ்கிய போது 'விருஷ்ணி' வம்சத்தினரின் தலைவர் கிருஷ்ணவர்மன் ௭ன்பவரின் தலைமையில் 72 குடும்பத்தார்கள் குஜராத் மாநிலத்தில் 'கத்தியவார்' போன்ற கடலில் மூழ்காத ஊர்களுக்குச் சென்று வாழத் தொடங்கினார்கள். ஒரு நாள் இரவில் கிருஷ்ணவர்மனின் கனவில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தோன்றி தெற்குத் திசையைச் சுட்டிக் காட்டி பரசுராமன் படைத்த கேரளத்தின் ஒரு பகுதியான 'ஸ்ரீ வாழும் கோட்டின்' தலைநகரான அனந்தசயனத்திற்குச் செல்ல வேண்டாமென்றும் "நான் அங்கு வந்து உங்களை அருள் புரிந்து காப்பேன்" ௭ன்றும் கூறி மறைந்துள்ளார். 

ஸ்ரீ கிருஷ்ணனின் அருள்வாக்கினை ஏற்றுக்கொண்ட கிருஷ்ணவர்மன் 72 குடும்பத்தினர்களுடன் தெற்கு திசை நோக்கிப் பயணம் செய்து பல்லவர்களின் தலைநகரான காஞ்சிபுரத்திற்கு வந்து சேர்ந்தார் என்று முனைவர் திரு. சுப்பிரமணிய ஐயர் கருத்து தெரிவிக்கிறார். இவர்கள் தங்களுடன் 'திரு ஆம்பாடி கிருஷ்ணன்' விக்கிரகத்தையும், சாளிக் கிராமத்தையும் (பஞ்சலோக உருவம்) ௭டுத்து வந்துள்ளார்கள். 

விருஷ்ணி வம்சஜர் குஜராத்திலிருந்து நேராக வேணாட்டிற்கு வந்தவர்களா அல்லது தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் பகுதிகளில் சில காலம் தங்கிய பின் வேணாட்டிற்குச் சென்றார்களா? என்ற இரண்டு கருத்துக்களையும் ஆராயும்போது தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் தங்கிச் சென்றார்கள் என்பதற்குப் பலச் சான்றுகள் கிடைத்துள்ளன. 

அறிஞர் ௭ட்கார் தர்ஸ்டன் ஏழு தொகுதிகளாக ௭ழுதிய மிகப்பெரிய வரலாற்றுப் புத்தகமான தென்னிந்தியக் குலங்களும், குடிகளும் [Castes and Tribes of Southern India] ௭ன்பதில் கிருஷ்ணன் வகையினரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் வேணாட்டில் 'ஸ்ரீ வாழுங்கோடு' என்னும் இடத்தில் குடியேறினர். பின்னர் இவர்களின் தலைவருக்கு "பல்லவராயன்" ௭ன்ற பட்டப்பெயரை மன்னர் வழங்கினார். இந்த பட்டப்பெயர் இவர்கள் பல்லவ நாட்டிலிருந்து குடிபெயர்ந்து வந்தார்கள் என்பதை குறிப்பாக உணர்த்துகிறது என்று ௭ட்கார் தர்ஸ்டன் கருத்துத் தெரிவித்துள்ளார். 

இதே கருத்தை முனைவர். சுப்பிரமணிய ஐயர் உறுதி செய்கிறார். [ Censes report 1901-vol.1.by.Dr.Supramaniya Ayyar]. 

குஜராத்திலிருந்து வேணாட்டின் தலைநகரான "அனந்தசயனநகரிக்கு" விருஷ்ணி வம்சத்தினர் (கிருஷ்ண வகயினர்) வந்த பிறகு தான் இங்கு ஸ்ரீ கிருஷ்ண வழிபாட்டில் ஓர் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை கிளாரியன்ஸ் மெலோனி, ஸ்ரீ உண்ணி ராஜா போன்ற வரலாற்று ஆசிரியர்கள் உறுதி செய்கின்றனர். ஐந்தாம் நூற்றாண்டு வரை வேணாடு, குட்டநாடு, குடநாடு, பூமி நாடு, கக்க நாடு ௭ன்ற ஐந்து நாடுகள் இணைந்து கேரளமாக இருந்தது. இன்றைய திருவனந்தபுரம் மாவட்டமும் மற்றும் கொல்லம் வட்டமும், ஒருங்கிணைந்த பகுதியாக வேணாடு விளங்கியது. குஜராத்திலிருந்து வேணாட்டிற்கு வந்தவர்களின் வழித்தோன்றல்கள் தற்பொழுது பெருமளவில் வேணாட்டின் பண்டைய தலைநகரான பத்மநாபுரத்தைச் சுற்றியுள்ள இடங்களில் வாழ்ந்து வருகின்றனரென்று திருவனந்தபுரம் ராணி அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமிபாய் கருத்து தெரிவிக்கிறார். 

[Seventy two families reached venadu, ushering the Sree Krishna Cult. This may have been revival of Sree Krishna Workship. This famous movement has been confirmed by historians like Clarience Maloney, ' Sri Unni Raja ' etc. The decendent of these early Gujarath immigrants still exist in good numbers in and around Padmanabapuram, the one time Capitol of Travancore and now in Tamilnadu. [princess Aswathi Thirunal Gowri Lakshmi Bayi-2000]

இவர்கள் ஸ்ரீ கிருஷ்ண வழிபாட்டில் அதிக ஈடுபாடு காட்டியதால் மன்னர் வேணாட்டில் உள்ள பெரும்பாலான கிருஷ்ணன் கோவில்களில் பூஜை, நிர்வாகம் ஆகிய குறிப்பிட்டுப் பணிகளை இவர்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் என்று ௭ட்கார் தர்ஸ்டன் கருத்துத் தெரிவித்துள்ளார். 

இராஜஸ்தான் மாநிலத்தில் விருஷ்ணி வம்சத்தினர் (கிருஷ்ண வகயினர்) 

குஜராத் மாநிலத்திலிருந்து 72 குடும்ப அங்கத்தினர்கள் வேணாட்டை நோக்கி தங்கள் நெடும் பயணத்தை மேற்கொண்டனர். இந்தப் பயணம் கி. பி. 8ஆம் நூற்றண்டின் முன்னதாகவே தொடங்கியிருக்கலாம். கி. பி. 8ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராக கொண்டு பல்லவ நாட்டைச் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர். இவர்கள் பல்லவ நாட்டிற்கு வரும் வழியில் இராஜஸ்தான் மாநிலத்தில் சிறிது காலம் தங்கினர். அங்குள்ள ஜாட்ஸ் (Jats), பீல்ஸ் (Bhils) போன்ற பழங்குடி மக்களோடு அவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். ௭னவே, அவர்களுடைய நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொண்டனர். இன்றும் இவர்கள் தம் வாழ்வில் அப்பழக்கங்களைப் பின்பற்றுகின்றனர்.

பழக்க வழக்கங்கள் :

திருமணத்தன்று திருமணம் செய்ய போகும் மணமகன் தன் தாயின் பாதங்களை நீரினால் கழுவி அந்த நீரினைப்பருகி தாயின் ஆசிர்வாதம் பெற்ற பின் மணமாலையைச் சூடிக்கொண்டு திருமண மேடைக்கு செல்வான். இப்பழக்கம் இராஜஸ்தான் மக்களிடமிருந்து பின்பற்றப்பட்ட பழக்கம் ௭ன்று நம்பப்படுகிறது. மேற்கூறிய இப்பழக்கம் ராஜஸ்தானிலுள்ள ஜாட்ஸ் (Jats) இனத்தவர்கள் இன்றும் பின்பற்றி வருகின்றனர். [Censes of India 1901.vol.XXVI Trivancore page. 336]

இப்பழக்கத்தால் கிருஷ்ணன் வக சமுதாயத்தினர் பண்டைய காலத்தில் இருந்து பெண்களுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் அளித்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. பெற்ற தாயை போற்றும் குணமும் இச்சமயத்தனிரிடம் இருந்தது. கிருஷ்ணன் வக சமுதாயத்தினரிடம் இறந்து போனவர்களைப் பற்றி ஒப்பாரிப்பாடும் பழக்கம் இருந்தது. இவர்கள் பாடும் ஒப்பாரிப் பாடலில் இறந்தவர்களின் குணநலன்கள், புற அழகு, நற்செயல்கள் போன்றவற்றை கோர்வையாகக் கோர்த்து கவிதையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பழக்கம் ராஜஸ்தானில் பில்ஸ் (Bhils) இனத்தவரிடமிருந்து பின்பற்றப்பட்ட பழக்கம் ௭ன்று நம்பப்படுகிறது. [Encyclopedia of India Vol. IV P. 55)]

தற்காலத்தில் கிருஷ்ண வகயினர் வாழும் பிடாகைகளின் (ஊர்களின் நிர்வாகங்களில்) ஊர்தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியவர்கள் இடம்பெறுகின்றனர். இவர்கள் திருமணம், கோவில் நிர்வாகம் போன்ற பொறுப்புகளையும், அந்தப் பிடாகைகளில் வாழ்கின்ற மக்களின் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கின்றனர். இத்தகைய சாதியாட்சி முறை (Caste Govt.) ராஜஸ்தானிலுள்ள மலைசாதியினினரிடமிருந்து பின்பற்றப்பட்ட பழக்கம் ௭ன்று நம்பலாம். [Censes of India 1901.vol.XXIV Travancore page. 336].

நானும் #கிருஷ்ணவகை தான்.....

என்ன ஜாதி ரீதியான பதிவு போடுகிறேன் பார்க்கிறீர்களா இல்லை ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு அடையாளம் இருக்கும்.

 இப்படி ஒரு ஜாதி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவும்....

இத்தகவலை கொடுத்து உதவிய  கிருஷ்ணவகை முகநூல் இளைஞர்களுக்கு நன்றி....... 

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணம்.

**************------*****************


தசாவதாரம்-9 (கிருஷ்ண அவதாரம் பாகம் 4)


கிருஷ்ண அவதாரம்.
***********************
 தொடர்ச்சி...

கிருஷ்ண அவதாரம் பாகம் 4
*******************************
எமலோக வாசலில், எமதர்மராஜா அவர்களை தண்டனிட்டு வரவேற்றான். 

காலனே ! எங்கள் குருவின் மகன் இங்கிருந் தால் உடனே என்னுடன் அனுப்ப வேண்டும், என்றார். தங்கள் கட்டளை என் பாக்கியம், என் றவன் சிறுவனை அழைத்து வந்தான். அவர்க ள் சிறுவனை குருவிடம் ஒப்படைத்தனர்.  

சாந்தீபனி முனிவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சீடர்களே, நீங்கள் ஆசிர்வா தத்துக்கு அப்பாற்பட்டவர்கள். இருப்பினும், குரு என்ற முறையில் உங்களை ஆசிர்வதிக்கி றேன். நீங்கள் இந்த யுகத்தில் பேசப்படுபவர்க ளாக இருப்பீர்கள். உங்கள் போதனைகள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும், என்றார். 

பயிற்சி முடிந்ததும் மதுராவுக்கு அவர்கள் திரும்பினர். தேவகியும், நந்தகோபரும் தங்கள் மக்களைப் பார்த்து மகிழ்ந்தனர். மாடு மேய்த்த சிறுவர்களுக்கு, கல்வி கற்றுத்தந்ததில், தந்தை வசுதேவருக்கு மிகுந்த திருப்தி. 

கிருஷ்ணர் மதுராவில் சூழ்நிலை காரணமாக இருந்தாலும், விருந்தாவனத்தில் தந்தை, தாய் மற்றும் கோபியருக்கு கொடுத்த வாக்குறுதி மட்டும் உறுத்திக்கொண்டே இருந்தது. அங்கு வருவதாகச் சொல்லியிருந்த வாக்குறுதியே அது. 

விருந்தாவனத்தில் யசோதை, நந்தகோபர் மட்டுமின்றி, கோபியர்களும் கிருஷ்ணரின் நினைவிலேயே இருந்தனர். பார்க்கும் இடத்தி எல்லாம் அந்த பரந்தாமன்தான் தெரிந்தான். 

அங்கே ராதா என்ற கோபிகை வசித்தாள். அவள் கிருஷ்ணரைத் தவிர வேறு எதையும் நினைப்பவள் இல்லை. உண்ணும் போதும் கிருஷ்ணா, உறங்கும் போதும் கிருஷ்ணா, எந்த செயல், என்ன நடந்தாலும் கிருஷ்ணா... கிருஷ்ணா, கிருஷ்ணா, இப்படி கிருஷ்ணனை யே நினைத்துக் கிடந்தவள் அவள். 

இவள் பிறந்த பிறகு கண்விழிக்கவே இல்லை யாம். ஒருநாள் யசோதை கண்ணனை இடுப்பில் சுமந்தபடி இவள் வீட்டுக்கு வரவே, விழித்துப் பார்த்தாளாம். அப்படி ஒரு தீராத காதல் அந்த மாயவன் மீது. நெஞ்சுக்குள் அவ னது திருவடிகளைப் பற்றி நினைவு மட்டுமே அவளுக்கு. கிருஷ்ணர் விருந்தாவனத்தில் இருந்தபோது, அவளை தழுவி இனிய மொழி பேசுவார். அவர் இங்கிருந்து சென்றதில் இரு ந்து, கலங்கிப்போய் இருந்தாள். 

கிருஷ்ணரின் நினைவு அவளை வாட்டியது. மதுராவுக்கு கிருஷ்ணரின் பெரியப்பா பிள்ளையான (வசுதேவரின் சகோதரர் மகன்) உத்தவர் என்பவர் வந்தார். இவர் தோற்றத்தில் கிருஷ்ணரை ஒத்திருப்பார். அவர்கள் சகோதரர்கள் என்றாலும், நண்பர்கள் போல் பேசிக்கொள்வார்கள்.

உத்தவரே, நீர் உடனே விருந்தாவனம் செல்ல வேண்டும். 

என்னால் தற்போதைக்கு அங்கு வர இயலாது என்பதைச் சொல்ல வேண்டும். குறிப்பாக என் தாய், தந்தை மற்றும் என்னையே உயிராய்க் கருதி, நான் வருவேன் என்ற நம்பிக்கையில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் கோபியருக்கு ம் ஆறுதல் சொல்ல வேண்டும். 

நான் நிச்சயம் அங்கு வருவேன் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். காரணத்துடன் தான் நான் அங்கு வரவில்லை. கம்சனை கொ ன்றதால், அவனது ஆதரவாளர்கள் என்னை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டுள்ள னர். 

நான் மதுராவில் இருந்தால், இங்கு தான் அவ ர்கள் வருவார்கள். விருந்தாவனம் சென்றால், பாவம், ஏதுமறியா அப்பாவி ஜனங்களும், பசுக்களும் துன்பப்படுவர். அதற்காகவே, நான் வரவில்லை என்பதை எடுத்து சொல்லுங்கள், என்றார். 

உத்தவர் அதை ஏற்று ரதத்தில் புறப்பட்டார். அவர் விருந்தாவனத்தை அடைந்து, நந்தகோ பரிடம் கிருஷ்ணர் சொன்னதை எடுத்துச் சொன்னார். 

பின்னர், கோபியரை சமாதானம் செய்ய அவர் சென்றார். ராதாவிடம் சென்று, தாயே, உன் கிருஷ்ணன் உன்னை மட்டுமல்ல, இங்கிருக்கு அனைத்து கோபியர்களையும் பார்க்க ஆவல் கொண்டுள்ளார். விரைவில் உங்களை காண வருவதாகச் சொல்லியுள்ளார். 

அந்த தகவலை அறிவித்து போகவே இவ்வூர் வந்தேன், என்றவர், மதுராவில் அவன் நிகழ்த் திய வீரசெயல்களை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லச் சொல்ல, கோபியர்களின் தாபம் மேலும் அதிகமானது. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகையில் அவரை உயர்த்திப் பேசினாள். அதை ரசித்துக் கேட்டார் உத்தவர். 

கிருஷ்ணரை புகழ்ந்து பேசுவதைக் கேட்டாலே புண்ணியம் கிடைத்து விடும். அதுபோல் தான், உத்தவரின் நிலையும் அமைந்தது. உத்தவர் பிரியாவிடை பெற்று ஊர் திரும்பினார். கிருஷ் ணரிடம் கோபியர் நிலை பற்றி எடுத்து சொன்னார். 

இதன்பிறகு ஒருநாள், தான் மதுராவுக்குள் நுழைந்த அன்று, தனக்கு சந்தனம் தடவி உபசரித்த கூனிப் பெண்ணான குப்ஜாவின் இல்லத்துக்கு கிளம்பினார். குப்ஜா, கிருஷ்ண ரை இன்முகத்துடன் வரவேற்றாள். 

அவரை ஆசனத்தில் அமர வைத்தாள். அவரு க்கு சந்தனம் பூசினாள். வாசனைத் திரவியங் களை தடவினாள். இது அவளது தொழில். அவள், தான் வாழ்ந்த நாட்டின் மன்னனுக்கு சந்தனம் பூசும் தொழிலைச் செய்பவள். கிருஷ் ணரை அவள் ஒரு கட்டிலில் அமர வைத்தாள். ஒரு கிண்ணம் சந்தனத்தை எடுத்து அவர் மேல் பூசினாள். 

அன்பானவரே என்னை ஏற்றுக்கொள்ளும் என்று கெஞ்சினாள். கிருஷ்ணர் சிரித்தார். அவளை அவர் தொடவில்லை. அவரது பாதங்களை தொட்டு வணங்கினாள். இச்சை உணர்வுடன் அந்த பாதங்களை எடுத்து சற்றே நாணத்துடன் தன் மார்பில் வைத்தாள். 

அவ்வளவுதான். அவளது இச்சை உணர்வுகள் மறைந்து இப்போது குப்ஜா புது மனுஷியாகி விட்டாள். கிருஷ்ணரை மனதார துதித்தாள். அவளது குணமே மாறிப்போயிருந்து. குப்ஜா விடம் விடை பெற்றார் கிருஷ்ணர். அவரைத் தன்னுடனேயே தங்கும்படி அவள் வற்புறுத்தி னாள். 

அது தன்னால் இயலாதென்ற கிருஷ்ணர், தன்னை மதுராபுரிக்கு கம்சன் உத்தரவின் பேரில் அழைத்து வந்த அக்ரூரனின் இல்லத் துக்கு புறப்பட்டார். அக்ரூரர் மிகச்சிறந்த ராஜதந்திரி. கிருஷ்ணரின் மகாபக்தர். அவர், கிருஷ்ணரை தகுந்த முறையில் வரவேற்று அவரது பாதத்தை கழுவி தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டார். 

அவரது பாதத்தை தன் மடியில் தூக்கி வைத்து வருடினார். கண்ணீர் மல்க அவரைப் பிரார்த் தித்தார். கம்சனையும் அவனது கொடிய நண்ப ர்களையும் கொன்றதற்காக நன்றி கூறினார். அக்ரூரரை மிக முக்கிய காரியம் நாடியும் கிருஷ்ணர் பார்க்க வந்திருந்தார்.

கிருஷ்ணரின் மைத்துனர்களான பாண்டவ ர்கள். ஹஸ்தினாபுரத்தில் வசித்து வந்தனர். ஹஸ்தினாபுரம் என்றால் யானைகள் நிறை ந்த இடம். யானைகள் கட்டிக் காக்க நிறைய செல்வம் வேண்டும். அந்தளவுக்கு செல்வம் படைத்த பூமி அது. 

பாண்டவர்களுக்கு எதிராக அவர்களது பெரிய ப்பா திருதராஷ்டிரனின் மக்கள் கவுரவர்கள் செயல்பட்டு வந்தனர். அவர்கள் பாண்டவர்க ளின் பூமியை அபகரித்திருந்தனர். இதுபற்றி விசாரித்து, திருதராஷ்டடரனுக்கு நல்லறிவு புகட்ட தகுதியானவர் அக்ரூரர் என்பதை உணர்ந்திருந்தார் கிருஷ்ணர். 

மேலும் அவர் பாண்டவர்களின் தாய் குந்திக் கும் உறவினர். அதை அக்ரூரரிடம் எடுத்துச் சொன்னார். அவரது கட்டளையை ஏற்ற அக்ரூரர் சில நாட்களிலேயே ஹஸ்தினாபுரம் புறப்பட்டு விட்டார். 

திருதராஷ்டிரனின் சகோதரர் விதுரர் நியாய த்துக்கு கட்டுபட்டவர். அவர் மூலமாக, ஹஸ்தி னாபுரத்தில் நடக்கு விஷயங்களை அறிந்து கொண்டார். அக்ரூரர் அதனால் தான் நியாய த்தைப் பேசும் விதுரரை தொடர்பு கொண்டார். 

பின்னர் குந்தியை சந்தித்து நடந்த விஷயங்க ளை அறிந்தார். திருதராஷ்டிரன் பிள்ளைப் பாசத்தால், பாண்டவர்களைக் கொல்ல திட்டமி டுவதை உறுதி செய்தி பின்னரே திருதரா ஷ்டிரனிடம் சென்று அறிவுரை வழங்கினார். அவன் செய்வது நியாயமல்ல என்பதை ஆணி த்தரமாக எடுத்துச் சொன்னார். 

அப்போது திருதராஷ்டிரன் தன் தவறை உணர்ந்திருப்பதை ஒப்புக் கொண்டான். ஆனாலும் அவன் அவரிடம், " அக்ரூரரே,உமது போதனைகள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள ப்பட வேண்டியவை என்பதை நானறிவேன். ஆனாலும், ஒருவனுக்கு மரணம் என விதிக்க ப்பட்டிருக்கும் வேளையில் யார் அறிவுரை சொன்னாலும் அதனால் பயனில்லாமல் போய்விடும்.." 

' அந்த அறிவுரைகள் அமுதம் என்று தெரிந்தாலும் அதை அவன் ஏற்க மாட்டான். உமது அறிவுரைகளை நான் ஏற்காதது கூட அந்த கடவுளின் சித்தம் தான். ஏனெனில், கடவுளின் சித்தத்தை தடுத்து நிறுத்தும் சக்தி யாருக்கும் இல்லை. அது நம் இருவருக்கும் பொருந்தும். அறிவுரை சொல்பவனும், பெறுபவனும் கூட அதற்கு விதிவிலக்கல்ல. பூமியில் பாவிகளை குறைக்க யதுவம்சத்தில் பரமாத்மா தோன்றியுள்ளதை நான் அணிந்தி ருந்தும் என்னால் ஏதும் செய்ய முடியாமைக்கு வருந்துகிறேன்,.." என்றான். திருதராஷ்டிரன் நிர்ப்பந்தத்தின் பிடியில் இருக்கிறான் என்பதை அக்ரூரர் அறிந்து கொண்டார். 

திருதராஷ்டிரனும் தன் பிள்ளைகளைக் காவு கொடுப்பதற்கென்றே நிர்ப்பந்தத்தின் பிடியில் சிக்கியிருந்தான். அக்ரூரர் மதுராவுக்கு திரும்பி, கிருஷ்ண பலராமரிடம் விஷயத்தைச் சொன்னார். 

போரைத் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்த கிருஷ்ணர், பாண்டவர்களுக்காக பலவகையில் போராடி வெற்றி ஈட்டிக் கொடுத்தார். இந்த போர்க்களத்திலே கீதை என்னும் வாழ்க்கையின் யதார்த்த நிலையை உணர்த்தும் அருமருந்தையும் தந்தார்.

கிருஷ்ணர் நிகழ்த்திய லீலைகள் கொஞ்சமா, பக்தர்களை பரிசோதித்து பார்ப்பதில் அவனுக்கு நிகர் அவனே. ஆனால், அந்த பரந்தாமனையே பரீட்சித்து பார்த்து விட்டான் ஒரு பக்தன். அவன் தான் சகாதேவன். பாண்ட வர்களில் விடாக்கண்டன் கொடாக்கண்டன் என்றால் இவன் தான். 

கவுரவர்களை அழிக்காவிட்டால் தலை முடிக்க மாட்டேன் என அடம் பிடக்கிறாள் திரவுபதி. கிருஷ்ணா இவர்களுக்கு உதவி செய்பவர் தான். ஆனால், தன் சொந்த அத்தை குந்தி உள்ளிட்ட அனைவரின் பக்தியையும் ஆழம் பார்ப்பவர். தர்மர் உத்தமர். அவரையும் விட்டு வைக்காதவர். 

ஆனால், சகாதேவனிடம் மட்டும் அவரது சோதனைப்படலம் எடுபடவில்லை. உன்னை விட்டால் யாருமில்லை, எனக்கு ஒன்றும் தெரியாது, நீ என்ன செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறாயோ அதுதான் நடக்கப் போகிறது என்பது மட்டுமே அவன் வாயில் வரும் வார்த்தை.

பாண்டவர்கள் காட்டில் வாசம் செய்த போது, திரவுபதி கேட்டாளே என்பதற்காக, ஒரு நெல்லி க்கனியைப் பறித்துக் கொடுத்து விட்டான் அர்ஜுனன். அது ஆண்டுக்கொரு முறை காய்க்கும் அபூர்வக்கனி என்ற விஷய மும், அமித்ர முனிவர் என்பவரே அதைச் சாப்பிட்டு வந்தார் என்ற விபரமும் இருவரு க்கும் தெரியாது. 

அவர்கள் கனியைப் பறித்து விட்டதைப் பார்த்த சில முனிவர்கள், நீங்கள் அமித்ரரின் சாபத்திற்கு ஆளாவது உறுதி என சொல்லி விட்டனர். பறித்த இடத்திலேயே வைத்து விட லாம் என்றால், அது நடக்கிற காரியமா? வேறு வழியே இல்லை. கூப்பிடு கிருஷ்ணனை அவ ன் தான் ஆபத்துக்காலத்தில் நமக்கு உதவுபவ ன் என்று பாண்டவர்கள் அவரை அழைத்தனர். 

கிருஷ்ணர் வந்துவிட்டார். இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நீங்கள் கடைபிடிக்கும் தர்மத்தை ஒளிக்காமல் மறைக்காமல் உள்ளது உள்ளபடியே உரைக்க வேண்டும். நீங்கள் சொல்வது நிஜமானால், பழம் மீண்டும் மரத்திலேயே ஒட்டிக்கொள்ளும் என்றார். 

ஒவ்வொருவரும் தங்கள் பதிலைச் சொன்னா ர்கள். அப்போது சகாதேவன், கிருஷ்ணா சத்தியமே தாய், ஞானமே தந்தை, கருணையே தோழன், சாந்தகுணமே மனைவி, பொறுமை யே குழந்தை, இதுவே நான் கடைபிடிக்கும் தர்மம். நான் சொன்னது உண்மையென்றால் கனி ஒட்டிக்கொள்ளட்டும், என்றான். 

பழம் திரும்பவும் கிளைக்கு போய்விட்டது. பின்னர், அவர்கள் தனியாக உரையாடினர். சகாதேவா, நீ ஒரு முட்டாள். எவனாவது எதிரி க்கு போருக்குரிய களபலி கொடுக்கும் நாளை குறித்துக் கொடுப்பானா, நீ செய்து விட்டாயே, என்றார். 

தொழில் தர்மம் தவறக்கூடாது கிருஷ்ணா, என்ற சகாதேவனிடம், அப்படியா னால், திரவு பதி அவள் கூந்தலை முடிவது சிரமம் தான், எதிரிகள் வெற்றி பெறுவார்கள். நீ என்ன செய்வாய் ? என்றார் கிருஷ்ணர். அதெப்படி ? நீயிருக்கும் போது அது நடந்து விடுமா?. சகா தேவன் கூறவும், அந்த அதிசயம் நிகழ்ந்தது.

கிருஷ்ணா, நீ எங்களை விட்டு பிரிய முடியாது. ஏனெனில் நான் உன் மீது நிஜமான பக்தி வைத்தவன். இப்போதே இங்கே உன்னைக் கட்டிப் போட்டு விடுகிறேன். கிருஷ்ணர் சிரித்தபடியே, அதெப்படி சாத்தியம் ? முடிந்தால் என்னைக் கட்டிப்பார். என்றவராய், அந்த அறை முழுக்க பல்வேறு வடிவமாய் பிரிந்து வியாபித்து நின்றார். 

சகாதேவன் அவரிடம், கிருஷ்ணா, நீ மாயவன். உன்னை கட்ட கயிறு வேண்டுமென்று நினை த்து தானே இப்படி பல வடிவங்களில் மாயம் கட்டுகிறாய். உன்னை கயிறால் கட்டமுடியும் என்று நினைக்கும் அஞ்ஞானியா நான். உன்னை நான் என் மனதால் தியானிப்பது நிஜமென்றால், மனதால் உன்னைக் கட்டிப் போடுகிறேன், என்றான். 

கிருஷ்ணரால் அசைய முடியவில்லை. ஆம்... பகவானை பக்தியால் மட்டுமே கட்டிப் போட முடியும் என்பதை சகாதேவன் மூலமாக நமக்கு கற்றுத்தந்தவர் கிருஷ்ணர். 

கிருஷ்ணரின் திருமண, லீலைகளைக் கேட்டு முக்தியடைந்த முதல் பக்தர் யார் என்று தெரி யுமா ? பாண்டவர்களின் தர்மபத்தினியான திரவுபதி தான். அபூர்வமாக எப்போதாவது ஒருமுறை நிகழும் சூரிய கிரகண நாளில், குருஷேத்திரத்தில் உள்ள ஸமந்த பஞ்சகம் என்ற இடத்தில் மக்கள் கூடி புனித நீராடுவார் கள். பகவான் கிருஷ்ணரும் அவரது ஆயிரக் கணக்கான ராணியரும் அங்கே வந்தார்கள். இவ்விழாவில் பங்கேற்க குந்திதேவி, அவளது அண்ணன் வசுதேவர், திருதராஷ்டிரன், அவன் தேவி காந்தாரி, தர்மர், துரியோதனன் மற்றும் அவன் மனைவி பானுமதி, கிருபாச்சாரியார் இன்னும் அத்தனை பேரும் ஆஜராகி விட்டனர். 

குந்தியும், வசுதேவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துக் கொண்டனர். அவர்கள் அங்கு ஆற்றிய உரையாடல் மனித குலம் முழுமைக்கும் ஆறுதலளிக்கும் கருத்துக்களை கொண்டது. இவர்கள் இங்கே இப்படி பேசிக் கொண்டிருக்க திரவுபதி, கிருஷ்ணரின் பெரிய ராணியான ருக்மிணியை சந்தித்தாள். 

அங்கே முக்கிய ராணிகளான சத்யபாமா, பத்ரா, ஜாம்பவதி, சத்யா, காளிந்தி, சைப்யா, லட்சுமணா, ரோகிணி ஆகியோரிடம், கிருஷ்ணா எவ்வாறு உங்களைத் திருமணம் செய்து கொண்டார் ? என்ற விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொண்டாள். ஒருசமயம் யது குல மக்களுக்கு ஆபத்து நிலை ஏற்படவே, கிருஷ்ணர் மதுராவின் ஒரு பகுதியாக இருந்த துவாரகையில் ஒரு கோட்டையை நிறுவினார். 

கடலின் நடுவே இக்கோட்டை நிறுவப்பட்டது. வீதிகளும், மாடமாளிகைகளும் அமைக்கப் பட்டன. அங்கே யது குல மக்களை குடியேற்றி னார். அங்கு தன் மனைவி ருக்மணியுடன் வசித்து வந்தார். 

கிருஷ்ணர் சாந்தீபனி முனிவரிடம் படித்த காலத்தில் அவருக்கு சுதாமா என்ற நண்பர் இருந்தார். குசேலன் என்றும் இவரைச் சொல் வார்கள். இருவரும் இணைந்தே இருப்பார்கள். அவர் பிராமணர். வேதம் கற்ற பிறகு, அதைக் கொண்டே பிழைப்பு நடத்தி வந்தவர். 

அவரு க்கு சுசீலை என்ற மனைவி. குழந்தைக ளின் எண்ணிக்கையோ அதிகம். குடும்பத்தை நடத்த தனக்கு கிடைத்த வருமானமே போதும் என்ற நிலையில் இருந்தார். பிராமணன் என்ப வன் வேதம் படித்தவன் மட்டுமே. பிற வேலைக ள் அன்றைய சமுதாயத்தில் அவனுக்கு விதிக் கப்படவில்லை. 

அந்த தர்மப்படியே சுதாமா வாழ்ந்தார். மேலும், சுதாமா தனக்கு அதிகமான குழந்தைகள் இருந்தது பற்றி கவலைப்படவும் இல்லை. அவர் பகவான் கிருஷ்ணரிடம் தன்னை ஒப்ப டைத்துக் கொண்டவர். அவன் என்ன நிகழ்த்த வேண்டுமென நினைக்கிறானோ அதை நிகழ்த்தியே தீருவான். அவன் நடத்தும் நாடகத்தில் நாம் பாத்திரங்கள். 

அவன் என்ன செய்ய வேண்டும் என நினைக் கிறானோ அதை செய்யட்டும் என்ற பக்குவ நிலைக்குச் சொந்தக்காரர். தந்தை எப்படியிரு ந்தாலும், தாய் குழந்தைகளின் பசி பொறுக்க மாட்டாள். அவள் தன் கணவரிடம், " அன்பரே. தாங்கள் தங்கள் நண்பர் கிருஷ்ணரை துவாரகையில் சென்று சந்தியுங்கள். அவர் நம் வாழ்வு வளம்பெற உதவாமலா போவார்?." என்றாள்.

சுசீலையும் பணத்தின் மீது பற்றுக் கொண்டவ ளல்ல. வறுமையைக் கண்டு அவள் பயப்படுப வளும் அல்ல. ஆனால், மாங்கல்யத்தின் மீது எந்தப் பெண்ணுக்குத்தான் பற்று இருக்காது... தன் கணவர் பசியாலேயே உயிர் விட்டுவிடு வாரோ என அவள் கலங்கினாள். 

அதன் காரணமாகவே கிருஷ்ணரைப் பார்த்து வரச்சொன்னாள். குசேலர் புறப்படும் சமயத்தி ல் பக்கத்து வீடுகளில் போய் சிறிது அவல் கடனாகப் பெற்று வந்து, அவரிடம் கொடுத்து அனுப்பினாள். கிழிந்த தன் அங்கவஸ்திரத்தி ல் அதைக் கட்டிக்கொண்டு சுதாமா கிளம்பி னார். சுதாமா தனித்துப் போகவில்லை. 

தங்கள் ஊரிலுள்ள கிருஷ்ண பக்தர்களான அந்தணர்கள் சிலரையும் உடன் அழைத்து வந்திருந்தார். அவர்களும் பற்றற்ற நிலையி லுள்ளவர்கள். எந்த எதிர்பார்ப்பும் கருதி அவர்கள் அங்கே வரவில்லை. 

துவாரகையில் அரண்மனை களை கட்டியிரு ந்தது. கிருஷ்ண ருக்கு கப்பம் செலுத்தவும், அவரிடம் சன்மானம் பெற்று செல்லவும் பல குறுநில மன்னர்கள் அரண்மனை வாசலில் காத்துக் கிடந்தனர். அவர்களை காவலர்கள் ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்க ளுக்கு கிருஷ்ணர் ஒரு உத்தரவு போட்டிருந்தார். 

வேதம் படித்த பிராமணர்கள் அரண்மனைக்கு வந்தால், அவர்களை தடுக்காமல், காவலர்கள் உடனடியாக தனக்கு அறிவிக்க வேண்டும் என்பதே அந்தஉத்தரவு. அப்போது, கிருஷ்ணர் ருக்மணியின் மடியில் தலை வைத்து, திருவடி யை சத்யபாமாவின் மடிமீது வைத்து, பத்தாயி ரம் நாயகியர் சாமரம் வீச சுகமாக சயனித்தி ருந்தார். 

காவலன் ஒருவன் ஓடிவந்து, கிருஷ்ணரை அவரது நண்பர் பார்க்க வந்துள்ள விபரத்தை அறிவித்தான். துள்ளிக்குதித்து எழுந்தார் கிருஷ்ணர். ஒரு ஏழை நண்பனைக் காண அம்பு போல பாய்ந்து நண்பரைக் காணச் சென்றார். 

" சுதாமா, உம்மைப் பார்த்து எவ்வளவு நாளா யிற்று ? உம்மை மீண்டும் சந்திக்க நான் என்ன தவம் செய்தேனோ ? என் பாக்கியம் தான் என்னே என்று நெக்குருகிப் போன அவர் சுதாமாவை அணைத்தார். அந்த அணைப்பி லேயே சர்வ வறுமையும் அழிந்து போனது. இது எப்படி கிருஷ்ணரின் மார்பில் உறைபவள் அல்லவா மகாலட்சுமி. அவளது பார்வை சுதாமாவின் மேல் பட்டு விட்டது. வறுமை நீங்கி விட்டது. 

சுதாமாவுடன் வந்தவர்களுக்கும் தனி அறைகள் ஒதுக்கப்பட்டு விருந்து உபசாரம் தடபுடலாயிற்று. கிருஷ்ணர் சுதாமாவுக்கு தனி மரியாதை செய்தார். சுதாமா ஒரு பிராமணர் என்ற முறையிலே, அவருக்கு பாதபூஜை செய்து, தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டார். ருக்மணியும் அவ்வாறே செய்தாள். 

பின்னர் தனது பஞ்சணையிலேயே அமரச் சொன்ன கிருஷ்ணர், " சுதாமா, அவந்தியில் இருந்து என்னைக் காண நடந்தே வந்தீரா, உமது கால்கள் எவ்வளவு வலித்திருக்கும்.." என்றவராய் அவரது கால்களைபிடித்து விட்ட படியே பேசினார். 

நீண்ட நாள்களுக்கு பின் நண்பர்கள் சந்திக்க நேர்ந்தால், பள்ளியில் சக மாணவர்களுடன் செய்த குறும்பு, ஆசிரியருக்கு தெரியாமல் செய்த சேஷ்டைகள், நெகிழ்வான நிகழ்வுகள் என பல விஷயங்களைப் பற்றி பேசத்தானே செய்வோம். கிருஷ்ணர் சுதாமாவுடன் அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நினைவு கூர்ந்தார்.

பின்னர், "சுதாமா, நம் பழைய நினைவுகள் பற்றியே பேசிக்கொண்டிருந்து விட்டேன். வீட்டைப்பற்றி விசாரிக்கவே இல்லை. மன்னியார் சவுகரியமாக இருக்கிறாரா? பிள்ளைகள் கல்விக்கூடம் செல்கிறார்களா? என்று குசலம் விசாரித்த கையுடன், "சுதாமா என் மன்னி என் மீது மிகுந்த பாசம் கொண்ட வராயிற்றே, எனக்காக பலகாரம் கொடுத்து அனுப்பியிருப்பாரே, சுதாமா அதை கொண்டு வந்துள்ளீரா?" என்றதும், 

இங்குள்ள செல்வச் செழிப்பைப் பார்த்து அரண்டு போயிருந்த சுதாமா, தன் கிழிந்த அங்கவஸ்திரத்தை மறைத்தார். விடுவாரா மாயக்கண்ணன். அதை அப்படியே பறித்து விட்டார். அவசர அவசரமாக பொட்டலத்தைப் பிரித்தார். ஒரு பிடி அவலை வாயில் போட்டார். 

அவல் வாய்க்குள் போனதோ இல்லையோ, அவந்தியிலுள்ள சுதாமா வீடு மட்டுமல்ல.... அவரது ஊரிலுள்ள எல்லா குடிசைகளுமே மாளிகைகளாகி விட்டன. எல்லாருமே செல்வ த்தில் திளைத்தனர். இது இங்கிருக்கும் அப்பாவி சுதாமாவுக்கு எப்படி தெரியும் ?
இதற்குள் இன்னொரு பிடி அவலை எடுத்த வாயில் போடச் சென்ற போது, ருக்மணி தடுத்து விட்டாள். 

ஒரு இனிய கிருஷ்ண பக்தன் தனக்கு கிடைக்க ப்போகும் பணத்தால் மனம் மாறி, பக்தியை மறந்து உலக இன்பங்களில் மூழ்கி விடலாம் இல்லையா? அதனால், அதில் இருந்து சுதாமரைக் காப்பாற்றினாளாம் அந்த தேவி. பின்னர் அங்கிருந்து விடைபெற்றார் சுதாமர். 

அவர் கிருஷ்ணரிடம் செல்வத்தைக் கேட்கவுமி ல்லை. அந்த மாயக்கள்ளன் நண்பனின் வறுமையைப் பற்றி எல்லாம் அறிந்திருந்தும் அவரும் கேட்கவில்லை. ஆனால், நண்பன் கொண்டு வந்த அழுக்குத்துணியில் இருந்த அவலை மட்டும் எடுத்துக்கொண்டார். 

பிறர் பொருளுக்கு யாரொருவன் ஆசைப்படு கிறானோ, அவன் அவ்வாறு பெற்றதை ஆண்டவன் ஏதாவது ஒரு வழியில் பறித்து விடுவான். சுதாமரின் வாழ்விலும் இதுவே நிகழ்ந்தது. 

பால்யத்தில், இவர்கள் சாந்தீபனி முனிவரிடம் பாடம் கற்றுவந்தபோது, ஒருநாள் முனிவரின் மனைவி, இரண்டு குழந்தைகளையும் அழைத்து, சமையலுக்கு விறகு பொறுக்கிவர அனுப்பினாள். போகும்போது, இருவரும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் எனச் சொல்லி, வெல்லம் கலந்த அவலைக் ஒரே பொட்டலமா கக் கொடுத்தாள். 

விறகு வெட்டிக்கொண்டிருந்த நேரத்தில், பசி யெடுக்கவே, குசேலர் பொட்டலத்தைப் பிரித்தார். சாப்பிட்டார்.கிருஷ்ணரை அழைத்து அவருக்குரிய பங்கை கொடுத்திருக்க வேண்டாமோ. பசியில் முழுமையாக சாப்பிட்டு விட்டான். அன்று கிருஷ்ணர் அதற்காக ஏதும் சொல்லவில்லை. 

பகவான், உடனே எதையும் தட்டிக் கேட்க மாட்டார். இப்போது அவருடைய நேரம். அன்று தர வேண்டிய தனக்குரிய பங்கை எத்தனை யோ வருடங்கள் கழித்து, இன்று கட்டாயமாக பெற்றுக் கொண்டார். 

உலகத்தில் பிறந்த யாராக இருந்தாலும், அடுத்தவன் பொருளை வலுக்கட்டாயமாக பறித்தால், அவன் இறந்து போனாலும் சரி அவனுடைய வம்சத்தில் வருபவனாவது நிச்சயமாக அதற்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும்.

 ஒரு வழியாக குசேலர் அவந்தி வந்து சேர்ந்தார். அங்கு வைத்து ஏதும் தரமறுத்த அந்தக் கள்வன் கண்ணன், குசேலர் ஊருக்கு ள் நுழைந்ததும், அடையாளமே தெரியாமல் உருமாறி விட்டார். உடலெங்கும் நகைகள் பள பளத்தன. கிழிந்த வஸ்திரம் பட்டு வஸ்திரமா னது. 

பகவானின் இந்த விளையாட்டில் அவருக்கு விருப்பமில்லை. இருந்தாலும், கிருஷ்ண நாமத்தை விடாமல் சொன்னபடி, வீட்டை தேடி யலைந்தார். சுசீலை அவரை ஒரு மாடத்தில் நின்று அழைத்தாள். " நம் வீடு இதுதான். இங்கே வாருங்கள்." என்றாள். 

குழந்தைகள் தங்கம், வைரம், மாணிக்கச் சிறு தேர் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். இவ்வளவு வறுமையிலும், அவர் வீட்டில் கூலியை என்றாவது ஒருநாள் வாங்கிக் கொள்ளலாம் என்று வேலை செய்து வந்த வேலைக்காரியின் கழுத்திலேயே நூறு பவுனுக்கு குறையாமல் தொங்கியது. இப்படி அதிசயங்களை நுகர்ந்தபடியே, வீட்டுக்குள் நுழைந்த சுதாமர், நடந்ததை அறிந்தார்.

"கிருஷ்ணா, மாயவனே என் ஆத்ம நண்பனே, அடேய், இந்த அழியும் செல்வத்தை நாடியா உன்னை நாடி வந்தேன். ஏ கயவனே, என்னை ஏமாற்றி விட்டாயடா, நான் உன்னிடம் செல்வ த்தை கேட்டேனா, என் பக்திக்கு மரியாதை அவ்வளவு தானா, தாமோதரா என் இதயத்தில் உறைபவனே, பக்தன் என்றால் யார் தெரியுமா உனக்கு? 

யார் ஒருவன் தன் கஷ்டத்தை கடவுளிடம் கூட சொல்லமாட்டோனோ, அதை அவன் கொடுத்த வரப்பிரசாதமாக எண்ணி, அதையும் அனுபவி த்து ரசித்து வாழ்கிறானோ அவனே பக்தன். உன்னிடம் நான் தினமும் என்ன கேட்கிறேன். 

அழியா உலகான வைகுண்டத்தில் ஒரு இடம். உன் கமல பாத தரிசனத்தை தினமும் காணும் பாக்கியம். இந்த நிரந்தரச் செல்வத்தை நாடி யல்லவா வந்தேன்.பரந்தாமா, இந்த செல்வம் எனக்கு வேண்டாமடா, என்னை உன்னோடு சேர்த்துக் கொள், எனக் கதறினார். 

நண்பனின் கதறல் கண்டு கிருஷ்ணர் பொறு ப்பாரா, வந்து விட்டார் சங்கு சக்ர காதாதாரி யாய் குசேலர் அவருடன் ஐக்கியமானார். 

பகவான் கிருஷ்ணரின் இந்த வரலாற்றை படித்தவர்கள் இதிலுள்ள கருத்துக்களை பின் பற்றி நடந்தால், இப்பிறவியில் எல்லா இன்ப மும், பிறப்பற்ற நிலையும் பெறுவது உறுதி.

*****************------******************


சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்...

தசாவதாரம் மற்றும் கிருஷ்ணா அவதாரம் தகவலைக் கொடுத்து உதவிய

 கிருஷ்ணன் வக சமுதாயம்

🌷கிருஷ்ண அவதாரம் பாகம் 5...... 

 கிருஷ்ணவகை சமுதாயம் வரலாறு
 பாகம் .....

                       தொடரும்.

தசாவதாரம் - 9 (கிருஷ்ண அவதாரம் பாகம் 3)


கிருஷ்ண அவதாரம்.
***********************
  தொடர்ச்சி...

கிருஷ்ண அவதாரம் பாகம் 3
*******************************
சொன்னபடியே விருந்தாவனம் சென்று, கிருஷ்ணரைச் சந்திக்கும் நாளுக்காக காத்தி ருந்தார். அவரது பக்தர் என்ற முறையில், கிருஷ்ணரை அருகில் இருந்து தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கப்போவது பற்றி மகிழ்ந்தா ர். அதே நேரம், கம்சனின் பிரதிநிதியாக வந்திருப்பதால், கிருஷ்ணர் தன்னை என்ன செய்வாரோ என்ற பயமும் மனதில் எழுந்தது. 

இருப்பினும் தனது தேரில் சென்று கிருஷ்ணர் இருக்கும் இடத்தை அடைந்தார். விருந்தாவன த்துக்குள் அக்ரூரரின் ரதம் நுழைந்தது. ஓரிடத்தில் மரகத மலையும், வெள்ளிமலையும் சேர்ந்து ஒளி வீசியது போன்ற பிரகாசம் ஏற்பட வே ரதத்தை நிறுத்தினர். 

அங்கே கிருஷ்ணரும், பலராமரும் ஒளிபொங் கும் உடலுடன் நின்று கொண்டிருந்தனர். ஆங்காங்கே நடந்ததால் மணலில் பதிந்த அவர்களது பாதச்சுவடுகளைத் தான் அக்ரூரர் முதன்முதலாகப் பார்த்தார். அவற்றை மனதார தரிசித்தார். அந்த பாதசுவடுகளை பார்த்த பிறகு, கிருஷ்ண, பலராமரின் முகங்களை உற்று நோக்கினார் அக்ரூரர். கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. கிருஷ்ண, பலராமர் அவரை எதிர்கொண்டு வரவேற்றனர். 

எதிரியின் தூதராய் வந்தாலும், தனது பக்தர் அக்ரூரர் என்பது அந்த பரந்தாமனுக்கு தெரி யும், அவர்கள் விரைந்து வந்து அக்ரூரரை வரவேற்றனர். அவரது கையைப் பிடித்து அழைத்துச் சென்றனர். அவருக்கு ஒரு பசுவை தானமாக வழங்கினர். அவரை உணவருந்தச் செய்து, சந்தனம் முதலானவை பூசி உபசரித்த னர். 

இதன்பிறகு, அக்ரூரர் கம்சனின் திட்டம் பற்றி யும், நாரதர் அங்கு வந்து சென்றது பற்றியும் தகவல் தெரிவித்தார். மதுராவில், தனுர் யக்ஞ விழா நடக்க இருப்பது பற்றியும், அதில் கோகுலத்திலுள்ள இளைஞர்கள் அனைவரும் வரவேண்டும் என்ற கம்சனின் உத்தரவு பற்றியும் சொன்னார். கிருஷ்ணர் அதற்குரிய ஏற்பாட்டை உடனடியாக முடித்தார். அவர்கள் மதுராவுக்கு புறப்பட்டனர். தேர் புறப்பட்டது. கோபியர்கள் வந்து மறித்தார்கள்.

கண்ணா,  நீ போகாதே என கண்களாலேயே தடுத்தார்கள். அவர்களில் மனநிலையைப் புரிந்து கொண்ட கிருஷ்ணர் அவர்களிடம், அருமை கோபியரே, என்னைஉங்கள் மனதால் கட்டிப் போடாதீர்கள். என்னை அவிழ்த்து விடுங்கள் உங்களுடன் களித்து விளையாடு வேன், என உறுதியளித்தார். 

கோபியர் ஒருவழியாய் வழிவிட ரதங்கள் புறப்பட்டன. செல்லும் வழியில் யமுனை நதி வந்தது. அங்கே ஒரு ஐந்துதலை நாகம். அது தன் உடலை மடித்திருக்க, அதன் மீது விரிக்கப் பட்ட பஞ்சு மெத்தையில் பரமாத்மா சயனித்தி ருக்கும் காட்சி அக்ரூரருக்கு தென்பட்டது. ஆம், மாயக்கண்ணன் தன் பக்தனான அக்ரூரருக்கு ம் இப்படி காட்சி தந்தார். இந்த தரிசனத்தின் போது, அக்ரூரர் மனம் குளிர்ந்து கிருஷ்ணரை  துதித்தார். 

தேர்கள் மதுராபுரிக்கு நுழைந்தன. அக்ரூரர் தனது இல்லத்துக்கு வரும்படி கிருஷ்ணரை அழைத்தார். கிருஷ்ணர் அவரிடம், அக்ரூரரே ! மதுராவிலுள்ள என் குல எதிரிகளை அழித்த பிறகு, உமது இல்லத்துக்கு வருகிறேன், என்றார். அக்ரூரருக்கு மனதுக்கு கஷ்டமாயி ருந்தாலும், அந்தக் கடவுளின் வார்த்தையில் நிச்சயம் அர்த்தமிருக்கும் என்பதப் புரிந்து கொண்டு, கம்சனிடம் சென்றார். கிருஷ்ணர் மதுராவுக்கு வந்துவிட்ட செய்தியை அவனுக்கு அறிவித்தார். 

கிருஷ்ண, பலராமர் தம் திட்டப்படி மதுராவுக்கு வந்துவிட்டாலும், கம்சனுக்கு உள்ளூர பயம். அவர்களை எப்படியும் மடக்கிவிடலாம் என திட்டம் தீட்டியிருந்தான். கிருஷ்ண பலராமர்க ள் மதுரா நகரை தங்கள் நண்பர்களுடன் சுற்ற ஆரம்பித்தனர். அந்த நகரம் மிக நேர்த்தியாக இருந்தது. மாளிகை போன்ற வீடுகளில் உள்ள கதவுகள் பத்தரை மாற்று பசும்பொன்னால் செய்யப்பட்டிருந்தன. செல்வச்செழிப்புக்கு இலக்கணமான ஊர் அது. எதிரிகளை மடக்க ஆங்காங்கே அகழிகள் தோண்டப்பட்டிருந்தன. 

கிருஷ்ணர், வழியில் சென்ற ஒரு சலவைத் தொழிலாளியை அழைத்தார். நீ எனக்கு அரண்மனைவாசிகள் உடுத்தும் விலை உயர்ந்த ஆடைகளைக் கொடு, என்றார். அந்த தொழிலாளி, சிறுவனே, கம்சமகாராஜாவின் ஆடையைக் கேட்குமளவுக்கு உனக்கு தைரிய ம் வந்து விட்டதா ? ஓடிப்போய்விடு. மன்னரின் தண்டனைக்கு ஆளாகாதே, என்றார். 

கிருஷ்ணருக்கு கோபம் வந்துவிட்டதுஅவனை ஒரு அடி அடித்தார். அவன் இறந்து விட்டான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு தையல் காரன் ஓடி வந்தான். ஐயா ! இது என் கடையில் ஒருவர் தைக்கக் கொடுத்தார். 

இதை நீங்கள் அணிந்துகொள்ளுங்கள். பொருத்தமாயிருக்கும், என்றான். அவர் அதை அன்புடன் அணிந்து கொண்டார். அந்த மட்டி லேயே அந்த தையல்காரன் ஸாரூப்ய முக்தி அடைந்து விட்டான். அந்தத்தெரு வழியே ஒரு கூன் விழுந்தபெண் வந்தாள்.அவள் கிருஷ்ண சகோதரர்களை கவனித்தாள். அவள் இளமை யானவள். ஆனால் ஊனமுற்றவள். கம்சனு க்கு சந்தனம் பூசுவது அவளது பணி. அவள் அவர்களைக் கண்டதும் அழகில் சொக்கி நின்றாள்.

பெண்ணே, நீ யார் ? இந்த சந்தனக்கிண்ண த்துடன் எங்கே செல்கிறாய் ? என்றதும், அவள் கம்சனின் அரண்மனைக்குச் செல்வதாக தெரிவித்தாள். இந்த சந்தனம் மிக அருமையா ன மணம் கொண்டதாக உள்ளதே. எங்களுக்கு இதை பூசமாட்டாயா ? என்றதும், அவள் மகிழ்ச்சியுடன், இது ராஜாவுக்கு உரியதுதான். இருப்பினும், அவரை விட மிக உயர்ந்தவர்க ளாக உங்களைக் கருதுகிறேன். 

மனதளவில் உயர்ந்தவர்களுக்கே சந்தனம் பூசும் உரிமையுண்டு.  நான் பூசுகிறேன். எனச் சொல்லி, கிருஷ்ணரின் மார்பில் தடவினா ளோ இல்லையோ, அந்த உடல் ஸ்பரிசம்பட்ட தும், அவளது கூன் நிமிர்ந்தது. அவள் அழகிய வடிவத்தை அடைந்தாள். தன்னையே அவளால் நம்ப முடியவில்லை. முற்பிறவி ஞாபகம் வந்தது. 

ஆ ராமா,  நீயா , உனக்கு நான் துரோகம் இழைத்தேன். உன் சிற்றன்னையிடம் சொல்லி காட்டுக்கு அனுப்பி வைத்த கொடுமைக்காரி யடா.  இப்பிறவியிலும், நான் அதே ஊனத்து டன் பிறந்தேன். 

இருப்பினும்,  எனக்கு செய்த உதவியை என்ன சொல்லி வர்ணிப்பேன். எனக்கு பேச்சே வரவி ல்லை. ராமா , உன் சிற்றன்னைக்கு நான் செய்த சேவைக்கு பரிசாக இப்படி செய்துவிட் டாயே ! முற்பிறவியில், கொடுமைக்காரியா யினும் கூட, உன் தரிசனம் எனக்கு கிடைத்தது என்பதன் பலனை இப்போது அனுபவித்து விட்டேனோ, பரந்தாமா, நான் எவ்வளவு பெரிய பாக்கியவதி. 

அன்று ராமதரிசனம், இன்று கொடுமைக்கார னான கம்சனுக்கு பணியாளாக இருந்தும் கிருஷ்ண தரிசனம் காட்டினாய். உனக்கு சேவை செய்யும் பாக்கியம் தந்தாய், என மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அந்த நினைவலைகளை மறக்கச் செய்து விட்டார் கிருஷ்ணர். 

இப்போது, தன்னிலைக்கு திரும்பிய அந்த இளம்பெண், கிருஷ்ணரின் மீது காதல் கொ ண்டவளாய், கிருஷ்ணா, இத்தனை அழகிய உருவத்தை கொடுத்த நீயே என்னை அடைய வேண்டும். வா, என் இல்லத்துக்கு என்றாள். பெண்ணே, நான் உன் இல்லம் வருவேன். கவலைப்படாதே. நான் வந்த காரியத்தை முடித்துவிட்டு வருகிறேன். என சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். இதற்குள் கம்சன் கிருஷ்ண ரைக் கொல்வதற்கான ஏற்பாடுகளை முடித்து விட்டான். 

மிகப்பெரிய மல்யுத்தத்துக்கு ஏற்பாடு செய்து சிறந்த வீரர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தான். மல்யுத்தப் போட்டிக்கான களம் தயாராகி விட்டது. மதுராபுரியின் பிரபல மல்யுத்த வீரர்களான சாணுரன், முஷ்டிகன், சாலன், தோசாலன், கூடன் ஆகியோர் தயார் நிலையில் இருந்தனர். எல்லாருமே மிக பல சாலிகள். வயதிலோ, வீரத்திலோ கிருஷ்ண, பலராமருக்கு சற்றும் ஒத்து வராதவர்கள். அவர்கள் களத்தில் காத்திருந்த வேளையில், கம்சன் கிருஷ்ணரைக் கொல்ல மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்திருந்தான். 

அவர் வரும் வழியில், குவாலயாபீட என்ற யானையை கம்சன் நிறுத்தியிருந்தான். அந்த யானையைக் கண்டால், பிற யானைகள் ஓட்டமெடுக்கும். அப்படிப்பட்ட சக்திமிக்க அந்த யானையை கிருஷ்ண பலராமர் வரும் வழியில் வேண்டுமென்றே மறைத்து நிறுத்தி யிருந்தான் அதன் பாகன். கிருஷ்ணர் யானை யை ஒதுக்கி நிறுத்தும்படி பாகனிடம் சொல்ல வே அவன் கண்டுகொள்ளவில்லை. பாகனின் நோக்கம் கிருஷ்ணருக்கும் புரிந்து விட்டது என்றாலும், முறையாக அவனிடம் சொல்லிப் பார்த்தார். 

அவன் முடியாது என வம்பு செய்யவே, கோப மடைந்த கிருஷ்ணர் யானையை மிக லாவக மாகத் தாண்டிச் செல்ல, அவர்களை பிடிக்கும் படி யானையை பாகன் ஏவினான். 

யானை தும்பிக்கையை அவர்களை நோக்கி நீட்ட, கிருஷ்ணர் யானையை ஓங்கிக் குத்தினார். அவரது பலம் தாங்காத யானை சுருண்டது. அதன் வாலை பிடித்து தரதரவென இழுத்தார். பாகன் நிலைதடுமாறி கீழே விழுந்தான். யானை பிளிறித்துடித்தது உயிர் விட்டது. பாகனையும் ஒரே அடியில் வீழ்த்திய மாயக் கிருஷ்ணர், வெற்றி வீரராக மல்யுத்த களத்துக்குள் புகுந்தார். அவர்கள் வருவதற்கு ள் முன்னால் ஓடிச்சென்ற வீரன் ஒருவன், கம்சனிடம் யானை கொல்லப்பட்ட விபரத்தைச் சொல்லி விட்டான். கூட்டத்தினருக்கும் விஷயம் தெரிந்து விட்டது..

அந்த மாவீரர்கள் அரங்கில் நுழையவும், ஒவ்வொருவரும் கிருஷ்ணரை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது பற்றி மகிழ்ச்சியடைந்த னர். பார்வையாளர்கள் வரிசைக்கு கிருஷ்ண ரும் பலராமரும் சென்றனர். 

அப்போது சாணூரன், கிருஷ்ணா, பலராமா,  ஏன் ஒதுங்கி நிற்கிறீர்கள் ? போட்டியில் நீங்க ள் பங்கேற்கவில்லையா ? என்றான். 

கிருஷ்ணர் அவனிடம், சாணூரா, இங்கே பலத்திலும், வீரத்திலும், அனுபவத்திலும் சிறந்த வீரர்கள் இருக்கிறீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் மோதினால் தான் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். நாங்கள் சிறுவர்க ள். எங்களோடு நீங்கள் மோதினால், பார்ப்ப வர்களுக்கு ரசனை இருக்காது. மேலும், அது நியாயமும் அல்ல, என்றார். 

கிருஷ்ணா,  நீங்கள் குவாலயபீட யானையை யே கொன்றவர்கள் என்ற தகவல் எங்களுக்கு நீங்கள் வரும் முன்பே கிடைத்துவிட்டது. அதை விடவா நாங்கள் பலசாலிகள். அதனால், நீங்கள் எங்களோடு மோதலாம், வாருங்கள் என்றான். 

கிருஷ்ணர் சாணுரனையும், பலராமர் முஷ்டி கனையும் எதிர்த்து யுத்தம் செய்தனர். அவர்க ளது அடியை அந்த மல்லர்களால் தாங்க முடியாமல் கூக்குரலிட்டு இறந்தனர். அடுத்து மற்ற மல்லர்கள் சிலர் களமிறங்க அவர்களும் கொல்லப்பட்டார்கள். இதைக் கண்ட மற்ற மல் லர்கள் களத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். 

மக்கள் கைத்தட்டி மகிழ்ந்தனர். கம்சன் அதிர்ந்து போனான். கிருஷ்ண பலராமரை பாரட்ட மனமில்லாதது மட்டுமின்றி, வீரர்களே, இந்த கிருஷ்ணனையும், பலராமனையும் மது ராபுரியை விட்டு விரட்டி அடியுங்கள். 

இவர்களது தந்தை நந்தகோபன், தாய் யசோ தா, வஞ்சகம் புரிந்த வசுதேவர், இவர்களுக்கு ஆதரவளித்த எனது தந்தை உக்ரசேனன் உட்பட அனைவரும்  கொல்லப்பட வேண்டும், என ஆணையிட்டான். கிருஷ்ணருக்கோ மகா கோபம். சற்றும் நியாயமின்றி நடந்த அந்தக் கொடியவன் மீது பாய்ந்தார். அவனது கிரீடத் தை தட்டிவிட்டார். அவனது தலைமுடியை பிடித்து இழுத்தார். 

ஆசனத்தில் இருந்து சரிந்து விழுந்த அவனை இழுத்து வந்தார். மல்யுத்த களத்தில் அவனை கொண்டு வந்து கீழே தள்ளினார். மார்பின் மீது ஏறி அமர்ந்தார். கம்சனுக்கு மூச்சு முட்டிய து. ஒரே குத்தில் அவன் உயிரை விட்டான். அவனது உயிர் வைகுண்டத்தை அடைந்தது, 

கொடுமைக்காரனாயினும், சதாசர்வகாலமும் கிருஷ்ணரையே நினைத்தவன் அவன். அவரா ல் தனக்கு மரணம் ஏற்படுமோ என பயந்து கொண்டே சிந்தித்தவன். வைகுண்டத்தில் அவனுக்கு ஸாரூப்ய சொரூபம் கிடைத்தது. இந்த சொல்லுக்கு நாராயணனைப் போலவே உருவமெடுத்தல் என்பது பொருள். 

வைகுண்டத்தில் இருப்பவர்கள் நாராயண னை வணங்கி, நாராயண வடிவத்தைப் பெறு வார்களாம்.அந்த வடிவத்தை கருணைக்கடலா ன நாராயணன், கம்சனுக்கு அளித்தருளினார். கீதையில் 'தத் பாவ பாவித்' என்று சொல்லப் பட்டுள்ளது. 

ஒருவன் பூமியில் இருக்கும் போது என்ன நினைக்கிறானோ அதற்கேற்ற மறுபிறவியை அடைகிறான். கம்சன் பயத்தின் காரணமாக கிருஷ்ணரை நினைத்தாலும், அவரையே நினைத்துக் கொண்டிருந்தால் இந்த உயர் நிலையை அடைய முடிந்தது. 

கம்சனுக்கு கங்கர் என்பவர் உள்ளிட்ட எட்டு சகோரர்கள் இருந்தனர். கிருஷ்ணரால், அவன் கொல்லப்பட்டதை அறிந்ததும் ஆத்திரமடைந் தனர். அவர்கள் கிருஷ்ணரை பழி வாங்க விரைந்து புறப்பட்டனர்.

தாய்மாமனைக் கொல்வதை வேதம் அனுமதி க்கவில்லை. ஆனால், கம்சனைக் கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் கிருஷ்ணருக்கு ஏற்ப ட்டது. ஏனெனில், கம்சனைக் கிருஷ்ணரைத் தவிர வேறு யாராலும் கொல்ல முடியாது என்பது அசரீரி வாக்கு. அதன் காரணமாக, பகவான் இங்கே வேதத்தின் கட்டளையை மீற வேண்டியதாயிற்று. 

சரி,  இது அனுமதிக்கப்பட்ட ஒன்றானால், இப்போது தன்னைத் தாக்க வரும் மற்ற தாய் மாமன்களை என்ன செய்வது ? எல்லாருமே தேவகியின் சகோதரர்கள். இவர்களை அழிக்க ஒரே வழி தன் அண்ணன் பலராமன் தான். 

ஏனெனில், அவர் ரோகிணியின் மகன். அவ்வ கையில், எதிரே நிற்பவர்கள் தாய்மாமன்மார் ஆக முடியாது. அந்த எட்டு பேரையும் கொல்லு ம் பணியை பலராமர் ஏற்றுக் கொண்டார். குவலாயபீட யானையைக் கொன்ற போது, கிருஷ்ணரும் அவரும் ஆளுக்கொரு தந்தத் தை ஒடித்து வந்திருந்தனர். 

அந்த தந்தத்தைக் கொண்டு, கம்சனின் சகோ தரர்களைத் தாக்கினார் பலராமர். ஒருவன் பின் ஒருவராக அவர்களை கொன்றார். அப்போது, தேவலோகத்தில் இருந்து மலர் மாரி பொழிந்தது. கிருஷ்ண பலராமரின் வீரமான செயல்களால் யசோதையும், நந்த கோபனும் ஆனந்தமாகி கண்ணீர் வடித்து நின்றனர். 

கிருஷ்ணர் கடவுள் என்பது நன்றாக தெரிந்து விட்டதால், அவரைத் தொட அவர்களுக்கு தைரியம் வரவில்லை. கிருஷ்ணரோ அவர்களின் பாதத்தில் விழுந்து ஆசி வழங்கச் சொன்னார். அவர் கடவுள் என்பதால் அவருக்கு ஆசி வழங்கும் தகுதி தங்களுக்கு இல்லை எனக்கருதி, அவர்கள் ஒதுங்கி நின்றனர். 

அப்போது கிருஷ்ணர் அவர்களிடம், தாயே,  தேவகி என்னைப் பெற்றவள் என்றாலும் நீயே  என்னை வளர்த்தாய். 

என் பால்ய பருவ விளையாட்டுகளை நீயே ரசித்தாய். அம்மா, இந்த உடல் தாய் தந்தையின் உறவால் பிறக்கிறது. அதன் காரணமாக பெற்றவர்களுக்கு கடன்படுகிறது. இந்தக் கடனை தீர்க்குமளவுக்கு சமஅளவுள்ள பொருள் எவ்வுலகிலும் இல்லை. ஏனெனில், மனிதனாகப் பிறந்தவனுக்கு மட்டுமே எல்லா வற்றையும் அனுபவிக்கும் பாக்கியம் கிடைக் கிறது. 

மனிதப்பிறவிக்கு மட்டுமே இந்த உடலை விடுத்து, இறைவனிடம் சேர்வதற்குரிய அறிவு தரப்பட்டிருக்கிறது. பெற்றவர்கள் வேறு, வளர்த்தவர்கள் வேறல்ல. அவ்வகையில், நீங்கள் என்னை ஆசீர்வாதிக்க தகுதியுள்ளவ ர்கள் ஆகிறீர்கள். 

இதைக்கேட்டு மகிழ்ந்த யசோதையை தம்பதி யர் தங்கள் அன்பு மகனை வாரியணைத்தனர். பலராமனுக்கு முத்தமழை பொழிந்தனர். அவர்களது கண்களில் கண்ணீர் பெருகியது. இதன் பிறகு தன் தாத்தா உக்ரசேனரை சந்தித்த கிருஷ்ணர், யது ராஜ்யத்தின் அதிபதி யாக அவரை அறிவித்தார். 

கம்சனுக்கு பயந்து ஒளிந்திருந்த மன்னர்க ளெல்லாம் மகிழ்ந்து, உக்ரசேனரை பணிந்து வணங்கினர். மதுரா மக்கள் கிருஷ்ணரை தினமும் வணங்கும் பாக்கியம் பெற்றனர். முகுந்தா எனக் கூறி அழைத்தனர். 

இதற்கு முக்தியும் பரமானந்தமும் தருபவன் எனப் பொருள். நிச்சயமாக, மதுரா மக்கள் பர மானந்தத்தில் மூழ்கினர் என்றால் மிகையல்ல சில நாட்களுக்கு பிறகு, விருந்தாவனத்துக்கு யசோதையும், நந்த குமாரரும் புறப்பட்டனர். கிருஷ்ணரை அவர்கள் அழைத்தனர். 

அம்மா,  எனக்கு இன்னும் சில கடமைகள் இங்குள்ளன. வசுதேவர், தேவகியை சிறையி ல் இருந்து விடுவித்து, அவர்களுடன் சில நாட்கள் தங்கி வருகிறேன். என்னை வளர்த்த உங்களை என்னால் மறக்க முடியாது. அண்ணாவும் என்னுடன் தான் இருப்பார். நாங்கள், நிச்சயம் விருந்தாவனத்துக்கு வருவோம், என்றார். 

அவர்கள், மகன்களைப் பிரிந்து கண்ணீருடன் புறப்பட்டனர். இதன் பின்னர் தேவகியையும், வசுதேவரையும் கிருஷ்ணர் சிறையில் இருந்து விடுவித்தார். வசுதேவர் தன் பிள்ளை களுக்கும், கர்க முனிவர் என்பவர் மூலம் புனித நூல் சடங்கை செய்து வைத்தார். 

கிருஷ்ணர் பிறந்த போது, மனதால் செய்த பசுதானத்தை இப்போது அவர், நிஜமாகவே செய்தார். பின்னர், தன் மகன்களை சாந்தீபனி முனிவரிடம் கல்விபயில அனுப்பி வைத்தார். இத்தனை காலமும் மாடு மேய்த்து திரிந்த அந்த இளைஞர்கள் இப்போது அறிவியல், அரசியல், கணிதம், சகுனக்கலை, வைரங்களு க்கு பட்டை தீட்டும் கலை என சகல சாஸ்திரங் களையும் ஆசானிடம் கற்றனர். 

பயிற்சி முடிந்ததும், ஆசானிடம், குருவே,  தங்க ளுக்கு தர வேண்டிய குருதட்சணை என்ன ? என்றதும், குரு ஏதும் பேசாமல், அருகில் இருந்த தன் மனைவியை பார்த்தார், அவளது கண்களில் கண்ணீர் பனித்திருந்தது.

தாயே, தங்கள் கண்கள் பனித்திருக்கின்றன. தாங்கள் ஏதோ எங்களிடம் கேட்க விரும்புகி றீர்கள். தாரளமாகக் கேளுங்கள், என்றனர் கிருஷ்ணரும் பலராமரும்.

குறுக்கிட்ட சாந்தீபனி முனிவர், அவர்களிடம் சீடர்களே "எங்கள் மகனுடன் பிரபாஸ
ஷேத்திர (குஜராத்திலுள்ள சோமநாதம் என கருதப்படுகிறது) கடற்கரைக்குச் சென்றிரு ந்தோம். அவன் அதில் மூழ்கி விட்டான். அவனை மீட்டுத்தர வேண்டும், என்றனர். 

இறந்து போன ஒருவனை மீட்பதென்றால் அது தெய்வத்தாலேயே முடியும். இங்கே பகவான், இரட்டை அவதாரம் எடுத்து வந்துள்ளார். அவரால் முடியாதது தான் என்ன ? அவரிடம் ஆசிபெற்று உடனே புறப்பட்டு கடற்கரையில் நின்றனர் கிருஷ்ண பலராமர். 

சமுத்திரராஜன் அவர்களின் திவ்யதரிசனம் கண்டு ஓடோடி வந்து பணிந்தான். ஸ்ரீகிருஷ் ணா, நான் தங்களுக்கு செய்ய வேண்டியது என்ன ? உன்னிடம் மூழ்கியுள்ள எங்கள் குரு சாந்தீபனியின் மகனை திருப்பிக்கொடு, என்றார் கிருஷ்ணர். 

தேவாதி தேவா, அவன் எனக்குள் இல்லை. அவனை என்னுள் மூழ்கி அட்டூழியம் செய்து கொண்டிருக்கும் பஞ்சஜனன் என்ற அசுரன் பிடித்துச்  சென்றான். ஒருவேளை அச்சிறுவ னை அவன் உயிருடன் விழுங்கியிருக்க கூடும். 

சங்கு வடிவில் என்னுள் மறைந்திருக்கும் அவ னைப் பிடித்தால் விபரம் தெரியும், என்றான் பணிவுடன். கிருஷ்ண பலராமர் சற்றும் தாமதி க்காமல், கடலுக்குள் சென்றனர். அங்கே சங்கின் வடிவில் உருண்டுகொண்டிருந்த பஞ்சஜனனைப் பிடித்தனர். அவனது வயிற்றைக் கிழித்தார் கிருஷ்ணர். உள்ளே சிறுவன் இல்லை. சங்கு வடிவ அசுரனைக் கொன்று வெளியே தூக்கி வந்தனர். அவர்கள் நேராக யமலோகம் சென்றனர். 

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்...

கிருஷ்ண அவதாரம் பாகம் 4  தொடரும்...

தசாவதாரம்- 9(கிருஷ்ண அவதாரம் பாகம் 2)


************
 தொடர்ச்சி...

கிருஷ்ண அவதாரம் பாகம் 2
********************************
நாட்கள் கடந்தன. கிருஷ்ணருக்கு ஒரு வயதா னது. இந்த நிகழ்வை யசோதா மிக சிறப்பாகக் கொண்டாடினாள். வாத்தியங்கள் முழங்கின. ஆயர்குல மக்கள் ஒருவர் விடாமல் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். பிராமணர்கள் வேத பாராயணம் செய்தனர். யசோதா மகனை அன்போடு நீராட்டினாள். வேத மந்திரங்கள் ஒலித்துக் கொண்டிருந்த போது, கிருஷ்ணர் அப்படியே கண்ணயர்ந்தார். 

யசோதை குழந்தையை மடியில் வைத்திருந் தாள். குழந்தை உறங்கி விட்டதால், ஒருபட்டு மெத்தையை தரையில் விரித்து ஒரு வண்டியி ன் கீழே நிழலில் குழந்தையை படுக்க வைத்தாள். பின்னர், மற்ற வேலைகளைக் கவனிக்க வீட்டுக்குள் போய்விட்டாள். சற்று நேரத்தில் கிருஷ்ணர் விழித்து விட்டார். சாதாரண குழந்தைக்குரிய இயல்புடன் அழ ஆரம்பித்தார். கால்களை உதைத்தார். 

அவை பார்ப்பதற்கு பிஞ்சுக்கால்கள், ஆனால், அதன் சக்தி தாளாமல், அருகில் இருந்த வண்டியே நொறுங்கி விட்டது. சப்தம் கேட்டு வெளியே வந்த யசோதையும் மற்ற ஆயர்குல பெண்களும் இது என்ன விந்தை என்று மூக்கின் மீது விரலை வைத்தனர். 

யசோதைக்கு பயம் வந்துவிட்டது. வேதம் ஓத வந்த அந்தணர்களிடம், ஐயன்மீர்,  இந்தக் குழந்தை பிறந்தது முதல் இப்படித்தான் அற்புதமான செயல்களைச் செய்கிறான். ஓர் அரக்கியையே கொன்றான். இப்போது, உங்கள் கண்முன்னால் வண்டியை நொறுக்கி விட்டான். எனவே குழந்தையின் மீது எதுவும் அண்டாமல் மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்ய வேண்டும் என வேண்டினாள். அவ்வாறே வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓதினர். அவர்களு க்கு நிறைய பரிசுகளை அள்ளிக் கொடுத்தார் நந்தகோபர். பூதனாவை கிருஷ்ணர் கொன்று விட்டார் என்பதையறிந்து கம்சன், த்ருணாவ ர்த்தன் என்ற கொடிய அரக்கனை அனுப்பினா ன். இவன் பறக்கும் வல்லமையுள்ளவன். 

இவன் வேகமாக மூச்சுவிட்டால் சூறாவளியாக மாறிவிடும். அந்த கொடுமைக்காரன் கோகுல த்துக்குள் புகுந்தானோ இல்லையோ, கோகுல த்தில் பெரும் புயல் வீசியது. எங்கும் புழுதி மண்டலம். ஒருவருக்கொருவர் முகத்தையே பார்க்க முடிய வில்லை. இதைப் பயன்படுத்தி, கிருஷ்ணரை தூக்கிக் கொண்டு உயரே பற ந்து விட்டான் அசுரன். யசோதை கிருஷ்ணரை காணாமல் அழுதாள். ஐயோ,  என் மகன் புழுதி புயலில் சிக்கிக் கொண்டானோ,  அவன் எங்கே?..  என அரற்றினாள்.

த்ருணாவர்த்தன் உயரே சென்று குழந்தையை தூக்கி வீச எத்தனித்தான். குழந்தை அவனை விட்டால் தானே, குழந்தையின் கைகள் விஸ்தாரமாக விரிந்தன. வர்த்தனின் கழுத்து அதன் பிடியில் சிக்கியது. அப்படியே கழுத்தை இறுக்கிய குழந்தை அவனை வதம் செய்தது. அவன் கீழே விழுந்தான். புயல் அடங்கியது. கீழே விழுந்து கிடந்த அசுரனை கோகுலவாசி கள் பார்த்தனர். 

கிருஷ்ணர் அவன் உடல் மீது விளையாடிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இது தெய்வ குழந்தையாக இருக்குமோ என எண்ணினர். இதை நிரூபிக் கும் வகையில், அடுத்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு நாள் கிருஷ்ணர் மணலை அள்ளி தின்று கொண்டிருந்தார்.

யசோதை அவரைக் கண்டித்தாள். கண்ணா என்னிடம் நீ ஓடோடி வந்தால், நான் பால் தரு வேனே, ஏன் மண்ணைத் தின்கிறாய் ? என்று செல்லமாய் கண்டித்தாள். அன்று கிருஷ்ணர் அவளது கண்களுக்கு பூரண லட்சணமாய் தெரிந்தார். அதுகண்டு பூரித்த அவளது மார்பு களில் பால் நிறைந்தது. அதை அன்போடு ஊட்ட முயன்றாள். கிருஷ்ணர் வாய் திறக்க மறுத்தார். 

அவரது வாயை கட்டயாப்படுத்தி திறந்தாளோ இல்லையோ, வாய்க்குள் அண்ட சராசரமும் சுழன்று கொண்டிருந்தது. நந்தகோபரிடம், இந்த அதிசய நிகழ்ச்சியை எடுத்துச் சொன் னாள் யசோதை. நந்தருக்கும் குழந்தையைப் பற்றிய கவலை அதிகரித்தது. குழந்தையின் ஜாதகத்தைப் பார்த்தால் என்ன என்று தோன் றியது. ஜாதகம் கணிப்பதில் மிகச்சிறந்த ஞானியாக திகழ்ந்தவர் கர்கமுனிவர். அவரை வரவழைத்து உபசரித்து பின்பு நந்தகோபர், கிருஷ்ணரின் ஜாதகத்தை மட்டு மின்றி, ரோ கிணியின் மகனான பலராமனின் ஜாதகத்தை யும் கொடுத்தார். 

ஜாதகத்தைப் பார்த்த முனிவர் அதிர்ந்தே போய்விட்டார். நந்தகோபரும், யசோதையும் இதுவரை கிருஷ்ணன் தங்கள் பிள்ளை தான் என எண்ணி கொண்டிருந்தனர். தனக்கொரு பெண் குழந்தை பிறந்ததும், அது கூடையில் சுமக்கப்பட்டு கம்சனின் மாளிகைக்கு சென்ற தும், சிறையில் பிறந்த கிருஷ்ணன் தன்னரு கே படுக்க வைக்கப்பட்டதையும் யசோதையும் அறியமாட்டாள். 

தான் பெற்ற மகன் என்றே அவள் எண்ணியி ருந்தாள். ஆனால், கிருஷ்ணர் தேவகியின் வயிற்றில் பிறந்தவர் என்பதை உணர்ந்து விட்டார் கர்கமுனிவர் பலராமனும் தேவகியின் வயிற்றில் கருவாகி,ரோகிணியின் கர்ப்பத்தி ற்கு மாற்றப்பட்டவன் என்பது தெரிந்தது. எப்படியாயினும் குழந்தைகளுக்கு தந்தை வாசுதேவர் என்பதை புரிந்து கொண்டு விட்டார் கர்கமுனிவர். இதை நந்தகோபரிடம் தெரிவித்தும் விட்டார். 

நந்தகோபரே, இக்குழந்தை சாதாரண பிறவி யல்ல. அந்த விஷ்ணுவின் அம்சம். ஒரு பிறவி யில் சிவப்பாக இன்னொரு பிறவியில் மஞ்ச ளாகவும், இப்போது கருப்பாகவும் பிறந்திருக் கிறார். மனிதர்களுக்குள் நிறபேதம் இருக்கக் கூடாது. என்பது அவரது எண்ணமாக இருக்க லாம். ஆனால், அவர் தேவகியின் வயிற்றில் பிறந்தவர் என்று ஜாதகம் சொல்கிறது. உம் மனைவி யசோதைக்கு ஒரு பெண் குழந்தை தான் பிறந்திருக்கிறது. அவள் துர்க்கை என்னும் தெய்வமாக மாறிவிட்டாள். பெற்ற பிள்ளையே தன்னுடையது இல்லை என்பதும், தனக்கு பிறந்த குழந்தை தெய்வமாகி விட்டது என்பதையும் அறிந்தபிறகும் எந்த சலனத்தை யும் அவர் காட்டவில்லை. 

மாறாக விஷ்ணுவே, தன் மகனாய் வளர்வதில் மிகுந்த மகிழ்ச்சியைத் தான் அடைந்தார். பலராமரும், கிருஷ்ணரும் இப்போது தங்கள் பால்ய லீலைகளைத் துவங்கி விட்டார்கள். கோபியரின் வீடுகளுக்குள் நுழைவார்கள். பசுக்கள் பால் பொங்கும் மடுவுடன் காட்சி தருவதை பார்த்து மகிழ்வார்கள. கன்றுகளை யாருக்கும் தெரியாமல் அவிழ்த்து விடுவார் கள். அவை மகிழ்ச்சியுடன் ஓடிச்சென்று தாயில் மடியில் சுரந்து நிறைந்திருக்கும் பாலைக் குடிக்கும். அதுகண்டு கைகொட்டி ஆனந்தமடைவார்கள்.

பின்பு, கோபியரின் வீட்டுக்குள் புகுந்து வெண்ணெயைத் திருடுவார்கள். அதை குரங்குகளுக்கு கொடுப்பார்கள்.கோபியர்கள் அவர்களின் புத்திசாலித்தனத்தை ரசிப்பார்கள்  அதே நேரம், திருடுவது தவறு என கண்டிப்பார்கள். 

யசோதையிடம் ஒருத்தி சென்றாள். அம்மா யசோதா, உன்மகன் என் வீட்டில் வெண்ணெய் திருட வருகிறான் என்று பானையை இருளில் ஒளித்து வைத்தேன். அவன் என்னடா வென்றால், தன் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளின் ஒளியிலேயே அந்தப் பானையை கண்டுபிடித்து விடுகிறான். பானை காலியாகி விட்டது, என்றாள்.
 

சரி... சரி... அவன் கழுத்தில் அணிந்திருக்கும் நகையை இனி கழற்றி விடுகிறேன், என்றவள் கிருஷ்ணரைக் கண்டிப்பதற்காக கையை ஓங்கினாள். பால் வழியும் முகத்துடன் அந்த சிங்காரக்கண்ணன், அவளை ஒரு அன்பு பார்வை பார்க்கவே, கை தானகவே கீழே வந்து விட்டது. வசுக்களில் ஒருவரான துரோணர் (இவர் மகாபாரத துரோணர் அல்ல) என்பவர் தரா என்ற தன் மனைவியுடன் வசித்தார். அவர் களிடம் பிரம்மா, நீங்கள் இருவரும் உலகத்தை விருத்தி செய்யனும் என உத்தரவிட்டார். 

அப்போது அவர்கள், தந்தையே, நீங்கள் கூறும்  உத்தரவின்படி நடக்கிறோம். எங்களுக்கு நீங்கள் ஒரு வரம் தரவேண்டும். மகா விஷ்ணு வை நாங்கள் நேசிப்பது தங்களுக்கும் தெரிந்த ஒன்றுதான். அவர் குழந்தையாக இருந்தால் எப்படி இருப்பார் ? என்னென்ன சேஷ்டைகள் செய்வார் என்பதை நாங்கள் கண்குளிரக் காண வேணடும். பிற்காலத்தில், அவரது இந்த சேஷ்டைகளையெல்லாம் படிப்போரும், கேட்போரும் பாவ விமோசனம் பெற வேண்டும், என்றார். 

அந்தப் பிறவியில் அப்படி நடக்காதென்றும், மகாவிஷ்ணு பூலோகத்தில் நடக்கும் அநியா ங்களை தடுத்து நிறுத்த, மானிட ரூபத்தில் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் போது, அந்தப் பாக்கியம் உங்களுக்கு கிடைக்குமென்றும் சொன்னார் பிரம்மா. அதன்படி இப்பிறவியில் அந்த தம்பதியர் நந்தகோபர் - யசோதையாக கோகுலத்தில் அவதரிக்க, அவர்களிடத்தில் கிருஷ்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்து பால்ய பருவத்தை கழிக்க வந்திருக்கிறார்.

யசோதையின் வீட்டில் பல வேலைக்காரிகள் உண்டு. அதில் வீட்டு வேலை செய்பவளுக்கு, அன்று கடுமையான வேலை இருந்தது. எனவே, வெண்ணெய் கடையும் பொறுப்பை யசோதை எடுத்துக் கொண்டாள். அவள் மன மெல்லாம் கிருஷ்ணன் நிறைந்திருந்தான். கிருஷ்ணன் செய்யும் சேஷ்டைகளை பாடிய படியே அவனது நினைவில் மூழ்கிப்போனாள். 

அப்போது, அவளையறியாமல் அவளது மார் பில் பால் சுரந்தது. அந்நேரத்தில் கிருஷ்ணர் வந்தார். தாயிடம், வெண்ணெய் கடைவதை நிறுத்தி விட்டு, தனக்கு பாலூட்ட வேண்டுமெ ன்ற தன் ஆசையை குறிப்பால் தெரிவித்தார். இதை உணர்ந்த யசோதையும் கிருஷ்ணருக்கு பால் புகட்டினார். 

அந்த நேரத்தில் அவள் அடுப்பில் வைத்திருந்த பால் கொதித்து வழிய ஆரம்பிக்கவே, குழந்தையை ஒதுக்கி விட்டு அடுப்பை நோக்கி ஓடினாள் யசோதா. எனவே, கிருஷ்ணருக்கு கோபம் வந்துவிட்டது. அவரது முகம் கோவைப் பழமாகச் சிவந்து விட்டது. ஒரு கல்லை எடுத் தார். எறிந்தார்; அம்மா விட்டுச் சென்றிருந்த வெண்ணெய் தாழி உடைந்தது. சிந்திய வெண்ணெய் ஒரு கை நிறைய அள்ளிக் கொண்டார். 

ஒரு தனியிடத்திற்கு போனார். தலைகுப்புற கவிழ்த்தப்பட்டிருந்த ஒரு உரலில் அமர்ந்து வெண்ணெய்த் தின்ன ஆரம்பித்து விட்டார். பசி பொறுக்க மாட்டார் போலும் நம் சின்னக் கண்ணன். பகிர்ந்துண்ணும் குணம் அவரை விடுமா. அங்கே வந்த குரங்குகளுக்கும் கொடு த்தார். யசோதா பால் பானையை இறக்கி வைத்து விட்டு திரும்பினான். பானை உடைந் திருந்தது. கிருஷ்ணன் தான் இதைச் செய்திருப்பான் என்பதை அவள் அறிவாள்! 

அந்தப் பொல்லாதவனைத் தேடினாள். தூரத் தில் உரல் மீது அமர்ந்திருந்தான். அவனைப் பிடிக்க ஓடினாள். அவன் அவளுக்கு போக்கு காட்டிவிட்டு ஆங்காங்கே மறைந்து கொண்டான். அவள் மீது கொண்ட அன்பு காரணமாக அவனே அவளது பிடியில் சிக்கிக் கொண்டான். 

மாயனே, வசமாக சிக்கினாயா?, 

வெண்ணெ யை எவ்வளவு சிரமப்பட்டு கடைந்தேன். நீயோ, அதை எவ்வளவு எளிதாக உடைத்து விட்டாய். உன்னைக் கட்டிப்போட்டால் தான் சரி வருவா ய் போலும்,  என்றவள் கயிறை எடுத்தாள். அவனை இழுத்து வந்து கட்டிப் போட முயற்சி த்தாள். கயிறு போதவில்லை. இன்னும் சில கயிறுகளை எடுத்து வந்து சேர்த்து கட்டினாள். 

என்ன அதிசயம், எப்படி கட்டினாலும் கயிறின் நீளம் கூடவே இல்லை. அவள் சோர்ந்து விட்டாள். இப்போதும் கிருஷ்ணர் அவள் மீது கிருபை வைத்தார். அவளது அன்புக்கு கட்டுப் பட்டார். கயிறு நீளமானது. யசோதைக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும், அந்தக் குறும்புக் காரரை கட்டிப்போட்டாள். வேலையைப் பார்க்க போய் விட்டாள். அங்கே இரண்டு அர்ஜுன மரங்கள் இருந்தன. கண்ணனை வணங்கி அவை பேச ஆரம்பித்தன.

பரந்தாமா, நாங்கள் நிதிகளுக்கு அதிபதியான குபேரனின் மக்களான நளகூவரன், மணிக்ரீவன். எங்களை நாரத மகரிஷி சபித்து விட்டார். எங்களின் இந்த ரூபத்தைக் மாற்றி சுயரூபம் தர வேண்டும், என வேண்டிக்கொண் டன அந்த மரங்கள். உலகத்து செல்வம் அனை த்தையும் குவித்து வைத்திருக்கும் குபேரனின் பிள்ளைகள் செய்த அட்டகாசம் கொஞ்ச நஞ்ச மல்ல . 

பணமுள்ளவனிடம் மூன்று பழக்கங்கள் பிரதா னமாக இருக்கும். மது, மாது, சூது ஆகியவை யே அவை. இதில், முதல் இரண்டிலும் ஊறிக் கிடந்தார்கள் கூவர க்ரீவர்கள். ஒருமுறை, பல பெண்களுடன் ஒரு குளத்தில் ஜலக்ரீடையில் ஆழ்ந்திருந்தனர். அந்தப் பெண்களும் ஆடை கலைந்து போதையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த நாரதரை மதிக்கவில்லை. இதை கண்ட நாரதர்,  இருவரையும் அர்ஜுன மரமாகு ம் படி சபித்து விட்டார். 

மேலும் இருவரும் தேவர்கள் என்பதால், அவர் களுக்கு விஷ்ணுவின் தரிசனம் மூலம் விமோ சனம் கிடைக்க வேண்டும் என்பதே நாரதரின் விருப்பம். அவர்களை மரமாக மாறும்படி சபித்துவிட்டார். பகவான் நாராயணன், கிருஷ் ணாவதாரம் எடுத்து பூமிக்கு வரும்போது தான், உங்களுக்கு சுயரூபம் கிடைக்கும் என சொல்லி விட்டார். 

கிருஷ்ணர் உரலை இழுத்துக் கொண்டு நெரு ங்கி நின்ற மரங்களுக்கிடையே சென்றார். அவரது ஸ்பரிசம் பட்டதோ இல்லையோ, அந்த தேவர்கள் உயிர் பெற்று பகவானை வணங்கி, இனி தவறு செய்வதில்லை என உறுதியளி த்து விடை பெற்றனர். பின்னர் உயிரற்ற அந்த மரங்களை இழுத்துச் சாய்த்தார் கிருஷ்ணர். மரங்கள் சாயும் சப்தம் கேட்டு நந்தகோபரும் மற்றவர்களும் ஓடி வந்தனர்.

குழந்தை காயமின்றி தப்பியதைப் பார்த்து ஆனந்தம் கொண்டனர். இந்த அதிசயம் நிகழ்வுகளும், கிருஷ்ணர் அதில் இருந்து தப்பித்து வருவதும் நந்தகோபரின் சகோதர ரான உபநந்தருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி யது. அவர் கோபாலர்களின் சபைக்கூட்டத்தை கூட்டினார்.

கோபாலர்களே ! கிருஷ்ணன் அரக்கர்களிட மிருந்து பலமுறை தப்பிவிட்டான். ஆனால், எப்போதுமே இப்படி தப்பமுடியும் என சொல்ல முடியாது. நம் குழந்தைகளுக்கு பலமுறை ஆபத்து வந்து விட்டது. இனியும், நாம் கோகுல த்தில் வசிப்பது உசிதமல்ல. மனிதர்களுக்கு இறைவன் அவ்வப்போது சில எச்சரிக்கைக ளைத் தருவான்.  அதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப நம் செயல்களை மாற்றி கொள்ள வேண்டும். எனவே, நாம் யமுனை நதிக்கரை யிலுள்ள விருந்தாவனத்திற்கு சென்று விடுவோம். அங்கு கோவர்த்தனம் என்ற மலை இருக்கிறது. அந்த மலையில் நம் பசுக்களுக்கு தேவையான புல் செழித்துக் கிடக்கிறது. புறப்படுவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுங்கள் என்றார். உபநந்தரின் கருத்தை மக்கள் ஏற்ற னர்.அவர்கள் விருந்தாவனத்தை அடைந்தனர். 

குழந்தைகள் கிருஷ்ணருக்கும், பலராமருக்கு ம் மாடுகளை மேய்க்கும் பயிற்சி அளிக்கப்பட் டது. கோபாலர் இல்லப் பிள்ளைகளுக்கு மாடு மேய்க்க கற்றுக் கொடுப்பது தான் தலையாய பணி. தொழிலில் எதுவுமே கேவலமல்ல. கோபாலர்கள் வசித்த கோகுலம், விருந்தாவன ம் போல் செழிப்பான பகுதியை பூமி இதுவரை பார்த்ததில்லை. கன்றுகளுக்கு போக எஞ்சிய பாலும், நெய்யும், வெண்ணெயுமே அவர்களி ன் வாழக்கைத் தரத்தை உயர்வாக வைத்திரு ந்தது. 

மாடு மேய்க்கும்  சிறுவர்களுக்கு கல்வியறிவு இல்லை. ஆனால், என்ன ஆச்சரியம். ஒவ்வொ ருவர் வீட்டிலும் செல்வம் கொட்டிக் கிடந்தது. சிறுவர்களெல்லாம், ஏராளமான நகைகளை அணிந்திருப்பார்கள். அவற்றை அணிந்தபடி தான் மேய்ச்சல் நிலங்களுக்கும் செல்வார்கள். கிருஷ்ணரும், பலராமரும் மாடுகளை ஓட்டிக் கொண்டு கோவர்த்தன மலைக்குச் செல்வார்கள். 

இருவரும் புல்லாங்குழல் இசைத்தபடி இருப்பார்கள். மாடுகளும் மயங்கும், மேய்க்கச் சென்ற மற்ற சிறுவர்களும் அந்த இசையில் மயங்கிக் கிடப்பார்கள்.

ஒருமுறைகம்சனால் அனுபப்பட்ட வத்ஸாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தான். அவன் கன்று குட்டியாக உருமாறி, கிருஷ்ணர் மேய்த்த கன்றுகளுடன் கலந்து நின்றான். கிருஷ்ணர் அதை அடையாளம் கண்டு கொண்டார். அதன்காலைப் பிடித்து தூக்கி மரத்தில் அடித்தார். வத்ஸாசுரன் மடிந்தான். அவனது சுயவடிவைக் கண்டு அனைவரும் அஞ்சினர். இன்னொரு முறை, ஒரு பெரிய வாத்தின் வடிவில் பகாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தான். அதன் அலகுகளை பிளந்து, கிருஷ்ணர் கொன்றார். 

ஒருமுறை, அகாசுரன் என்பவன் விருந்தாவன த்திற்கு வந்தான். அவன் தேவர்களை தன் வலிமையால் மிரட்டுபவன். அவனைக் கண்டு தேவர்களுக்கு அச்சம். அவர்கள் அமிர்தம் பருகி, தங்கள் உயிர் போகாது என்று தெரிந்திருந்தாலும் கூட, பயந்த நிலையில் இருந்தனர். அகாசுரன், பூமியில் கிருஷ்ணர் செய்த செயல்களைப் பார்த்தான். 

கிருஷ்ணனும், அவரது நண்பர்களும் சந்தோ ஷமாக இருப்பது பிடிக்கவில்லை. இவன் பூதனாவின் சகோதரன். அவனுக்கு தன் சகோதரியைக் கொன்ற கிருஷ்ணனைக் கொலை செய்து விட என்ற எண்ணம் ஏற்பட்ட து. அவன் மஹிமா என்னும் யோகவித்தை அறிந்தவன். இந்த வித்தையின் மூலம், ஒருவர் தனது உருவத்தை மிகப்பெரிதாக்கிக் கொள்ள முடியும். 

அகாசுரன் தன் உருவத்தை 12 கிலோ மீட்டர் நீளத்துக்கு பெரிதாக்கி, ஒரு பாம்பின் வடிவெ டுத்து கிருஷ்ணரையும், அவரது நண்பர்களை யும் கொல்ல வந்தான். கிருஷ்ணரும், அவரது தோழர்களும் கன்று மேய்க்கும் இடத்தில் வாயைப் பிளந்தபடி படுத்துக் கொண்டான். கன்று மேய்க்க வந்த சிறுவர்கள், ஒரு சர்ப்பம் வாயைத் திறந்து படுத்திருப்பதைப் பார்த்து விட்டனர். அவர்களில் ஒருவன் சொன்னான். 

இன்னும் சிறிது நேரத்தில் கிருஷ்ணன் இங்கு வருவான். அவன் நம் இனிய நண்பன். அவனால் தான் விருந்தாவனத்தில் உள்ள மக்களெல்லாம் சுகமாக வாழ்ந்து கொண்டிரு க்கிறார்கள். அவனை இந்தப் பாம்பு விழுங்கி விட்டால் அவர்களின் நிலைமை என்னாவது ? மேலும், கஷ்ட காலத்தில் நண்பனைக் காப்பா ற்றுபவனே உண்மையான தோழன்.  இந்த பாம்பின் வாய்க்குள் முதலில் செல்வோம். அது வாயை மூடிக் கொண்டு போய்விடும். கிருஷ்ணன் தப்பி விடுவான் என்றான். எல்லா தோழர்களும் ஆஹா... அருமையான யோசனை என்றனர். வேகமாக ஓடி பாம்பின் வாய்க்குள் சென்றுவிட்டனர். 

பின்னால் வந்த கிருஷ்ணர் இதைப் பார்த்து விட்டார். தன் நண்பர்களுக்காக வருத்தப்பட் டார். அவர் நின்ற நிலையிலேயே அந்த பாம்பைக் கொல்ல முடியும்.  ஆனால், மனுஷ ஜென்மாவாக பூமிக்கு வந்திருக்கிறாரே, அந்த எல்லையை அவ்வப்போது அவர் கடை பிடிக்க த்தான் செய்வார். தன் நண்பர்கள் சென்ற அதே வாய்க்குள் புகுந்து விட்டார். 

சதிகார பாம்பு வாயை மூடிவிட்டது வானத்து தேவர்களே இதைக்கண்டு கலங்கிவிட்டனர். கிருஷ்ணர் இல்லாவிட்டால் தங்கள் கதி என்னாவது என்று.. வயிற்றுக்குள் இருந்த நண்பர்களும் அலறினர். கிருஷ்ணர் அவர்க ளை தன் கருணைப் பார்வையால் அமைதிப்ப டுத்தினார். பெரிதாக்கிக் கொண்டே இருந்தார். 

அகாசுரப்பாம்புக்கு மூச்சடைத்தது. அதன் வயிறு கிழிந்தது. வலி தாளாமல் வாயைப் பிளந்தது. கிருஷ்ணரும், தோழர்களும் தப்பி வந்து விட்டனர். வயிறு கிழிந்த பாம்பு இறந்த து. கிருஷ்ணரின் பாதம்பட்ட காரணத்தால், அதன் உயிரொளி அவரிடமே கலந்தது. நண்பர்களைக் காத்த கண்ணன், தன்னைக் கொல்ல வந்தவனுக்கும் முக்தி கொடுத்தார்.

ஒரு சமயம் கிருஷ்ணர், யமுனை நதிக்கரை க்கு தனித்துச் சென்றார். அன்று பலராமன் உடன் வரவில்லை. அந்த ஆற்றில் காளிங்கன் என்ற நாகம் வசித்தது. அதற்கு நூறு தலைகள். அந்தக் கொடிய நச்சுப்பாம்பு, தன் விஷத்தை தண்ணீரில் பரப்பியது. கரைகளில் நின்ற பெரும்பாலான மரங்கள் அதன் விஷக் காற்று பட்டு கருகிவிட்டன. 

காளிங்களின் இந்தப் போக்கு கிருஷ்ணருக்கு கோபத்தைத் தந்தது. ஆனாலும், கரையில் ஒரே ஒரு மரம் மட்டும் பச்சை பசேலென கிளை களுடன் உயரமாக நின்றது. இந்த மரத்தில் கிருஷ்ணர் பிற்காலத்தில் ஏறுவார் எனத்தெ ரிந்து, கருடபகவான் அதன் மீது அமிர்தத்தை தெளித்து வைத்திருந்தாராம். அதனால் அது அழியவில்லை. அந்த மரத்தின் மீதேறிய கிருஷ்ணர் தண்ணீரில் குதித்தார். 

தண்ணீர் சிதறியது. அப்போது ஏற்பட்ட நீரலை கள், பல மிக்க காளிங்கனையே அசைத்தது. அது அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. யாரோ ஒரு சிறுவன் தண்ணீரில் குதித்து தன்னை இம்சை செய்ததைக் கண்ட காளிங்க ன், ஆத்திரத்துடன் கிருஷ்ணரை நோக்கி வந்தான். கிருஷ்ணரின் அழகு அவனைக் கவர்ந்து விட்டது. அப்படியே அதிசயித்து பார்த்தான். இருப்பினும், தன் ஆக்ரோஷத்தை காட்டி அவரை வளைத்தான். கிருஷ்ணர் தன் பலத்தைப் பிரயோகித்து விடுபட்டு, அவனது தலையில் ஏறி நர்த்தனமாடினார். 

அப்போது, அவரது பாதங்களின் வலிமையை உணர்ந்தான் காளிங்கன். ஆட்டத்தின் ஒவ்வொரு அசைவும் தாங்க முடியாத வலியை த் தர, ஒவ்வொரு தலையாக உயர்த்தி தாக்குப் பிடித்தான். ஒரு கட்டத்தில் வலி தாளாமல் மரண ஓலமிடத் துவங்கினான். அப்போது, காளிங்கனின் பத்தினியர் அவர் பகவான் நாராயணின் அவதாரம் என்பதைத் தெரிந்து ஓடி வந்தனர். 

இங்கே இப்படி இருக்க, கரையில் நின்ற நண்ப ர்கள், கிருஷ்ணர் நீரில் குதித்து காளிங்கனா ல் இழுத்துச் செல்லப்பட்டதை அறிந்து, யசோதையிடம் தகவல் சொன்னார்கள். அவள் பதறியடித்து வந்தாள். பலராமனுக்கு தெரியும், காளிங்கனின் கதை முடிந்து விடுமென்று. எனவே, அவன் பதட்டமின்றி வந்தான். யாசோதை தண்ணீரில் குதிக்க முயன்றாள். என் மகனை இழுத்திச் சென்ற அந்த பாம்பு என்னையும் இழுத்துச் செல்லட்டும், என்றாள். யசோதயை கரையில் நின்ற கோபியர்கள் பிடித்து இழுத்து வந்தனர். அவள் மூர்ச்சையா கி விட்டாள். 

காளிங்கனின் பத்தினிகள், கிருஷ்ணரிடம் சென்றனர்.

மகாபிரபு, உமது சக்தியை அறியாமல் எங்கள து கணவர் உம்மிடம் தவறு செய்து விட்டார். அவரை ரட்சிக்க வேண்டும். எங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தர வேண்டும், என்றனர். கிருஷ்ணர் அதை ஏற்றார். காளிங்கன் அவரை தன் தலையில் உயர்த்தி நீர்மட்டத்துக்கு மேலே கொண்டு வந்து விட்டது. கிருஷ்ணர் கரைக்கு வந்த பின்னர் தான் எல்லாருக்கும் உயிர் வந்தது. காளிங்கனின் பத்தினியர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். 

காளிங்கன் அவரிடம், முன்வினைப்பட்டது. நான் கொடுத்து வைத்தவன். கடிப்பதும், சீறுவ தும் எனது இயற்கை குணம். அது உம்மால் தரப்பட்டது. அதை உம்மால் தான் மாற்ற முடியு ம். எனவே நான் சீறியது குறித்து கவலை ப்பட வில்லை. இருப்பினும், மகாபிரபு தண்டிக்க நினைத்தாலும் அதையே ஏற்கிறேன்  என்றது பணிவுடன். 

உடனே கிருஷ்ணர், காளிங்கா, நீ உனது மனைவி, குழந்தை மற்ற சகாக்களுடன் கடலு க்கு போய்விடு. யமுனையை அசுத்தப்படுத்தா தே. பசுக்களும், சிறுவர்களும் அதை குடிக்கி றார்கள். அதில் விஷத்தன்மை ஏற்படுவதை அனுமதிக்கமாட்டேன். நீ கருடனுக்கு பயந்தே இங்கு வந்தாய். இப்போது, நான் நடனமாடியா தால் ஏற்பட்ட குறிகள் உன் தலையில் உள்ளன. இதைப் பார்க்கும் கருடன் உன்னை ஏதும் செய்யமாட்டான், என்றார். 

காளிங்கனும் அதை ஏற்று, கடல்நோக்கி போய் விட்டது. கோகுலமக்கள் நிம்மதி பெற்றனர். கிருஷ்ணரின் உறுதியான மனம், வீரம், அலங் காரம் ஆகியவை கோபியர்களை பெரிதும் கவர்ந்திருந்து. பல சிறுமிகள் கிருஷ்ணன் தனக்கும் கணவனாக மாட்டானா என எண்ணத் துவங்கினர். அவரது புல்லாங்குழல் இசையால் ஈர்க்கப்படும் அவர்கள் தங்களை மறந்து நிற்பார்கள். 

சில சமயங்களில் அவர்களது ஆடைகள் விலகியோ, நெகிழ்ந்தோ இருக்கும். ஆனால், இசையிலும் கிருஷ்ணரின் அழகிலும் லயித்து போகும் அவர்கள் இவ்வாறு ஆடை நெகிழ்ந்த து கூட தெரியாமல் அவரையே கண்கொட்டா மல் பார்த்து கொண்டிருப்பார்கள். 

அப்பகுதியில் வசித்த பழங்குடி இனப்பெண்க ளும் கிருஷ்ணரை காதலித்தனர்.  கிருஷ்ணர் நடந்து செல்லும்போது, அவரது திருவடிப்பட்டு மண் சிவந்து போகும். அந்த சிவந்தமண்னை எடுத்து குழைத்து தங்கள் மார்பிலும், முகத்திலும் பூசிக்கொள்வார்கள் பழங்குடிப் பெண்கள். 

அவர்களுக்கு ஏற்கனவே காதலர்களே கணவர்களோ உண்டு. இருப்பினும் அவர்கள் தொட்டால் தீராத காம இச்சை, கிருஷ்ணரின் காலடிபட்ட மண்ணை எடுத்து மார்பில் தடவி னால் அடங்கிப்போகும். இது தவறில்லையா ? பெண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உணர் வுடன் வாழ வேண்டாமா ? என கேட்பீர்கள். 

அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உணர்வு டன் தான் வாழ்ந்தார்கள், ஆனாலும், காமம் குறையவில்லை. கிருஷ்ணரின் காலடி பட்டமண் உடலில் பட்டதும் காமஇச்சை தீர்ந்து விடுகிறது. அதாவது, காமம் மிகுந்தவர்கள் பகவான் கிருஷ்ணரின் பாதங்களில் சரணடைந்தால் போதும். காமம் என்ற பேய் உடலில் இருந்து பறந்து விடும் என்பதே இதன் தாத்பர்யம். மேலும், கோபியர் கிருஷ்ணரின் நினைவிலேயே மூழ்கிக்கிடந்தனர். 

கடவுளின் நினைப்பில் மூழ்கிக் கிடப்பது எவ்வகையிலும் தவறாகாது. இப்போதும், இது தொடரத்தான் செய்கிறது. திருமணத்துக்கு முன்னும், பிறகும் நம் பெண்கள் சிவனையோ, திருமாலையோ, முருகனையோ உள்ளன்போ டு வணங்கத்தான் செய்கிறார்கள். அது பக்தி என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறதே தவிர, ஒரு ஆணுடன் கொண்ட உறவாகக் கொள்ளப் படாது. காமம் என்ற உணர்வு கிருஷ்ணனை நினைத்தாலே போய்விடும். காமம் நீங்கிவிட் டால் உலகில் பிறப்புகளே இருக்காதே. மீண்டும் பிறக்கக்கூடாது. கிருஷ்ணனுடன் கலந்திருக்க வேண்டும் என்பதே கோபிகிருஷ ண காதல் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது.

கிருஷ்ணர் யமுனையில் அதிகாலையில் குளிக்கும் பெண்களின் பின்னால் செல்வார். ஒரு மரத்தின் மீது அமர்ந்து கொள்வார். கோபி யர், தங்கள் ஆடைகளை முழுமையாகக் களை ந்து விட்டு, ஆற்றில் இறங்கி நீராடினார்கள். கோபியர் கரையில் கழற்றி வைத்திருந்த ஆடையை எடுத்து மரப்பொந்தில் ஒளித்து வைத்தார் கிருஷ்ணர். கரைக்கு வந்த கோபியர் ஆடையைக் காணாமல் தவித்தனர். எப்படி வீட்டுக்குச் செல்வது என தவித்த வேளையில், உங்கள் ஆடைகள் என்னிடம் உள்ளன என மரத்தின் மீதிருந்து குரல் கேட்டது. 

கோபியர் நிமிர்ந்து பார்த்தனர். மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த கிருஷ்ணரை கண்டு வெட்கப்பட்டனர். கண்ணா, பெண்கள் குளிக்கும் இடத்தில் உனக்கு என்ன வேலை ? போதாக்குறைக்கு எங்கள் ஆடைகளையும் கவர்ந்து கொண்டாய். இப்போது, நாங்கள் எப்படி மேலே வருவது ? என்றாள். கிருஷ்ணர் கலகலவென சிரித்தபடியே, நானாகவே இந்து வந்தேன். நீங்கள் என்னை மனதில் நினைத்தீ ர்கள், என்னைப் பற்றி பாடினீர்கள். என்னை யே அடைய வேண்டுமென மனதார வேண்டி னீர்கள். அது எனக்கு கேட்டது வந்தேன் என்றார். இது நிஜம் தானே. கோபிகைகளால் அவருக்கு பதிலளிக்க முடியவில்லை. 

இருந்தாலும் உடைகளைப் பெறும் பொருட்டு, அதற்காக, நாங்கள் ஆடைகளை எப்படி மேலே வந்து பெற முடியும். நீயாக கீழே வைத்து விட்டு போய்விடு என்றனர். கோபியரே, ஒரு பெண் கணவனைத்தவிர பிறர் முன்னிலை யில் ஆடையின்றி இருக்கலாகாது. நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென துர்க்கையை வழிபட்டு விரதம் இருந்தீர்கள். உங்கள் கணவனாகிய என் முன்னால் வருவதற்கு என்ன வெட்கம் ? வாருங்கள். வந்து பெற்றுக் கொள்ளுங்கள், என்றார். அவர்கள் தயங்கவே, பெண்களே,  ஆடையின்றி தண்ணீரில் இறங்குவது குற்றம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் செயலால் வருணன் கோபமடைந்துள்ளான். 

எனவே, நீங்கள் வருணனை நினைத்து மன தார வணங்கி, இனி இவ்வாறு ஆடையின்றி குளிக்கமாட்டோம். எனச் சொல்லி அவனிடம் மன்னிப்பு கேளுங்கள். பிறகு மேலே வந்து ஆடையைப் பெற்றுக் கொள்ளுங்கள், என்றான். இப்படி கிருஷ்ணரின் லீலைகள் தொடர்ந்து கொண்டிருக்க நாரத முனிவர் கம்சனை அழிப்பதற்குரிய காலம் நெருங்கி விட்டதை அறிந்தார். அவர் நேராக கம்சனிடம் சென்றார். 

கம்சா, சவுக்கியமாக இருக்கிறாயா ? உன் சவுக்கியம் நீண்டு நீடிக்க வேண்டும் என்ற ஆசையில் நான் இங்கே வந்திருக்கிறேன். ஆனால், நீயோ, உன்னை அழிக்கப்போகும் கிருஷ்ணனும், பலராமனும் பெரியவர்களாக வளர்ந்து விட்டதை அறியாமாலேயே இருக்கி றாய். அவர்களை சீக்கிரம் கொன்றுவிடு. இல்லாவிட்டால், உன் அழிவை யாராலும் தடுக்க இயலாமல் போய்விடும் நீ சுதாரிப்பாக இருக்க வேண்டும் என்பதாலும், உன்மீது நான் அக்கறை கொண்டவன் என்பதாலும் சொல்கிறேன். 

உன்மீது ஏமாற்றிய வசுதேவரையும், நந்தகோ பனையும் விட்டுவிடாதே, என்றார். கம்சனும் அவரது கருத்தை ஆமோதித்து, வேண்டிய ஏற்பாடுகளை உடனடியாகச் செய்வதாகச் சொன்னான். நாரதர் தன் கடமை முடிந்த திருப்தியுடன் சென்றார்.

கம்சன் கிருஷ்ணரைக் கொல்வதற்குரிய ஏற்பாடுகளைத் துவங்கினான். சிவசக்தியான காலபைரவருக்கு மிருகபலி கொடுத்தான். சில யாகங்களையும் செய்தான். கிருஷ்ணர் வளர்ந்து கொண்டிருக்கும் யது வம்சத்தைச் சேர்ந்த அக்ரூரர் என்பவரை அழைத்து, அன்பு நண்பரே, விருந்தாவனத்தில் வசிக்கும் கிருஷ்ணர், பலராமன், வசுதேவர், நந்கோபர், எனது தங்கை தேவகி, எனது தந்தை உக்கிர சேனன், சித்தப்பா தேவகன் ஆகியோரைக் கொல்லப் போகிறேன். 

எனது அரசியல் காரியங்களில், என் தந்தை தலையிடுவதால், அவரையும் கொல்ல வேண்டியுள்ளது. எதிரிகளே இல்லாத நிலை யில் இவ்வுலகை சிரமமின்றி ஆள்வேன். எனக்கு என் மாமனார் ஜராசந்தன், துவிவிதா என்ற குரங்கு அரசன், சம்பரன், நரகாசுரன், பாணாசுரன் என்ற எனது நண்பர்கள் உதவுவர் நீங்களும் உதவ வேண்டும், என்றான். 

அக்ரூரர் அவன் சொல்வதைக் கேட்டு, எம்மாதி ரியான உதவி என்றார். அக்ரூரரே,  கிருஷ்ண பலராமர்களை இங்கே ஒரு மல்யுத்தப் போட்டி நடப்பதாகச் சொல்லி, அழைத்து வாருங்கள். அவர்கள் வரும் வழியில் குவலயாபீடம் என்ற யானையை அவிழ்த்து விடுவேன். அது அவர்க ளைக் கொல்லும். ஒருவேளை தப்பிவிட்டால், எனது மல்யுத்த வீரர்கள் கொல்வார்கள், என்றான். அக்ரூரர் கிருஷ்ணரின் பக்தர். அவருக்கு கம்சன் சொன்னது பிடிக்கவில்லை. 

இருப்பினும், கம்சனே, உன் நண்பன் என்ற முறையில் சொல்கிறேன். திட்டம் தீட்டுவது மனித அறிவு. அதை வெற்றி பெற செய்பவன் இறைவனே, ஒருவேளை இவ்விஷயத்தில் நீ தோற்றுப்போகலாம். நல்லதைச் சொல்லவே ண்டியது நண்பனின் கடமை என்பதால் சொன்னேன். இருப்பினும், உனக்காக கிருஷ்ணரிடம் சென்று அவரை அழைத்து வருகிறேன், என்றார். 

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்...

கிருஷ்ண அவதாரம் பாகம் 3  தொடரும்...

ரவீந்தர் கௌஷிக்

இன்றும் இந்திய உளவுத்துறையில் இருப்பவர்களுக்கு இவர் தான் தங்களுடைய ஆதர்ஷ நாயகன்..இன்னும் சொல்லப்போனால் இன்று வரை இவரை மிஞ்சிய ஒரு spy இல்லை ...